உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




EPF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
EPF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

விருத்தாசலம் அருகே ஆசிரியர் சேமநலநிதி கையாடல்

http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/ac5689fc-42fe-46a5-8218-0134d902ed4e_S_secvpf.gif
 
விருத்தாசலம்:
 
      விருத்தாசலம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35), விருத்தாசலம் அருகே கம்மாபுரத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி (32). கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களின் சம்பளபட்டியல் மற்றும் சேமநல நிதி பிரிவில் அறிவழகன் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
          அந்த அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர்கள் சேமநல நிதி கணக்கில் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 1-ந் தேதி அறிவழகன் `சஸ்பெண்டு' செய்யப்பட்டார். அதிகாரிகளின் விசாரணையில், ஆசிரியர்கள் சேமநல நிதி கணக்கில் சுமார் ரூ.30 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அந்தபணத்தை அறிவழகன் தனது மனைவி தேன்மொழி வங்கி கணக்கில் சேர்த்திருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து கடலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் உதவி தொடக்க கல்வி அதிகாரி வீரபாண்டியன் புகார் செய்தார். அதன்பேரில் அறிவழகனையும், தேன்மொழியையும் போலீசார் கைது செய்தனர். அறிவழகன் வீட்டில் இருந்து ரூ.15 லட்சத்து, ஆயிரம் மற்றும் 2 இருசக்கரவாகனங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், ஏ.டி.எம்.கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
 
          பின்னர் அவர்கள் 2 பேரும் விருத்தாசலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு உத்தரவை தொடர்ந்து கணவனும், மனைவியும் கடலூர் ஜெயிலில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டனர். ஆசிரியர்கள் சேமநலநிதி கணக்கில் நடந்த இந்த கையாடல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கையாடலின் பின்னணியில் அதிகாரிகள் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

காட்டுமன்னார்கோவில் ஒன்றிய சத்துணவு ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கு துவக்கம்

காட்டுமன்னார்கோவில் : 

           காட்டுமன்னார்கோவில் ஒன்றிய சத்துணவு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பம் பெறும் பணி துவங்கியது.

               தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை ஏற்று வருங்கால வைப்பு நிதி வழங்க உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு துவங்குவதற்காக ஆயத்த பணிகள் துவங்கப்பட்டது. இதற்கான ஆய்வு கூட்டம் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் நடந்தது. சத்துணவு மேலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். 

            சத்துணவு அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் சத்துணவு ஊழியர்களை ஒருங்கிணைத்து விண்ணப்பங்கள் பெற்றனர். ஒன்றியத்துக்குட்பட்ட 55 பஞ்சாயத்துகளில் உள்ள 123 பள்ளிகளில் இருந்து சத்துணவு பணியாளர்கள் 330 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் பொறுப்பாளர்கள், சமையலர், உதவியாளர் என அனைவரிடமும் விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. 





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior