உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




விருத்தாசலம் நகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருத்தாசலம் நகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 25, 2012

விருத்தாசலம் நகராட்சியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்

விருத்தாசலம்:

விருத்தாசலம் நகராட்சி சார்பில் நடந்த வேலை வாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி முகாமில் 329 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விருத்தாசலம் நகராட்சி பொன்விழா ஆண்டை முன்னிட்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்இரு தினங்கள் நடந்தது. சேர்மன் அரங்கநாதன் தலைமை தாங்கி, பூர்த்திசெய்த வேலை வாய்ப்பு விண்ணப்பங்களை பெற்றார். துணை சேர்மன் சந்திரகுமார் முன்னிலை வகித்தார். கமிஷனர் (பொறுப்பு) மணிவண்ணன் வரவேற்றார்.முத்துக்குமார் எம்.எல்.ஏ., வேலை வாய்ப்பு முகாமை பார்வையிட்டு, பங்கேற்ற நிறுவனங்களின்விவரம் கேட்டறிந்தார். சி.எஸ்.சி., பிரைமெண்டஸ், ஏசிடி இன்டர்நேஷனல் கம்ப்யூட்டர் நிறுவனங் கள், அபிராமி மற்றும் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., ஆகிய நிறுவனங்கள் பங்கு பெற் றன. இரண்டு நாள் முகாமில் 329 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.






Read more »

செவ்வாய், மே 08, 2012

விருத்தாசலம் ரயில்வே ஊழியர்களுக்கான திருமண மண்டபம் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்

விருத்தாசலம்:

விருத்தாசலம் ரயில்வே ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய புதிய திருமண மண்டபம் கட்டும் பணி பாதியிலேயே நின்றதால் பல லட்சம் ரூபாய் நிதி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.விருத்தாசலம் ரயில் நிலையம் 1929ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது சென்னை, திருச்சி, சேலம், கடலூர் பகுதிகளுக்குச் செல்லும் முக் கிய சந்திப்பாக உள்ளது. இங்கு பணிபுரியும் ரயில்வே ஊழியர்களின் வசதிக்காக விருத்தாசலம் நகராட்சி 4வது வார்டில் 400க்கும் மேற்பட்ட ரயில்வே குடியிருப்புகள் உள்ளன. இதில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்டோரின் வசதிக்காக குடியிருப்பு வளாகத்தில் மருத்துவமனை, ரேஷன் கடை, திருமண மண்டபம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ரயில்வே நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.மண்டபத்திற்கு ரூ.87 லட்சம் நிதிதிருமண மண்டபத்தில் போதிய இட வசதி இல்லாததால் புதிய மண்டபம் கட்டித்தர வேண்டுமென ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து கூடுதல் வசதியுடன் புதிய திருமண மண்டபம் கட்டித்தர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக கடந்த 2006ல் 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது

.கட்டுமானப் பணி துவங்கியதுஇதற்கான டெண்டர் 2007ம் ஆண்டு விடப்பட்டது. இதில், மணமகன், மணமகள் அறை, முகூர்த்த மேடை, சமையலறை, உணவு அருந்தும் கூடம், பால் கனி, கழிவறை, குளியலறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, மின் மோட்டார் அறை என பல்வேறு கூடுதல் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மண்டபம் கட்டும் பணி, 2008 செப்டம்பர் மாதம் துவங்கியது.பாதியில் பணி நிறுத்தம்போதிய நிதி இல்லாததால் மண்டபம் கட்டும் பணி துவங்கிய சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு ரயில்வே நிர்வாகம் எவ்வித முயற்சியும் எடுக்காததால் மண்டபம் கட்டும் பணி பாதியளவு கூட முடியாமல் நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.தளவாட பொருட்கள் பாழ்அப்போது கட்டுமானப் பணிக்காக கொண்டுவரப்பட்டு இருப்பில் வைக்கப்பட்ட 50 மூட்டை சிமென்ட் மூட்டைகள் மழை, காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் வீணாகி பயன்படுத்த முடியாத நிலையில் கட்டிகளாக மாறியுள்ளது.

  மேலும், கதவுகள், ஜன்னல்கள் அமைக்க கொண்டு வரப்பட்ட மரச் சட்டங்களும் பயன்படுத்தப்படாமல் பாழாகி வருகிறது.சமூக விரோதிகள் கூடாரமானதுகட்டுமான பணி நின்று ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதால் ரயில்வே பாதியளவு கட்டப்பட்ட திருமண மண்டபம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. குடிமகன்கள் அதனை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருவதால் மண்டபம் முழுவதும் மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் குவிந்து கிடக்கின்றன.வருவாய் இழப்புபுதிய திருமண மண்டப கட்டுமான  பணி பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதால், ரயில்வே நிர்வாகத்தின் பல லட்சம் நிதி வீணாகி வருகிறது.இதனால் ரயில்வே ஊழியர்கள் விசேஷங்கள் நடத்த தனியார் மண்டபங்களைத் தேடி அலைவதுடன், கூடுதல் வாடகை செலுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகத்திற்கு கிடைக்கக் வேண்டிய வருவாய் தனியாருக்குச் செல்கிறது. எனவே, ரயில்வே ஊழியர்கள் நலன் கருதி, ரயில்வே நிர்வாகம் பாதியில் நின்று போன திருமண மண்டபம் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
























Read more »

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

விருத்தாசலம் நகராட்சித் துணைத் தலைவராக சந்திரகுமார் பதவி ஏற்பு

விருத்தாசலம்:

        விருத்தாசலம் நகராட்சித் துணைத் தலைவராக சந்திரகுமார் சனிக்கிழமை பதவியேற்றார். விருத்தாசலம் நகர்மன்றத் துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சந்திரகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், 1998-ம் ஆண்டு முதல் கட்சியில் உள்ளார். இப்போது நகர ஜெயலலிதா பேரவை செயலராக உள்ளார். இவருக்கு பொன்முடி என்ற மனைவியும், அகில்சந்திரன், சந்திரசேகரன் என்ற மகன்களும், சந்திரலேகா என்ற மகளும் உள்ளனர்.













Read more »

சனி, அக்டோபர் 22, 2011

விருத்தாசலம் நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் ஆர்.டி.அரங்கநாதன் வெற்றி

விருத்தாசலம் நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் ஆர்.டி.அரங்கநாதன்  வெற்றி


District Name:  CUDDALORE     MunicipalityName:  VRIDHACHALAM
Sl.No Name Party Name Votes Secured Status
1 அய்யாவு பெ. MDMK 725 Deposit Lost
2 அரங்கநாதன் ஆர்.டி. AIADMK 13857 Elected
3 ஆனந்தகோபால் ஆர். DMDK 4131 Deposit Lost
4 கார்த்திகேயன் பி. BJP 224 Deposit Lost
5 தட்சிணாமூர்த்தி வை. DMK 9230 NotElected
6 தனவேல் ஜி. Others 332 Deposit Lost
7 பக்கிரிசாமி வி. INC 1292 Deposit Lost
8 முருகன் வ.க. PMK 2731 Deposit Lost
9 ராஜாமுகம்மது கா. VCK 813 Deposit Lost
10 ஹரிதாஸ்பாபு பி. Others 243 Deposit Lost











Read more »

செவ்வாய், அக்டோபர் 18, 2011

விருத்தாசலம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் விவரம்

விருத்தாசலம்:

 கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் திங்கள்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில்,  பதிவான வாக்குகள் விவரம்.

விருத்தாசலம் நகரம்: 
பதிவான வாக்குகள்-

ஆண்கள் 14,936,
பெண்கள் 17,030, 
மொத்த சதவீதம் 74.98.

விருத்தாசலம் ஒன்றியம்: 

பதிவான வாக்குகள்- 

ஆண்கள் 30,431, 
பெண்கள் 29,218, 
சதவீதம் 76.

மங்கலம்பேட்டை பேரூராட்சி: 

பதிவான வாக்குகள்- 4461,
சதவீதம் 80.47.

பெண்ணாடம் பேரூராட்சி: 

பதிவான வாக்குகள்- 9920. 
சதவீதம் 78.

நல்லூர் ஒன்றியம்: 

சதவீதம்- 70.

மங்களூர் ஒன்றியம்: 

சதவீதம்- 69.


Read more »

வெள்ளி, அக்டோபர் 14, 2011

விருத்தாசலத்தில் சுயேச்சை வேட்பாளர் கார் உடைப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/86b64312-6334-4a28-95e0-d3ffaeb67fd1_S_secvpf.gif
 
விருத்தாசலம்:

         விருத்தாசலத்தில் நள்ளிரவில் சுயேச்சை வேட்பாளரின் காரை உடைத்து நொறுக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.    விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் வசித்து வருபவர் முகமது ஆசாத் (வயது 47). இவர் விருத்தாசலம் நகரசபை 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.    

            நேற்று இரவு இவர் வழக்கம் போல் வீட்டின் அருகே தனது காரை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் அந்த காரை உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில் அந்த கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி சேதமடைந்தது.  அந்த சத்தம் கேட்டு முகமது ஆசாத்தின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கண்விழித்து வீட்டு கதவை திறந்து வெளியே ஓடிவந்தனர். உடனே மர்ம கும்பல் தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றுவிட்டது.  

         இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சுயேச்சை வேட்பாளரின் காரை உடைத்த மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior