உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

பண்​ருட்​டி​யில் மணிலா விதைப்பு மும்​மு​ரம்

​ பண்​ருட்டி,​ டிச. 5:​ 
 
                              பண்​ருட்டி பகு​தி​யில் மணிலா விதைப்​புப் பணி தீவி​ரம் அடைந்​துள்​ளது. ஆள்​கள் பற்​றாக் குறை​யால் இப்​பணி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.
 
                        க​ட​லூர் மாவட்​டத்​தில் விவ​சாய விளை பொருள்​க​ளில் நெல்,​ கரும்​புக்கு அடுத்​தப்​ப​டி​யாக எண்ணை வித்​தான மணிலா அதிக அளவு நிலப்​ப​ரப்​பில் பயி​ரி​டப்​ப​டு​கி​றது. ​ கார்த்​திகை,​ மார்​கழி மாதங்​க​ளில் மணிலா விதைப்பு செய்​யப்​ப​டும். இருப்​பி​னும் மழை​யால் சேதம் ஏற்​ப​டும் என்ற அச்​சத்​தால் அநேக விவ​சா​யி​கள் கார்த்​திகை தீபம் முடி​வ​டைந்​த​தும் விதைப்​புப் பணி​களை தீவி​ரப்​ப​டுத்​து​வர். தற்​போது கார்த்​திகை தீபம் முடி​வ​டைந்​ததை அடுத்து மணிலா விதைப்பை தீவி​ரப்​ப​டுத்​தி​யுள்​ள​னர். ​
 
                   இ​து​கு​ றித்து மாளி​கம்​பட்டு விவ​சாயி ஆறு​மு​கம் கூறி​யது:​ கார்த்​திகை தீபத்​துக்கு முன் மணிலா விதைத்​தால் மழை​யால் சேதம் அடை​யும். இத​னால் தீபம் முடிந்து தான் மணிலா விதைப்பு தீவி​ரம் அடை​யும். ஆள் பற்​றாக் குறை​யால் மணிலா விதைப்பு பாதிப்​ப​டைந்​துள்​ளது. விவ​சா​யத் துறை மூலம் சான்று அளிக்​கப்​பட்ட மணிலா விதை கிடைக்​க​வில்லை. இத​னால் தனி​யா​ரி​டம் இருந்து வாங்கி விதைக்​கின்​றோம். இதன் முளைப்​புத் தன்மை மற்​றும் காய்ப்பு திறன் போகப்​போ​கத்​தான் தெரி​யும் என விவ​சாயி ஆறு​மு​கம் கூறி​னார்.
 
              இது குறித்து வேளாண்மை உதவி இயக்​கு​னர் பி.ஹரி​தாஸ் கூறி​யது:​ மணிலா விதைப்பு பரு​வத்​துக்​காக பண்​ருட்டி வட்​டத்​துக்கு 2 டன் மணிலா விதை பெறப்​பட்டு,​ கடந்த 15 நாள்​க​ளுக்கு முன்​னரே விவ​சா​யி​க​ளுக்கு விநி​யோ​கம் செய்து விட்​டோம். தற்​போது விதை இருப்பு இல்லை என்​றார்.

Read more »

துல்​லியப் பண்​ணைய திட்​டம் மூலம் தோட்​டக்​கலை பயிர் சாகு​படி

சிதம்​ப​ரம்,​ டிச. 5:​ 

                                 சிதம்​ப​ரத்தை அடுத்த பரங்​கிப்​பேட்டை வட்​டா​ரத்​தில் தமிழ்​நாடு வேளாண்மை வளர்ச்சி திட்​டத்​தில் துல்​லிய பண்​ணைய திட்​டம் மூலம் தோட்​டக்​கலை பயிர்​கள் சாகு​படி செய்ய திட்​ட​மி​டப்​பட்​டுள்​ள​தாக உதவி வேளாண் இயக்​கு​நர் ராஜ​ரா​ஜ​சோ​ழன் தெரி​வித்​துள்​ளார்.

                 இ​து​கு​றித்து அவர் வெளி​யிட்​டுள்ள பத்​தி​ரிகை செய்தி:​ துல்​லிய பண்​ணைய வேளாண் திட்​டத்​தில் ஒரு ஹெக்​டேர் நிலம் உடைய 10 வேளாண் பெரு​மக்​கள் ஒரு குழு​வாக ஒருங்​கி​ணைந்து ஓராண்டு வாழை அல்​லது காய்​கறி உள்​ளிட்ட தோட்​டக்​கலை பயிர்​கள் சாகு​படி செய்​ய​லாம். இதற்கு மத்​திய,​ மாநில அரசு நுண்​ணீர் பாசன அமை​விற்கு ரூ.40 ஆயி​ரம் மற்​றும் கரை​யும் உரங்​கள் ரூ.30 ஆயி​ரம் உள்​ளிட்ட ரூ.70 ஆயி​ரத்தை மானி​ய​மாக வழங்​கு​கி​றது.

                  வி​வ​சா​யி​கள் இத்​திட்​டத்​தின் மூலம் பயன்​பெற நில உடைமை சிட்டா,​ சாகு​படி விவர அடங்​கல்,​ அடை​யாள அட்டை நகல்,​ வயல் விபர வரை உள்​ளிட்ட ஆவ​ணங்​க​ளு​டன் அருகே உள்ள உதவி வேளாண் அலு​வ​லரை தொடர்பு கொள்ள வேண்​டும் என ராஜ​ரா​ஜ​சோ​ழன் தெரி​வித்​துள்​ளார்.​

Read more »

விருத்​தா​ச​லத்​தில் மக்​காச்​சோள விளை​பொ​ருள் குழுக் கூட்​டம்

நெய்வேலி, ​ டிச. 5:​ 

                            விருத்​தா​ச​லம் வட்​டம் மங்​க​ளூர் ஒன்​றி​யத்​துக்கு உட்​பட்ட ஜா.ஏந்​தல் கிரா​மத்​தில் வேளாண் விற்​பனை மற்​றும் வணி​கத்​துறை சார்​பில் விருத்​தா​ச​லம் கோட்ட வேளாண் விளை​பொ​ருள் கூட்​டம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.

                       இ​து​கு​றித்து விருத்​தா​ச​லம் கோட்ட வேளாண் அலு​வ​லர் ச.அமுதா வெள்​ளிக்​கி​ழமை வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​ ஜா.ஏந்​தல் கிரா​மத்​தில் நீர்​வள,​ நில​வள திட்​டத்​தின் கீழ் 15 உறுப்​பி​னர்​க​ளைக் கொண்ட விளை​பொ​ருள் குழுக்​கள் எள்,​ மணிலா,​ பருத்தி மற்​றும் மக்​காச்​சோள பயிர்​க​ச​ளுக்​காக அமைக்​கப்​பட்​டுள்​ளன.

                 இக் ​கு​ழுக்​க​ளுக்கு வேளாண் வணி​கத் திட்​டங்​கள்,​ மேற்​கண்ட பயிர்​க​ளுக்​கான அறு​வடை பின்​செய் நேர்த்தி தொழில்​நுட்​பங்​கள்,​ லாபம் தரும் சந்தை வாய்ப்​பு​கள்,​ விளை பொருள்​களை ஒழுங்​கு​முறை விற்​பனை கூடங்​க​ளுக்கு கொண்டு சென்று விற்​பனை செய்​வது ஆகி​யவை குறித்து பயிற்சி அளிக்​கப்​பட்​டது.

              மே​லும் விளை பொருள்​க​ளின் அறு​வ​டைக் காலங்​க​ளில் எதிர்​நோக்​கும் விற்​பனை விலை குறைவை ஈடு​கட்ட ஒழுங்கு முறை விற்​ப​னைக் கூடங்​க​ளில் இருப்பு வைத்து விற்​பனை செய்​வது,​ விற்​ப​னைக் காலங்​க​ளில் பொரு​ளீட்டு கடன்​பெ​றும் வழி வகை​கள்,​ மக்​காச்​சோ​ளம் விற்​பனை செய்​வ​தற்கு வேளாண் விற்​ப​னைத் துறை சார்​பில் தனி​யார் கோழித் தீவன பண்​ணை​கள் மூலம் புரிந்​து​ணர்வு ஒப்​பந்​தம் செய்து கொள்​மு​தல் செய்​யும் ஏற்​பா​டு​கள் குறித்​தும் அமுதா விளக்​கி​னார்.

                 முன்​ன​தாக விவ​சாய முன்​னோடி விளை​பொ​ருள் குழுக் கூட்​டத்​துக்கு வேம்​பன் தலைமை வகித்​தார். உதவி வேளாண் அலு​வ​லர் ஜெய​பால் கூட்​டத்​துக்​கான ஏற்​பா​டு​க​ளைச் செய்​தி​ருந்​தார். 40-க்கும் மேற்​பட்ட விவ​சா​யி​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​ற​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior