skip to main |
skip to sidebar
கட லூர், நவ.26:
மாணவர்கள் நிரந்தர சாதிச் சான்றிதழ் கோரி வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி வேண்டுகோள் விடுத்து உள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் சாதிச் சான்றிதழ்களை, தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இதுவரை சுமார் 10 ஆயிரம் மாணவ, மாணவியர் நிரந்தரச் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே சாதிச் சான்றிதழுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் 30-11-2009-க்குள் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுóக் கொள்ளப்படுகிறார்கள் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Read more »
சிதம் பரம், நவ. 26:
காட்டுமன்னார்கோவிலில் பிராமணர் சங்கக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர்- எஸ்.சீனுவாசநாராயணன், செயலாளர்- கே.ஆர்.ராமானுஜம், துணைத்தலைவர்- வி.ராமகிருஷ்ணன், துணைச்செயலாளர்- டி.சீனுவாசாச்சாரி, பொருளாளர்-பி.வி.சடகோபன் ஆகிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நோபல் பரிசு பெற்ற சிதம்பரத்தில் பிறந்த வெங்ட்ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு தெரிவிப்பது, எம்.பி. நிதியிலிருந்து ஈமக்கிரியை மண்டபம் கட்டிக்கொடுத்த அரசுக்கும், உறுதுணையாக இருந்தவர்களுக்கும் நன்றி தெரிவிப்பது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Read more »

சிதம் பரம், நவ. 26:
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் ஊனமுற்றோர் கோயிலை சுற்றிப்பார்க்க கைப்பிடி வைக்கப்பட்டு, அமரவைத்து அழைத்துச் செல்லக்கூடிய 2 சக்கர நாற்காலிகளை பக்தர் ஒருவர் கோயிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். சிதம்பரம் விளங்கியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த நகரமன்ற முன்னாள் தலைவர் சி.ப.கண்ணையன் மகனும், நகரமன்ற முன்னாள் உறுப்பினருமான சி.ப.க.ராஜன் இந்த சக்கர நாற்காலிகளை ஆலய செயல் அலுவலர் க.சிவக்குமாரிடம் வழங்கினார். ஆலயத்துக்கு ஊனமுற்றோரை அழைத்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஆலய செயல் அலுவலர் அலுவலகத்தில் உள்ள இந்த சக்கர நாற்காலிகளை பெற்று ஆலயத்தை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என பக்தர்களுக்கு செயல் அலுவலர் க.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more »