உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 01, 2009

ரயில்வே சுவர் வைக்க எதிர்ப்பு

கட ​லூர்,​ நவ.30: 


      மக்​கள் செல்ல பாதை இல்​லா​மல் ரயில் பாதை​யோ​ரம் மதில் சுவர் வைப்​ப​தற்கு எதிர்ப்பு தெரி​வித்து,​ நெல்​லிக்​குப்​பம் பொது​மக்​கள் திங்​கள்​கி​ழமை கட​லூர் மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் கோரிக்கை மனு அளித்​த​னர். ​

நெல்​லிக்​குப்​பம் பீட்​டர் தெரு பகு​தி​யில் சுமார் 150 குடும்​பங்​கள் வசிக்​கின்​றன.     இப் பகு​தி​யை​யொட்டி ரயில்​பாதை ஓர​மாக மதில்​சு​வர் வைக்க ரயில்வே இலாகா முடிவு செய்து இருக்​கி​றது. 

       இப்​ப​குதி மக்​கள் சென்று வர நடை​பாதை அள​வுக்கு இடம் விட்டு மதில் சுவர் அமைக்​கு​மாறு அப்​ப​குதி மக்​கள் கோரி வரு​கி​றார்​கள். 

    பா​தை​யின்றி ரயில்வே துறை மதில் சுவர் கட்​டு​வ​தற்கு எதிர்ப்பு தெரி​வித்து அப்​ப​குதி மக்​கள்,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​ன​ரு​டன் இணைந்து திங்​கள்​கி​ழமை கட​லூ​ரில் மாவட்ட ஆட்​சி​யரை சந்​தித்து மனு அளித்​த​னர்.

வி​டு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் மாவட்​டச் செய​லா​ளர் சு.திரு​மா​றன்,​ தமிழ் தேசிய கட்சி மாநில துணைச் செய​லா​ளர் திரு​மார்​பன்,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் வழக்​க​றி​ஞ​ரணி மாவட்​டச் செய​லா​ளர் காத்​த​வ​ரா​யன்,​ மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் அறி​வுக்​க​ரசு,​ தொண்​ட​ர​ணிச் செய​லா​ளர் ஸ்ரீதர்,​ ஓவி​யர் அணி துணைச் செய​லா​ளர் ஜெய​ரா​மன் உள்​ளிட்​டோர் சென்று இருந்​த​னர்.

Read more »

கிரா​மச் சாலை​களை சீர​மைக்க கோரிக்கை

​ சிதம்​ப​ரம்,​ நவ. 30:​ 
 
 
சிதம்​ப​ரம்,​ காட்​டு​மன்​னார்​கோ​வில் பகு​தி​யில் சமீ​பத்​தில் பெய்த கன​ம​ழை​யால் பாதிக்​கப்​பட்ட அனைத்து கிரா​மச் சாலை​க​ளை​யும் சீர​மைக்க வேண்​டும் என மக்​கள் நலன் காக்​கும் மாமன்​றம் தீர்​மா​னம் நிறை​வேற்​றி​யுள்​ளது.
 
மக்​கள் நலன் காக்​கும் மாமன்​றக் கூட்​டம் சிதம்​ப​ரத்​தில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.    தலை​வர் வழக்​க​றி​ஞர் ம.வே.வேல்​ராம​லிங்​கம் தலைமை வகித்​தார். சிதம்​ப​ரம்,​ காட்​டு​மன்​னார்​கோ​வில் பகு​தி​யில் மழை​யால் சேத​ம​டைந்​துள்ள வாய்க்​கால்,​ கரை​கள் மற்​றும் மத​கு​களை சீர​மைக்க பொதுப்​ப​ணித் துறை அதி​கா​ரி​களை கேட்​டுக்​கொள்​வது,​ சிதம்​ப​ரத்தி​லி​ருந்து மஞ்​சக்​கொல்லை வழி​யாக வட​லூர் வரை இயங்​கிக் கொண்​டி​ருந்த பஸ் ​(தடம் எண்:​ 29) நிறுத்​தப்​பட்​டுள்​ளது. அந்த பஸ்ûஸ அதே தடத்​தில் மீண்​டும் இயக்​கக் கோரு​வது.

Read more »

சிதம்​ப​ரம் நக​ர​மன்​றக் கூட்​டத்​தில் நாற்காலி வீச்சு​ திமுக,​ காங்​கி​ரஸ்,​ பாமக உறுப்​பி​னர்​கள் வெளி​ந​டப்பு

சிதம்​ப​ரம்,​ நவ.30: 


      சிதம்​ப​ரத்​தில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற நக​ர​மன்​றக் கூட்​டத்​தில் நக​ராட்சி நிர்​வாக சீர்​கேட்​டைக் கண்​டித்து திமுக,​ காங்​கி​ரஸ்,​ பாமக விடு​த​லைச்​சி​றுத்​தை​கள் கட்சி நக​ர​மன்ற உறுப்​பி​னர்​கள் நாற்காலி வீசி​யெ​றிந்து வெளி​ந​டப்பு செய்​த​த​தால் கூட்​டம் கோரம் இல்​லா​மல் ஒத்தி வைக்​கப்​பட்​டது.÷சி​தம்​ப​ரம் நக​ர​மன்​றக் கூட்​டம் அதன் தலை​வர் ஹெச்.பௌ​ஜி​யா​பே​கம் ​(மார்க்​சிஸ்ட் கம்யூ. கட்சி)​ தலை​மை​யில் திங்​கள்​கி​ழமை தொடங்​கி​யது. கூட்​டம் தொடங்​கி​ய​வு​டன் பாமக உறுப்​பி​னர் சாந்தி பிரி​ய​தர்​ஷினி தனது வார்​டில் எந்த பணி​க​ளுமே நடக்​க​வில்லை எனக் கூறி வெளி​ந​டப்பு செய்​தார்.

அ​டுத்து காங்​கி​ரஸ் உறுப்​பி​னர் முக​ம​து​ஜி​யா​வு​தீன் நக​ராட்​சி​யில் சுத்​த​மான குடி​நீர் வழங்​க​வில்லை.   சாக்​க​டை​யும்,​ சக​தி​யு​மாக குடி​நீர் வரு​கி​றது. மத்​தி​ய​அ​மைச்​சர் ஜி.கே.வாசன் வழங்​கிய நிதி காங்​கி​ரஸ் கட்​சியை அவ​மா​னப்​ப​டுத்​தும் வகை​யில் புறக்​க​ணிக்​கப்​பட்​டுள்​ளது.÷சீர்​கே​டான நிர்​வா​கத்தை நடத்தி வரும் தலை​வ​ரின் கீழ் நக​ர​மன்ற உறுப்​பி​ன​ராக பணி​யாற்​று​வது கேவ​ல​மாக இருக்​கி​றது என்று கூறி விட்டு வெளி​ந​டப்பு செய்​தார்.

தி​முக உறுப்​பி​னர் த.ஜேம்ஸ் விஜ​ய​ரா​க​வன் பேசு​கை​யில் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி தலை​மை​யில் நடை​பெ​றும் சிதம்​ப​ரம் நக​ராட்​சி​யில் திமுக,​ காங்,​ பாமக,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி உறுப்​பி​னர்​கள் வார்​டு​கள் புறக்​க​ணிக்​கப்​ப​டு​கி​றது. 

கு​டி​நீர்ப் பிரச்​சனை குறித்து பல​முறை வலி​யு​றுத்​தி​யும் எந்த நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்லை. கட​லூர்,​ நெல்​லிக்​குப்​பம்,​ விருத்​தா​ச​லம் நக​ராட்சி,​ கீரப்​பா​ளை​யம் பேரூ​ராட்சி நிர்​வா​கத்​தைக் கண்​டித்து மண்​சோறு சாப்​பிட்​டும்,​ நாத்து நடும் போராட்​டம் நடத்​தும் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி சிதம்​ப​ரத்​தில் உள்ள மோச​மான சாலை​க​ளைக் கண்​டித்து ஏன் மண்​சோறு சாப்​பி​டும் போராட்​டம் நடத்​த​வில்லை. 

மக்​கள் பிரச்​னையை தீர்க்க முடி​யாத மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யைச் சேர்ந்த தலை​வர் தனது பத​வியை ராஜி​நாமா செய்ய வேண்​டும் எனக் கூறி​னார்.

அப் ​போது மார்​கிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் உறுப்​பி​னர் சந்​தி​ர​சே​க​ரன் பதில் பேச முயன்ற போது அவ​ரது மைக்கை பறித்து கண்​டன கோஷ​மிட்டு,​ திமுக,​ காங்​கி​ரஸ்,​ விடு​த​லைச்​சி​றுத்​தை​கள் மற்​றும் சுயேட்சை உறுப்​பி​னர்​கள் வெளி​ந​டப்பு செய்து நக​ர​மன்​றக் கூடம் முன்பு ஆர்ப்​பாட்​டம் செய்​த​னர்.

அ​தி​முக மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் உறுப்​பி​னர்​கள் 6 பேர் மட்​டும் கூடத்​தில் இருந்​த​தால் கூட்​டம் கோரம் இல்​லா​த​தால் ஒத்​தி​வைக்​கப்​ப​டு​வ​தாக தலை​வர் ஹெச்.பௌ​ஜி​யா​பே​கம் அறி​வித்து எழுந்து அவ​ரது அறைக்​குச் சென்​றார்.​வெளி​ந​டப்​பில் பங்​கேற்​காத அதி​முக..​

கூட் ​டத்​தில் நக​ராட்சி சீர்​கேட்​டைக் கண்​டித்து பிரச்னை எழுப்ப தயா​ராக வந்த நக​ர​மன்ற உறுப்​பி​னர்​கள் நடை​பெ​ற​வுள்ள இடைத்​தேர்த​லில் அதி​மு​க​விற்கு மார்க்​சிஸ்ட் கம்யூ. கட்சி ஆத​ரவு அளிப்​ப​தால் அதி​முக நக​ர​மன்ற உறுப்​பி​னர்​கள் வெளி​ந​டப்பு செய்​யா​மல் கூடத்​தில் அமை​தி​யாக அமர்ந்​தி​ருந்​த​னர்.

தி​முக தலை​மை​யி​லான கட​லூர் நக​ர​மன்ற நிர்​வா​கத்​தைக் கண்​டித்து மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​வ​தால் சிதம்​ப​ரம் நக​ர​மன்ற சீர்​கேட்​டைக் கண்​டித்து திமு​க​வி​னர் நக​ர​மன்​றக் கூட்​டத்​தில் ரக​ளை​யில் ஈடு​பட்டு வெளி​ந​டப்பு செய்​த​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior