உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வைத்தியநாத சுவாமி கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைத்தியநாத சுவாமி கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 19, 2010

திட்டக்குடி திருக்குளம் தூர்வாரும் பணி: டி.எஸ்.பி., இளங்கோ துவக்கி வைத்தார்

திட்டக்குடி: 

              திட்டக்குடி திருக்குளம் தூர்வாரும் பணியினை டி.எஸ்.பி., இளங்கோ நேற்று துவக்கி வைத்தார். திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் கோவில் நிர்வாக சீர்கேடு, திருக் குளத்திற்குள் கழிவுநீர் விடுவதால் சுகாதாரம் மற்றும் புனிதத்தன்மை சீர்கேட்டினை கண்டித்து கடந்த மாதம் 24ல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தனர்.

                    இது குறித்து அமைதிக்குழு கூட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்களின் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரினை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்குள் வடிகால் அமைத்து தர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான திருக்குளத்தினை தூர்வாரக் கூடாது என ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பிலிருந்து கோர்ட்டில் இடைக்கால தடை பெறப்பட்டது. இது குறித்து நேற்று முன் தினம் தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., இளங்கோ, ஆக்கிரமிப்பாளர்கள் இணைந்து கலந்து ஆலோசனை நடத்தினர்.

                           இதில் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே திருக்குளத்தினை தூர்வாரிட முன் வந்தனர். இதனையேற்ற அதிகாரிகள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் தூர்வாரும் பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் (பொறுப்பு), சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் திருக்குளம் தூர்வாரும் பணி துவங்கியது. குளக்கரையில் சிறப்பு பூஜை செய்து, டி.எஸ்.பி., இளங்கோ திருக் குளத்தில் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்து, பணியினை விரைந்து முடிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Read more »

செவ்வாய், மார்ச் 02, 2010

வைத்தியநாத சுவாமி கோவிலில் குத்துவிளக்கு பூஜை


திட்டக்குடி : 

                திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலில் மாசிமக மகா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு குத்துவிளக்கு பூஜை மற்றும் 210 சித்தர்களுக்கான சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.
 
               கோவில் கும்பாபிஷேக திருப்பணி விரைவில் நடைபெறவும், உலக அமைதி, மனித நேயம், இயற்கை வளம், மத நல்லிணக்கம் வேண்டி 160 சுமங்கலி மற்றும் இளம் பெண்கள் இணைந்து சிறப்பு குத்துவிளக்கு பூஜை செய்தனர். இதனை மாதாஜி ரோகினி ராஜ்குமார் துவக்கி வைத்தார்.பெரம்பலூர் சித்தர் ராஜ்குமார் குருஜி பக்தர்களுக்கு வேள்வி பூஜையுடன், ஆன்மிக உபதேசமும், சித்தர்கள் பூஜையை நடத்தி வைத்தார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் யோகா மாஸ்டர்கள் ரஷ்யா ஹலேக், மாஸ்கோ உல்டி கலந்து கொண்டு வைத்தியநாத சுவாமியை வழிபட்டனர். விழாவில் தொழிலதிபர் ராஜன், பேரூராட்சி தலைவர் மன்னன், துணைத்தலைவர் கமலி, திருப்பணிக்குழு கிருஷ் ணன், சிவக்குமார், வேணுகோபால், பாலகிருஷ் ணன், இந்து முன்னணி நகர தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

வெள்ளி, பிப்ரவரி 26, 2010

சிவனடியார்கள் அறிவித்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

திட்டக்குடி : 

                  திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் முன்பாக சிவனடியார்கள் அறிவித்த சாகும்வரை உண் ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட் டது. திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் கோவில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து 24ம் தேதி கோவில் முன்பாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., இளங்கோ தலைமையில் நேற்று காலை 11.30க்கு கூட்டம் துவங்கியது. இதில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், பேரூராட்சி தலைவர் மன்னன், இந்து முன்னணி நகர தலைவர் செந்தில் மற்றும் சிவனடியார்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். ஆனால் திருக்குள ஆக்கிரமிப்பா ளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
 
                     இருப்பினும் டி.எஸ். பி., இளங்கோ அறிவுரையின்படி, ஆக்கிரமிப் பாளர்களின் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரினை குளத்திற்குள் விடாமல் இருக்க, பேரூராட்சி சார்பில் 15 நாட்களுக்குள் கழிவுநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட பின்னர் மார்ச் 15க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் கழிவுநீரினை வடிகாலில் செல்ல தாங்களாகவே உரிய பணியினை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் திருக்குளம் இருப்பதால் குடிநீரில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட் டது. இதனையேற்ற சிவனடியார்கள் கோவில் முன்பாக அறிவித்திருந்த சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.வைத்தியநாத சுவாமி கோவில் முன் பாக சிவனடியார்கள் அறிவித்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட் டது.திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் கோவில் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து 24ம் தேதி கோவில் முன்பாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. தாசில்தார் கண்ணன், டி.எஸ்.பி., இளங்கோ தலைமையில் நேற்று காலை 11.30க்கு கூட்டம் துவங்கியது. இதில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், பேரூராட்சி தலைவர் மன்னன், இந்து முன்னணி நகர தலைவர் செந்தில் மற்றும் சிவனடியார்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். ஆனால் திருக்குள ஆக்கிரமிப்பா ளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.
 
                        இருப்பினும் டி.எஸ். பி., இளங்கோ அறிவுரையின்படி, ஆக்கிரமிப்பாளர்களின் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரினை குளத்திற்குள் விடாமல் இருக்க, பேரூராட்சி சார்பில் 15 நாட்களுக்குள் கழிவுநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட பின்னர்  மார்ச் 15க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் கழிவுநீரினை வடிகாலில் செல்ல தாங்களாகவே உரிய பணியினை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் திருக்குளம் இருப்பதால் குடிநீரில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதனையேற்ற சிவனடியார்கள் கோவில் முன்பாக அறிவித்திருந்த சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

Read more »

சனி, பிப்ரவரி 20, 2010

வைத்தியநாதசுவாமி கோவிலில் 208 சித்தர்களின் சிறப்பு யாக பூஜை

திட்டக்குடி : 

                          திட்டக்குடியில் வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகள் துரிதமாக நடைபெறவும், உலக நன்மை வேண்டியும் 208 சித்தர்களின் சிறப்பு யாகபூஜை இன்று நடக்கிறது. திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் நடைபெற வேண்டியும், திருக்குளம் சீரமைவும், இயற்கை வளம், மனித நேயம், மத நல்லிணக்கம், மாணவர்களின் கல்வி நலன், மழை, வியாபார அபிவிருத்தி வேண்டி 208 கலச பூஜை, கோ பூஜை, 108 சங்காபிஷேகம், 208 சித்தர்களின் சிறப்பு யாக பூஜை இன்று (20ம் தேதி) நடக்கிறது. கலெக்டர் சீத்தாராமன் தலைமையில், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி., மாசானமுத்து, இணை ஆணையர்கள் தங்கராஜி, ஜெகநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சடையப்பன், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது.
                            பெரம்பலூர் சித்தர் ராஜ்குமார் குருஜி யாகபூஜையை துவக்கி வைக்கிறார்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானத்தை சிவகாமசுந்தரி மாசானமுத்து வழங்குகிறார். தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமையில் பூர்ணாஹூதி நடைபெறுகிறது.

Read more »

அமைதிக்குழு கூட்டம் பாதியில் நின்றது

திட்டக்குடி : 

              திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரிடையே மோதல் சூழ்நிலை உருவானதால் அமைதிக்குழு கூட்டம் பாதியில் நின்றது. திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளத்தை சீரமைக்க வலியுறுத்தி வரும் 24ம் தேதி கோவில் முன்பாக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் அறிவித்தனர். அதனையொட்டி நேற்று காலை 11 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடந்தது. அதில் இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை  இணை ஆணையர் ஜெகநாதன், பேரூராட்சி தலைவர் மன்னன், இந்து முன்னணி நகர தலைவர் செந்தில் மற்றும் திருக்குள ஆக்கிரமிப்பாளர்கள், சிவனடியார்கள் பங்கேற்றனர்.

                     கூட்டத்தில்,திருக்குளம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் சுத்தம் செய்யக் கூடாது எனவும், கலந்து பேசி முடிவெடுக்க மூன்று மாதம் அவகாசம் வேண்டும் என ஒரு தரப்பினர் கூறினர். அதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆக்கிரமிப்பாளர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அமைதிக்குழு கூட்டத்தை ஒத்தி வைப்பதாக தாசில்தார் அறிவித்தார்.  அப்போது சிவனடியார்கள் திட்டமிட்டபடி வரும் 24ம் தேதி சாகும் வரை உண்ணாவிரத போராட் டம் நடைபெறும் என அறிவித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior