உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஸ்ரீமுஷ்ணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீமுஷ்ணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 05, 2012

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் தேரோட்டம்


ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்ற ஸ்ரீபூவராகசுவாமி கோயில் தேரோட்டம்.

சிதம்பரம்:


 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கோயில் தேர் திருவிழா வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக தொடங்கியது. ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபூவராகசுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப். 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா மே 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவ மூர்த்தியான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீயக்ஞவராகசுவாமி திருத்தேரில் எழுந்தருளி தேரோடும் நான்கு வீதிகளில் உலா வந்தார். திரளான பக்தர்கள் தேர்திருவிழாவில் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஆனால் கடை வீதி அருகே வந்தபோது அங்கிருந்த கட்டட முகப்பின் மீது மோதி தேர் நின்றுவிட்டது. சனிக்கிழமை காலை தேரை நிலைக்கு கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தாரின் உதவியுடன் திருத்தேர் அச்சு மற்றும் சக்கரம் பொருத்தப்பட்டு, பழுதுபார்த்து கடந்த ஏப். 25-ம் தேதி திருத்தேர் திருப்பணி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர் நிலைக்கு வருவதில் தடை

தேர் கடைவீதி அருகே வந்தபோது கானூர் செட்டியாருக்கு சொந்தமான கட்டடத்தில் தேரின் மேல்பகுதி இடித்து அதில் சிக்கியது. இதனால் தேர் நிலைக்கு செல்வது தடைபட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளிலிருந்து தேரை நகர்த்தினால் தேரின் மேற்கூரை முற்றிலுமாக சேதமடையும் என்பதால் சனிக்கிழமை காலை தேரை சீரமைத்து நிலைக்கு கொண்டு வர கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் சுவாமியுடன் தேர் அதே இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

















Read more »

வெள்ளி, பிப்ரவரி 03, 2012

ஸ்ரீமுஷ்ணம் வாசவி கப்புள்ஸ் கிளப், நிவேதிதா பதிப்பகம் சார்பில் புத்தக கண்காட்சி

 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_398285.jpg

ஸ்ரீமுஷ்ணம் : 

          எழுத்தாளர்களின் பேனா குனிவதால் சமூகம் தலை நிமிர வேண்டும் என எழுத்தாளர் பிரபஞ்சன் பேசினர். ஸ்ரீமுஷ்ணம் வாசவி கப்புள்ஸ் கிளப், நிவேதிதா பதிப்பகம் சார்பில் புத்தக கண்காட்சி திறப்பு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. வாசவி கிளப் கப்புள்ஸ் தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். நிவேதிதா பதிப்பகம் தேவகி வரவேற்றார். 

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆர்.சி. சம்பத் எழுதிய "அந்த நாள் நினைவுகள்', சபீதா ஜோசப் எழுதிய "வ.உ. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு' ஆகிய புத்தகங்களை வெளியிட்டு பேசியது :
 

         தமிழகத்தில் புத்தக கண்காட்சிகள் நடத்துவது மிகவும் அரிதான விஷயம். நகரின் வளர்ச்சி என்பது கட்டடங்கள், அடிப்படை வசதிகள் வளர்வதில் இல்லை. நகரில் எத்தனை நூலகங்கள், தனியார் நூலகங்கள் வளர்ந்துள்ளன என்பதை பொறுத்து அமையும். இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் குழந்தைகளின் படிப்புக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் நிலை உள்ளது. நகரினை மையமாக வைத்து பள்ளிகளை உருவாக்குகிறார்கள். ஆனால் பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் பள்ளிகள் இல்லாமல் நகரினை உருவாக்குவது கிடையாது. குழந்தை பிறக்கும் போது அவற்றை பள்ளியில் சேர்ப்பது குறித்த கவலை இல்லை.
 
       குழந்தை பிறந்த 3 ஆண்டுகள் கழித்து அரசிடம் இருந்து குழந்தையின் பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி குறித்த அறிவிப்பு தபால் மூலம் தெரிவித்து பள்ளியில் சேர்க்க வைக்கின்றனர். ஆனால் இந்தியாவில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இரவு பகலாக பள்ளிக்கூட வாசலில் தவம் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. வெளிநாடுகளில் விண்ணப்பம் தரும் பழக்கமே இல்லை.  குழந்தைகளின் மனதில் கற்பிக்கும் திறனை வளர்க்க வேண்டும். புத்தகங்களை வாங்கிக்கொடுத்து படிக்க பழக்க வேண்டும்.பெற்றோர்கள் வீடுகளில் பூஜை அறை ஒதுக்குவது போல் புத்தகங்களுக்கு என தனியாக அறை ஒதுக்க வேண்டும். குழந்தைகளுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து விரிவாக தெரியப்படுத்த வேண்டும்.
 
          புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களின் பேனா குனிவதால் சமூகம் தலை நிமிர வேண்டும். மனிதனுக்கு அழகு என்பது அறிவும், ஆரோக்கியமும் தான். அழகிய முகம் உடையவர்கள் வரலாற்றிலே இடம் பிடிக்க முடியாது. வீரமாக வாழ்ந்தால் தான் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும். எழுத்தாளர்கள் மனிதர்களுக்காக எழுதுகிறார்கள். ஆகவே அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு எழுத்தாளர் பிரபஞ்சன் பேசினார்.

          தொடர்ந்து கவிஞர் இன்பா சுப்ரமணியன் வாசவி வாசகர் வட்டத்தை துவக்கி வைத்தார். இதில் எழுத்தாளர்கள் சம்பத், சபீதா ஜோசப், ஆரிய வைசிய சங்க தலைவர் ராஜேந்திரன், வாசவி கிளப் கப்புள்ஸ் சாசன தலைவர் பத்மநாபன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கழுகுப்பார்வை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். 










Read more »

திங்கள், டிசம்பர் 26, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடலூர் : 

               ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் சிகிச்சை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             ஒரத்தூர், நடுவீரப்பட்டு, ஸ்ரீமுஷ்ணம், ஆயங்குடி, மருங்கூர், பெண்ணாடம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கி வரும் பல் சிகிச்சை மையங்களில் பல் டாக்டர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதில் வாரத்திற்கு 6 நாள் பணி வழங்கப்படும். இவர்களுக்கு தினசரி மூன்று மணி நேரத்திற்கு முறையே 500 மற்றும் 250 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். பல் மருத்துவத்தில் பட்டப் படிப்பும், உதவியாளர் பணிக்கு பல் மருத்துவ பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

            விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூரில் இயங்கி வரும் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையில் இயங்கும் மாவட்ட சுகாதார குழும உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையத்தில் ரூ.1.91 கோடியில் புதிய மின் மாற்றி

சிதம்பரம்:

            கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையத்தில் ரூ.1.91 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் திறன் மின்மாற்றிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

              ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்தார். சமூக நலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் முன்னிலை வகித்தார். ஆட்சியர் வே.அமுதவல்லி, காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பி.அருள்காந்தி, சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டதன் மூலம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குறைந்த மற்றும் அதிக மின்அழுத்தம் இல்லாமல் சீரான மின்சார விநியோகம் கிடைக்கும் என மேற்பார்வை பொறியாளர் பி.அருள்காந்தி தெரிவித்தார்.














Read more »

சனி, ஆகஸ்ட் 13, 2011

ஸ்ரீமுஷ்ணம் பி.எஸ்.எஸ். சமுதாய கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

ஸ்ரீமுஷ்ணம்:

              ஸ்ரீமுஷ்ணம் பி.எஸ்.எஸ்., சமுதாய கல்லூரி நர்சிங் உதவியாளர்கள் கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது.

                கல்லூரி நிர்வாகி பிரகாஷ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் ரவிக்குமார், கமல், ஆகியோர் விபத்து காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது பற்றி செயல் விளக்க பயிற்சி அளித்தனர். முகாமில் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி மாணவிகள், விரிவுரையாளர்கள் வள்ளி சுப்ரமணியன், சதீஷ், சரவணன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.





Read more »

புதன், ஆகஸ்ட் 11, 2010

பள்ளி நிர்வாகியை கைது செய்யக் கோரிசோழத்தரம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

ஸ்ரீமுஷ்ணம்:

              பள்ளி மாணவர் இறப் பிற்கு காரணமான நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சோழத்தரம் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர்.

              கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள டி.வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஜய் (16). ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வடக்குப்பாளையத்தில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை விடுதியில் உள்ள செப்டிக் டேங்க் கழிவை சுத்தம் செய்யும்படி விஜய் உள் ளிட்ட மாணவர்களிடம் வார்டன் கூறினார்.
 
               மின் மோட்டார் இணைப்புடன் கூடிய பைப் மூலம் கழிவுநீரை வெளியேற்ற, மின் இணைப்பு கொடுத்தபோது எதிர்பாராதவிதமாக விஜய் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் விஜய் இறந்தார். மாணவர் விஜய் ஹாஸ்டலில் உள்ள சுவிட்சை போடும் போது மின்சாரம் தாக்கி இறந்ததாக, பள்ளி நிர்வாகத்தினர் சோழத்தரம் போலீசில் புகார் கொடுத்தனர்.

                  இதனையறிந்த மாணவரின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிந்து நிர்வாகியை கைது செய்ய வேண்டும் எனக் கூறி சோழத்தரம் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின், சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பள்ளியின் ஹாஸ்டல் வார்டன்கள் அந்தோணிசாமி, பாக்கியசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்துகின்றனர். மேலும், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் விஜயலட்சுமி நேரில் சென்று பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Read more »

திங்கள், ஆகஸ்ட் 09, 2010

ஸ்ரீமுஷ்ணம் அருகே நாட்டு வெடி வெடித்து விபரீதம்ஐந்து சிறுவர்கள் படுகாயம்




விருத்தாசலம்:

             ஸ்ரீமுஷ்ணம் அருகே வெடிக்காத நாட்டு வெடியை வெடிக்கச் செய்த ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர். 

              கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஆனந்தகுடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலில் பெரிய அளவிலான நாட்டு வெடி சரமாக கட்டப்பட்டு வெடிக்கப்பட்டது. இதில் இரண்டு வெடிகள் வெடிக்காமல் கிடந்தது. நேற்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் வெடிக்காத இரண்டு வெடிகளை எடுத்துச் சென்று ஆற்றில் வைத்து கொளுத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக அவை திடீரென வெடித்ததில் பாண்டியன் மகன் ஜெயகிருஷ்ணன் (10), பாண்டுரங்கன் மகன் மணிமாறன் (9), முருகானந்தம் மகன் வீரபாண்டியன் (8), பழனிவேல் மகன் பிரதாப் (14), சின்னகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் மணிபாரதி ( 8) உள்ளிட்ட சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

                 இதில் ஜெயகிருஷ் ணன் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற சிறுவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .“இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றுவது பற்றிதாசில்தார் பேச்சுவார்த்தை

ஸ்ரீமுஷ்ணம்:

         ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளிக்கூடம் கட்ட ஒதுக் கப்பட்ட இடத்தில் ஆக் கிரமிப்புகளை அகற்றுவது குறித்து தாசில்தார் பேச்சு வார்த்தை நடத்தினார்.

              ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த சாத்தா வட்டம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்ட இட நெருக்கடியால் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது. இதனால் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. காட்டுமன்னார்கோயில் தாசில்தார் விஜயலட்சுமி, மண்டல துணை தாசில்தார் தனசிங்கு, ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சொந்த இடம் ஏதும் இல்லாத ஒரு நபருக்கு மட்டும் மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

Read more »

செவ்வாய், ஜூலை 27, 2010

ஸ்ரீமுஷ்ணம்போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம்:

              ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் ஸ்டேஷனில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி., போலீசாரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்டார்.

                ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் வருகை மற்றும் வழக்குப் பதிவேடு உள்ளிட்ட கோப்புகளை பார்வையிட்டார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தவர் கிடப்பில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பின்னர் போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடந்த கவாத்து பயிற்சியை பார்வையிட்டவர் அவர்கள் பெற்ற சான்றிதழ்கள், சாதனைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின் போது டி.எஸ்.பி., ராமச்சந்திரன் உடனிருந்தார்.

Read more »

புதன், ஜூலை 21, 2010

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு: அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம்: 

          ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர்கள் குடியிருப்பை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பார்வையிட்டார்.

             ஸ்ரீமுஷ்ணம் மற்றும் ஸ்ரீபுத்தூர் பகுதியில் 88ம் ஆண்டு தாட்கோ மூலம் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ராஜேந்திரன், தனி வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஸ்ரீபுத்தூர் மற்றும் ஸ்ரீவக்காரமாரி பகுதியில் உள்ள இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை பார்வையிட்டு, கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட காங்., எஸ்.சி, எஸ்.டி., பிரிவு தலைவர் கலியபெருமாள், நகர தி.மு.க., கூடுதல் செய லாளர் கலியபெருமாள், மூர்த்தி, விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்க ள் பூச் சந்திரன், தமிழ்வாணன் உடனிருந்தனர்.

Read more »

சனி, ஜூலை 17, 2010

ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா

ஸ்ரீமுஷ்ணம் : 

            ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா செய்தனர்.

              ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்தை சேர்ந்த ராமாபுரம், கொளத்தங்குறிச்சி, வாலீஸ்பேட்டை, தண்டகாரங்குப்பம் கிராமங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக ஜாதி, வருமான, இருப்பிடச்சான்று கேட்டு ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ.,) அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு கொடுத்தனர்.

               மனுவைப் பெற்றுக் கொண்ட ஆர்.ஐ., சுந்தரம் மறுநாள் காலை வந்து மனுக்களை வாங்கிச் செல்லுமாறு கூறினார். அதன்படி 60 பேரும் நேற்று காலை 9 மணிக்கு ஆர்.ஐ., அலுவலகத்திற்கு வந்தனர். அதற்கு முன்பாக ஆர்.ஐ., காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். வெகுநேரம் ஆகியும் ஆர்.ஐ., வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆர்.ஐ., அலுவலகம் முன் தர்ணா செய்தனர். தகவலறிந்த ஆர்.ஐ., சுந்தரம் மாலை 3 மணிக்கு ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்து, சான்றிதழில் கையெழுத்திட்டு கொடுத்தார்.

Read more »

செவ்வாய், ஜூலை 13, 2010

ஸ்ரீமுஷ்ணம் அரசு பள்ளிக் கட்டட பிரச்னை 15 நாட்களுக்குள் காலி செய்ய ஒப்புதல்

ஸ்ரீமுஷ்ணம்: 

              அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகை தருவதாக கூறியதைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் காலி செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.

             ஸ்ரீமுஷ்ணம் அரசு உயர் நிலைப்பள்ளி கட்டடம் கட்ட மலைமேடு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத் தில் கடந்த ஏப்ரல் மாதம் இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் தவறுதலாக மனைப் பட்டா வழங்கப்பட்டது. இதனால் இந்த இடத்தில் குடியிருந்து வந்த 6 பேருக்கு மாற்று இடம் தருவது குறித்து தினமலரில் வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து கடந்த வாரம் தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் மாற்று இடம் தர முடிவு செய்யப்பட்டது. ஆனால் வீட்டை பிரித்து வேறு இடத்தில் கட்டுவதற்கு குடியிருப்பவர்கள் இழப்பீட்டுத் தொகை கேட்டதால் பணிகள் துவங்க தாமதமானது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி, தி.மு.க., நகர செயலாளர் தங்க ஆனந் தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குடியிருப்பவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் வீடுகளை பிரித்து கட்டுவதற்கு தனது சொந்த பொறுப்பில் செய்து தருவதாக தங்க ஆனந்தன் மற்றும் செல்வி ஆகியோர் உறுதியளித்தனர். இதன் பின்னர் குடியிருப்பவர்கள் வீடுகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் மாற்று இடம் கொடுப்பதற்கு மலைமேடு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்யும் பணி துவங்கியது.

Read more »

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் கிராமத்தில் இரவில் கருங்கல் ஜல்லி அள்ளிய லாரி, புல்டோசர் சிறைபிடிப்பு

ஸ்ரீமுஷ்ணம்: 

           இரவில் கருங்கல் ஜல்லி அள்ளிய டிப்பர் லாரி மற்றும் புல்டோசரை பொதுமக்கள் சிறை பிடித்தனர். 

             ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் கிராமத் திற்குச் செல்லும் சாலையில் 47.65 லட்சம் செலவில் சாலை போடும் பணி நடக்கிறது. தற்போது கருங்கல் ஜல்லி அமைத்து கிராவல் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாலையின் ஓரத்தில் கொட்டியிருந்த கருங்கல் ஜல்லியை டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த குணமங்கலம் கிராம பொதுமக்கள் விரைந்து சென்று ஜல்லி அள்ளிய டிப்பர் லாரி மற்றும் புல்டோசரை வெளியே எடுத்து செல்லாமல் சிறைபிடித்து குணமங்கலம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். 

               இதனை தொடர்ந்து நேற்று காலை சாலை ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன், ரமேஷ், சவுந்திரபாண்டியன், வெற்றிவேல், பார்த்தசாரதி, சீனுவாசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் டிப்பர்களில் அள்ளிய ஜல்லியை மீண்டும் கொண்டு வந்து கொட்டிய பின்னர் சாலை பணிகளை துவங்குவது என ஒப்புக் கொண்டதன் பேரில் பொதுமக்கள் டிப்பர் லாரியையும், புல்டோசரையும் விடுவித்தனர்.

Read more »

சனி, ஜூலை 10, 2010

சேத்தியாத்தோப்பை அடுத்த விருத்தாங்கநல்லூரில் நூலக கட்டடம் திறப்பு விழா

ஸ்ரீமுஷ்ணம்: 

         சேத்தியாத்தோப்பு அருகே புதிய நூலகக் கட்டடம், விளையாட்டு மைதானம் திறப்பு விழா மற்றும் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.

           சேத்தியாத்தோப்பை அடுத்த விருத்தாங்கநல்லூரில் 3 லட்ச ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டட திறப்பு விழா, இலவச காஸ் அடுப்பு சிலிண் டர்கள் வழங்கும் விழா, விளையாட்டு மைதான திறப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி செல்வராசு தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் ராஜாராமன், கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கலியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி எழுத்தர் செல்வராசு வரவேற்றார். கீரப்பாளையம் ஒன்றிய பெருந்தலைவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நூலக கட்டடம் மற்றும் விளையாட்டு மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து 370 பேருக்கு இலவச காஸ் அடுப்புகளை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காவேரி, மக்கள் நலப்பணியாளர் ரவி, கீரப்பாளையம் வீரமணி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

வியாழன், ஜூன் 17, 2010

ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் கட்ட இடம்: டி.ஆர்.ஓ., நடராஜன் பார்வை

ஸ்ரீமுஷ்ணம்: 

                     ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்ய உள்ள இடங்களை டி.ஆர்.ஓ., பார்வையிட்டார். ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தில் சமத்துவபுரம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த இடம் சமத்துவபுரம் கட்ட போதுமானதாக உள்ளதா என்பது குறித்தும் மண்ணின் தன்மை மற்றும் வளம் குறித்து டி.ஆர்.ஓ., நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, காட்டுமன்னார்கோயில் தாசில்தார் விஜயலட்சுமி, மண்டல துணை தாசில்தார் தனசங்கு, ஆர்.ஐ., சுந்தரம், வி.ஏ.ஓ.,க்கள் வெங்கடாசலம், மயில்வாகணன், ஷாஜகான், தேத்தாம் பட்டு ஊராட்சி தலைவர் காந்தி செல்வராஜன் உடன் இருந்தனர். தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டு பணிகளை உடனே துவங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Read more »

புதன், ஜூன் 16, 2010

அ.தி.மு.க.,-பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர்

ஸ்ரீமுஷ்ணம் : 

                 ஸ்ரீமுஷ்ணம் நகர அ.தி. மு.க., மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர். ஸ்ரீமுஷ்ணம் நகர அ.தி.மு.க., மாஜி துணை செயலாளர் தங்க கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகர எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் சக்கரபாணி, நகர ஜெ., பேரவை தலைவர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., இளைஞரணி சம்பந்தம், கீழ்புளியங்குடி கிளை செயலாளர் ரங்கநாதன் மற்றும் பாலு, செல்வம், நாகராஜ், மனுநீதிசோழன், மகளிரணி குமுதவள்ளி ஜெயலட்சுமி, நகர வன்னியர் சங்க தலைவர் கொளஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் அமைச்சர் பன்னீர் செல்வம் இல்லத் தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தி.மு. க.,வில் இணைந்தனர். தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி பகுதியில் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலாளர் தங்க.ஆனந்தன், துணை செயலாளர் சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் முத்துசாமி, அவைத்தலைவர் சீனுவாசன், பேரூராட்சி துணைத் தலைவர் முருகானந்தம், ஒன்றிய பிரதிநிதி ராஜேந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Read more »

ஞாயிறு, ஜூன் 06, 2010

ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன் முறையாக "சிசேரியன்' மூலம் குழந்தை

ஸ்ரீமுஷ்ணம் : 

                     ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டத்தில் முதன் முறையாக "சிசேரியன்' சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

                      ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை அரங்கில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மட்டும் நடந்தது. நகரப்பாடியைச் சேர்ந்த சசிக்குமார் மனைவி வீரராணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆயங்குடி வட்டார மருத்துவ அலுவலர் குலோத்துங்க சோழன் தலைமையில் டாக்டர்கள் ஆண்டனி ராஜ், நித்யா, சிவப்பிரியா மற்றும் சிறப்பு டாக்டர்கள் விஜயகுமார், செல்வராஜ், மணிமொழி, சுரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை (சிசேரியன்) சிகிச்சை செய்தனர். இதில் வீரராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் "சிசேரியன்' மூலம் பிறந்த குழந்தைக்கு பேரூராட்சி சேர்மன் செல்வி ஒரு கிராம் மோதிரம் அணிவித்து ஆடைகள் வழங்கி கருணாநிதி என பெயர் சூட்டினார். மாவட்டத்திலேயே ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் முதலாக "சிசேரியன்' மூலம் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Read more »

வெள்ளி, மே 28, 2010

டி.நெடுஞ்சேரி அரசு பள்ளி 93 சதவீதம் தேர்ச்சி


ஸ்ரீமுஷ்ணம் : 

                 ஸ்ரீமுஷ்ணம் அருகே டி.நெடுஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி 93 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. நடந்த முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த டி.நெடுஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி 93 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் நாகார்ஜுன் 474 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கதிரவன் 473 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், 472 மதிப்பெண் பெற்று எழிலரசி மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் பாராட்டினார்.

Read more »

திங்கள், மே 17, 2010

டிரான்ஸ்பார்மர் பழுதானதால் இருளில் மூழ்கும் சின்னாத்துக்குறிச்சி

ஸ்ரீமுஷ்ணம் : 

               ஸ்ரீமுஷ்ணம் அருகே டிரான்ஸ் பார்மர் பழுதானதால் கிராமமே இருளில் முழ்கியுள்ளது.

                 ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ள சின்னாத்துக்குறிச்சி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பழுதான இந்த டிரான்ஸ் பார்மரை உடனடியாக மாற்றாத காரணத்தால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விவசாய மோட்டார் பம்ப் செட்டுகள் இயங்காததால் 50 ஏக்கர் விவசாய பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் முற்றிலுமாக இல்லாமல் கிராமமே இருளில் முழ்கியுள்ளது. விவசாய பம்ப் செட்டுகள் இயங்காததால் நடவு பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது.

                     மேலும் 20 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் நடவு நடுவதற்கு முன்பு ஏர் உழுத கையோடு காய்ந்த நிலையிலும், நாற்று விட்ட வயல்கள் தண் ணீர் இன்றியும் காய்ந்தும் வருகின்றன. பழுதான டிரான்ஸ் பார்மரை மின் வாரியம் கழட்டி எடுத்து சென்று இரண்டு நாட்களாகியும் உடனடியாக அமைக்காத காரணத்தால் பயிர்கள் காய்ந்து விடும் நிலையில் உள்ளது. தற்போது தற்காலிகமாக டிரான்ஸ்பார்மர் இல்லாமல் நேரடியாக வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. குறைந்த வோல்டேஜ் காரணமாக பல்புகள் விளக்கை விட குறைந்த வெளிச்சம் தருகிறது. மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சின்னாத்துக்குறிச்சி கிராமத்தில் புதிய டிரான்ஸ் பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

புதன், மே 12, 2010

ஊழல் எதிர்ப்பு இயக்க பொதுக்குழு கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம் : 

                   ஊழல் எதிர்ப்பு இயக்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்தது. இயக்கத் தலைவர் வள்ளுவன் தலைமை தாங்கினார். புலவர் கண்ணன் வரவேற்றார். ஸ்ரீமுஷ்ணம் கிளைத் தலைவர் சேதுமாதவன், விருத்தாசலம் கிளைத் தலைவர் கலிவரதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் மாவட்ட செயலாளர் அப்பாஜி பேசினார்.

                பொருளாளர் செல்வராஜ் வரவு செலவு கணக்குகளை வாசித்தார். கூட்டத்தில், ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவது குறித்த விவரங்களை செய்தித் தாள்கள் மற்றும் அவர்கள் படங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வெளியிடுவது. தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரானை மாற்ற கோரி சென்னை தகவல் ஆணையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நடந்த நிர்வாகிகள் தேர்தலில் வேணுகோபால் தேர்தல் ஆணையாளராக பணியாற்றினார். மாவட்ட தலைவராக வள்ளுவன், துணைத் தலைவர் ராஜாராம், செயலாளர் அப்பாஜி, இணை செயலாளர் குணசேகரன், பொருளாளர் செல்வராசு, செயற்குழு உறுப்பினர்களாக ரவி, ரங்கராஜன், கலைமணி, பூவராகமூர்த்தி, ஸ்டெல்லா மேரி, ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior