உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளக் கட்டுப்பாட்டு அறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளக் கட்டுப்பாட்டு அறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 02, 2010

வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு : விருத்தாசலம் பஸ் நிலையம் தத்தளிப்பு



விருத்தாசலம் : 

               விருத்தாசலம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை பெய்ததால், பஸ் நிலையம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. 

                கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தின் முக்கிய வடிகாலாக 3.5 மீட்டர் அகலம் கொண்ட ஆலடிரோடு ஊத்து ஓடை வழியாக சின்னகண்டியங்குப்பம், எம்.ஆர்.கே., நகர், ஆலடி ரோடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகர் பகுதியின் மழை தண்ணீர் வெளியேறும்.

                  இந்த ஓடை தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, ஒரு அடி அகலம் கொண்ட சிறிய கால்வாயாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் இப்பகுதியிலிருந்து வெளியேறும் தண்ணீர் உள்வாங்காமல் தெருக்களில் வழிந்தோடுகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இடை விடாது பெய்த மழையால், விருத்தாசலம் எம்.ஆர்.கே., நகரில் உள்ள ஏரியும், சின்னகண்டியங்குப்பத்தில் உள்ள ஏரியும் நிரம்பி வழிந்தது. 

                    களுங்கு வழியாக, வெளியேறிய வெள்ளம் வடிகால் வசதி இல்லாததால் எம்.ஆர்.கே., நகர், கருணாநிதி நகர் ஆகிய நகர்களின் தெருக்களின் வழியே ஓடி பஸ் நிலையத்திற்குள் புகுந்து வெள்ளக்காடானது. இதனால் பயணிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

Read more »

ஞாயிறு, நவம்பர் 28, 2010

கடலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

             வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 186.84 மி.மீ. மழை பெய்துள்ளது.நிவாரணப் பணிகளை முடிக்கிவிடுமாறு முதல் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உத்தரவுப்படி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பூதம்பாடி, கல்குணம், மருவாய் சேத்தியாத்தோப்பு, பாழ்வாய்க்கால், வீராணம் ஏரி, திருநாரையூர், வெள்ளியங்கால் ஓடை, கீழவன்னியூர், வீரநத்தம், நெடும்பூர், ஆகிய இடங்களுக்குச் சென்று, மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்டார்.

              நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.கல்குணம் கிராமத்தில் செங்கால் ஓடையில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிட்டார்.குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லப்பன் பேட்டை, ராசாப்பேட்டை அரங்கமங்கலம், கல்குணம் கொளக்குடி, ராசாக்குப்பம் பூதம்பாடி, ஆடூர் அகரம், ரெட்டியார் பேட்டை ஆகிய கிராமங்களில் 5,000 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.மழை வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் காரணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவேலு (75) உயிரிழந்தார். 2 மாடுகள், 4 ஆடுகள், உயிரிழந்துள்ளன. 167 குடிசைகள் பகுதியாகவும்,  57 குடிசைகள் முழுமையாகவும், சேதம் அடைந்துள்ளன.

                 பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வட்ட அளவில் துணை ஆட்சியர்களும், வட்டார அளவில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, வெள்ள நிவாரணப் பணிகளைக் கண்காணிக்குமாறு உத்தவிடப்பட்டு உள்ளது. வெள்ள நிலைமைகளைக் கண்காணிக்க, மாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது என்றார்.

Read more »

சனி, நவம்பர் 27, 2010

கடலூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால், 24 மணி நேரமும் இயங்கும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                கடலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. வெள்ள நிலைமைகளைக் கண்காணிக்க வட்ட அளவில் துணை ஆட்சியர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கடலூர் வட்டத்துக்கு தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) நடராஜன் (செல்ஃபோன் 94434 83094), 

குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு, நெய்வேலி) ராஜேந்திரன் (98423 73444), 

பண்ருட்டி வட்டத்துக்கு மாவட்ட ஆதிதிராவிட நலஅலுவலர் திருவேங்கடம் (98948 21351), 

சிதம்பரம் வட்டத்துக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் கந்தசாமி (94450 00209), 

காட்டுமன்னார்கோவில் வட்டத்துக்கு உதவி ஆணையர் (கலால்) கேசவமூர்த்தி (98424 05631),

விருத்தாசலம் வட்டத்துக்கு சேர்மநல ஆய்வு அலுவலர் பத்மினி (98942 14133), 

திட்டக்குடி வட்டத்துக்கு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் இரா.கணபதி (98427 23080) கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

             மேற்கண்ட அலுவலர்கள் அந்தந்த வட்டத்தில் முகாமிட்டு, வெள்ள நிலைமைகளை கண்காணிக்குமாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் ஒன்றிய அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர்களும், கிராம அளவில் கிராம நிர்வாக அலுவலர்களும், வருவாய் ஆய்வாளர்களும் கிராமங்களில் முகாமிட்டு வெள்ள நிலைமைகளைக் கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

                 மேலும் மாவட்ட அளவில் வெள்ள நிலைமைகளைக் கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் வெள்ளம் தொடர்பான தகல்களை சம்மந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்கோ, மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறைக்கோ தெரிவிக்கலாம்.

                 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறைக்கு, கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04142 220651 என்ற தொலைபேசி எண்ணிலும் தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர். கடலூர் மாவட்டத்தில இதுவரை மழைக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் திட்டக்குடி வட்டம் கோனூர் கிராமத்தைச் சேர்ந்த பரிமளா (20) மின்னல் தாக்கி இறந்ததற்காக, அவரது தந்தை குப்புசாமிக்கு ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

                      மற்றவர்களுக்கு நிவாரணத் தொகை ஏற்கெனவே வழங்கப்பட்டு உள்ளது. மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் முதல்வரால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை வந்ததும், மேற்கொண்டு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior