உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 17, 2009

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தொலைநோக்கி


சிதம்பரம்,நவ.16:


பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள பார்வையாளர்கள் டவரில் ரூ.4.10 லட்சம் மதிப்புள்ள தொலைநோக்கி கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் ஹரிஹரன், கவுன்சிலர்கள் சங்கர், பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுற்றுலாப் பயணிகளிடம் நபர் ஒருவருக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். இத் தொலைநோக்கி மூலம் சுமார் 8 கி.மீ. தூரம் வரை உள்ள இயற்கை எழில் சூழ்ந்துள்ள பிச்சாவரம் வனக்காடுகளை பார்க்கலாம் என எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Read more »

சென்னைகாசநோய் வில்லைகள்: ஆட்சியர் வெளியிட்டார்

கடலூர்,நவ.16:

கடலூர் மாவட்ட காசநோய் தடுப்புக் கழகம் சார்பில் காசநோய் வில்லைகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அண்மையில் வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காசநோய் வில்லைகளை, மாவட்ட ஆட்சியர் வெளியிட, மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு மாவட்ட காசநோய் அலுவலர் எம்.மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் எஸ்.மீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

வீடுகளைச் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றக் கோரிக்கை

கடலூர்,நவ.16:

கடலூர் நகரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் காலனிப் பகுதிகளில் வீடுகளைச் சுற்றி தேங்கிநிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன் மற்றும் கடலூர் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
தற்போது பெய்துவரும் கனமழையால் கடலூர் நகராட்சி 32-வது வார்டுக்கு உள்பட்ட குழந்தைக் காலனியில் 40 வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது மிகவும் சிரமராக இருக்கிறது. வில்வராயநத்தம், கொடிக்கால் குப்பம், மணவெளி, ஆலைக்காலனி, புருகீஸ்பேட்டை, கோண்டூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளைச் சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் மனுவில் கோரப்பட்டு உள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior