உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வேலைவாய்ப்பு முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைவாய்ப்பு முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 03, 2012

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு: மே 4 கடைசி

கடலூர்: பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ள (ஏப்ரல் 2012) மாணவ, மாணவிகளின் வேலைவாய்ப்புப் பதிவை ஆன்லைனில் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளுக்கிணங்க ஏப்ரல் 2012 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர்களின் வேலைவாய்ப்புப் பதிவை ஆன்லைனில் மே 4-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவித்துள்ளது. வேலைவாய்ப்புப் பதிவை செய்ய மாணவர்கள் ஜாதிச் சான்று, விலாசம் (ரேஷன் கார்டு), ரேஷன் கார்டு எண், ஜாதிச் சான்று எண் உள்ளிட்ட விவரங்களை அந்தந்தப் பள்ளியில் அளித்து மாணவர்கள் தங்கள் வேலைவாய்ப்புப் பதிவை செய்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்






http://tnvelaivaaippu.gov.in/Empower/  


















Read more »

வியாழன், செப்டம்பர் 22, 2011

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செப்டெம்பர் 25ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூர்:

          கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

        தமிழகத்தில் தனியார் முன்னணி நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்கள் நிரப்பப்படவுள்ளனர். அதையொட்டி வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 

பங்கேற்கும் நிறுவனங்களும், ஊதிய விவரமும்:

ஜெ.கே., டயர் - 
சிவில் மற்றும் கம்ப்யூட்டர் தவிர அனைத்து டிப்ளமோ இன் இன்ஜினியரிங், வயது 18 முதல் 22 வரை இருக்க வேண்டும். 
மாத ஊதியம் 7,500 ரூபாய்.

செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை, 

10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி
வயது 18 - 20, 
உதவித்தொகை மாதம் 5,000 ரூபாய். 

டாடா நிறுவனம்

12ம் வகுப்பு தேர்ச்சி,
வயது 18 - 20 வரை, 
மாதம் 6,900 ரூபாய். 

ஏர்டெல் நிறுவனத்தில் 

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக், 
வயது 18 - 35,
கல்வித் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். 
குறைந்த பட்சம் மாதம் 7,000 ரூபாய்.

ஐ.எஸ்.எஸ்.எஸ்.டி.பி., 

செக்யூரிட்டி சர்வீஸ்,
அனைத்து கல்வித் தகுதிகளும்,
வயது வரம்பு இல்லை. 
கல்வித்தகுதிக் கேற்ற ஊதியம். 
குறைந்தபட்சம் 7,195 ரூபாய்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.














Read more »

சனி, ஆகஸ்ட் 13, 2011

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

குறிஞ்சிப்பாடி : 

             குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. நிர்வாக குழுத்தலைவர் சட்டநாதன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். முகாமில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மற்றும் படிப்பை முடித்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனி 14 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கியது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சேரமான், வணிகவியல் துறைத் தலைவர் சிவசங்கரன், பேராசிரியர் தினேஷ்பாபு செய்திருந்தனர்.



Read more »

வியாழன், ஜூலை 28, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரம்:

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

                முகாமில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.  இம்முகாமில், ஹெச்.சி.எல்., நாகார்ஜுனா ஆயில் கார்பரேஷன், ஐ.எஃப்.எஸ்.எல். லிமிடெட், டெக்னோபீஸ் கார்பரேஷன், இ.டி.ஏ. லிமிடெட், சீனாவைச் சேர்ந்த ஃபோகவுன் இன்டர்நேஷனல், சிங்கப்பூரைச் சேர்ந்த ரோட்டரி என்ஜினீயரிங், மலேசியாவைச் சேர்ந்த விகோசி நிறுவனம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று திறமையான மாணவ, மாணவியர்களை தங்களது நிறுவனத்தில் பணிபுரிவதற்காக தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கியது. 

                தேர்வு செய்யப்பட்டவருக்கு குறைந்தபட்சமாக மாத சம்பளமாக ரூ. 30 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 74 ஆயிரம் வரை வழங்கப்படும்.  பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன் ஆகியோர் வழிகாட்டுதல் மற்றும் முயற்சியில் பேரில் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு பல்கலைக்கழகம் தொடர் சாதனையை பெற்றுள்ளது. 

               பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.  இந்தியா முழுவதிலிருமிருந்து பல்வேறு துறையின் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் அனைவருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது, மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது என பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் துறை தலைவர் முனைவர் கே.ரகுகாந்தன் தெரிவித்தார்.







Read more »

வியாழன், ஜனவரி 06, 2011

கடலூர் மாவட்டத்தில் தொழில் திறன் பயிற்சியளித்து வேலைவாய்ப்பு இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 
 
          கடலூர் மாவட்டத்தில் தொழில் திறன் பயிற்சியளித்து வேலைவாய்ப்பு வழங்க இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 
              தொழில் திறன் பயிற்சி பெற 18 முதல் 35 வதுக்குட்பட்ட இளைஞர்களிடமிருந்து நாளொன்றுக்கு 25 ரூபாய் ஊக்கத் தொகையுடன் வெல்டர், எலக்ட்ரீஷியன், ஸ்டீல் பிட்டர், ஆட்டோ மொபைல் மெக்கானிக், ஏ.சி.ரெப்ரிஜிரேஷன் போன்ற பயிற்சிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
             தற்போது வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்படும் விருத்தாசலம், நல்லூர், மங்களூர், காட்டுமன்னார்கோவில் ஆகிய ஒன்றியங்களிலிருந்து விண்ணப்பிக்கத் தேவையில்லை. மற்ற ஒன்றியங்களில் தகுதி வாய்ந்த இளைஞர்கள், மகளிரிடமிருந்து முகவரி, கல்வித்தகுதி, வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச்சான்று, புகைப்படம் போன்ற தகவல்களுடன் பயிற்சி பெற விரும்பும் தொழிலையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.
 
           கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வேலைவாய்ப்புடன் இணைந்த தொழில் திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்கிட பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.போதியளவு கட்டமைப்பு, வசதியுள்ள நிறுவனங்கள், முக்கூட்டு ஒப்பந்தம், வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனம், நிதி வழங்கும் நிறுவனம், 
 
பயிற்சி அளிக்க விருப்பமுள்ள நிறுவனங்கள் 
 
திட்ட அலுவலர், 
மகளிர் திட்டம், 
71 சீத்தாராம் நகர், 
புதுப்பாளையம் மெயின்ரோடு, 
கடலூர். 
 
             என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வெள்ளி, டிசம்பர் 03, 2010

10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோரும் உதவித் தொகை பெறுவது எப்படி?

                பத்தாம் வகுப்பு (பள்ளி இறுதி) தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகையை எப்படி பெறுவது என்ற  விளக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: 

               9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பின்னர் 10-ம் வகுப்பு இறுதித் தேர்வில் கலந்து கொண்டு தோல்வி அடைந்தவர்களாக இருந்தாலும், கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் உயிர்ப் பதிவேட்டில் காத்திருப்பவராக இருத்தல் அவசியம்.இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதி திராவிடர், பழங்குடியினர் பயனாளிகளைப் பெறுத்தவரை அதிகபட்ச வயது வரம்பு 45. இதர வகை பயனாளிகளுக்கு வயது வரம்பு 40. பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

                அரசு நிறுவனங்களிலோ அல்லது எந்தவொரு தனியார் நிறுவனங்களிலோ பணிபுரிபவராக பயனாளி இருக்கக் கூடாது. சுய தொழிலிலும் ஈடுபடக் கூடாது.பயனாளி பள்ளி அல்லது கல்லூரியில் பயிலும் முழு நேர மாணவராக இருக்கக் கூடாது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருப்பது அவசியம். அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் பயனாளி தனது சேமிப்புக் கணக்கை பராமரித்து வர வேண்டும். 

                     அந்தக் கணக்கில் ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் உதவித் தொகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 100 வீதம் உதவித் தொகையாக 3 ஆண்டுகளுக்கு, இதர நிபந்தனைகளுக்கு உள்பட்டு நிதியுதவி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகள், பள்ளியிறுதித் தேர்வு தேர்ச்சி பெறாத பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனைத்து சான்றிதழ்களுடன் தொடர்பு கொள்ளும்படி வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior