உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

விழிப்​பு​ணர்வு கூட்​டம்

சிதம்ப​ரம்,​​  டிச.​ 19:​ 
 
                       சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஆசி​ரி​யர் மற்​றும் பணி​யா​ளர் கூட்டு நட​வ​டிக்கை குழு ​சார்​பில் விழிப்​பு​ணர்வு கூட்​டம் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​
 
                              பல் ​க​லைக்​க​ழ​கத்​தின் புக​ழை​யும்,​​ பெரு​மை​யை​யும் சீர்​கு​லைக்​கும் வகை​யில் திட்​ட​மிட்டு பரப்​பப்​பட்டு வரும் வீண் வதந்​தி​கள் குறித்​தும்,​​ பட்​ட​ம​ளிப்பு விழாவை சீர்​கு​லைக்க முயற்​சித்​தும் வரு​வதை எதிர்த்து நடை​பெற்ற இக் கூட்​டத்​தில் 6-வது ஊதி​யக் குழு​வின் நிலு​வைத் தொகை வழங்​கு​வது பற்​றிய உண்மை நிலை​கள்.​ 1996-க்கு பிறகு பணி​யில் சேர்ந்​த​வர்​க​ளுக்கு எதி​ரான கருத்​து​கள்,​​ தொன்று தொட்டு பல்​க​லைக்​க​ழ​கத்​தில் ஆசி​ரி​யர் மற்​றும் பணி​யா​ளர்​க​ளுக்கு வழங்​கப்​பட்டு வரும் பதவி உயர்வு,​​ பணிப்​ப​யன்​கள்,​​ வாரி​சு​க​ளுக்கு பணி,​​ குழந்​தை​க​ளுக்கு கல்​விச் சேர்க்கை,​​ கட்​ட​ணச் சலுகை உள்​ளிட்​டவை குறித்து விளக்​க​ம​ளித்து பேசி​னர்.​
 
                              இக்​கூட்​டத்​ தில் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஆசி​ரி​யர் நலச்​சங்​கம்,​​ அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ ஆசி​ரி​யர் முன்​னேற்​றச் சங்​கம்,​​ எஸ்.சி.,​​ எஸ்.டி.​ ஆசி​ரி​யர் அலு​வ​லர் நலச்​சங்​கம்,​தமிழ்​நாடு ஆதி​தி​ரா​வி​டர் மற்​றும் பழங்​கு​டி​யி​னர் நலச்​சங்​கம் உள்​ளிட்ட சங்​கங்​க​ளைச் சேர்ந்த நிர்​வா​கி​கள் பங்​கேற்று பேசி​னர்.​÷கூட்​டுக்​கு​ழு​வின் இந்த விழிப்​பு​ணர்வு பிர​சா​ரக் கூட்​டம் திங்கள்கிழமை வரை தொடர்ந்து நடை​பெ​றும் என அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.

Read more »

இந்​தி​யா​வில் நீரி​ழிவு நோயா​ளி​க​ளின் எண்​ணிக்கை 7 கோடி​யாக உய​ரக்​கூ​டும்

நெய்வேலி, ​​ டிச.​ 19:​ 

                                2015-ம் ஆண்​டில் நமது நாட்​டில் சிறு​நீ​ரக நோயா​ளி​க​ளின் சுமார் 7 கோடி அள​வுக்கு உய​ரக்​கூ​டும் என நெய்​வே​லி​யில் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்ற கருத்​த​ரங்​கில் செங்​கல்​பட்டு மருத்​து​வக் கல்​லூ​ரி​யைச் சேர்ந்த சிறு​நீ​ர​க​வி​யல் துறைத் தலை​வர் டாக்​டர் எட்​வின் பெர்​னாண்டோ தெரி​வித்​தார்.​ ​

                            இந்​தி​யப் பொறி​யா​ளர் கழ​கத்​தின் நெய்​வே​லிக் கிளை​யும்,​​ நெய்வேலி பொறி​யா​ளர் மற்​றும் அறி​வி​ய​லா​ளர் கழ​க​மும் இணைந்து சிறு​நீ​ர​கத்​தைப் பாது​காப்​பீர் எனும் தலைப்​பில் கருத்​த​ரங்கை வெள்​ளிக்​கி​ழமை நடத்​தி​னர்.​

                        இ​ தில் என்​எல்சி திட்​டம் மற்​றும் செய​லாக்​கத்​துறை இயக்​கு​நர் ஆர்.கந்​த​சாமி தலைமை வகித்​தார்.​ செங்​கல்​பட்டு மருத்​து​வக் கல்​லூ​ரி​யைச் சேர்ந்த சிறு​நீ​ர​க​வி​யல் துறைத் தலை​வர் டாக்​டர் எட்​வின் பெர்​னாண்டோ சிறப்பு அழைப்​பா​ள​ரா​கக் கலந்​து​கொண்டு பேசும் போது,​​ நமது நாட்​டில் பரம்​பரை மூல​மாக பர​வும் நோய்​கள் 43.5 சத​வீ​த​மாக இருக்​கை​யில்,​​ பிறர் மூலம் பர​வாத உயர் ரத்த அழுத்​தம்,​​ சர்க்​கரை வியாதி போன்​றவை 44 சத​வீ​த​மாக உயர்ந்​துள்​ளது.​ நமது வாழ்க்கை முறை​யும்,​​ உண​வுப் பழக்க வழக்​கங்​க​ளும் தான் இதற்கு முக்​கி​யக் கார​ணம்.​

                           க​டந்த 2004-ம் ஆண்டு கணக்​கின்​படி உலக அள​வில் தொற்​று​நோய் மூலம் 2 கோடி​பே​ரும்,​​ பிற​ரி​ட​மி​ருந்து பர​வாத நோய் மூலம் 3 கோடி பேரும் இறந்​துள்​ள​தாக ஆய்​வில் தெரி​ய​வந்​துள்​ளது.​ நீ​ரி​ழிவு நோயால் பாதிக்​கப்​ப​டும் உறுப்​பு​க​ளில் முக்​கி​ய​மா​னது சிறு​நீ​ர​கம்.​ உயர் ரத்த அழுத்​தம்,​​ அதிக ரத்​தப் போக்கு,​​ சிறு​நீ​ர​கத்​தில் கட்டி,​​ அதிக எடை,​​ அதிக கொழுப்பு,​​ புகைப் பிடித்​தல் ஆகி​ய​வற்​றால் சிறு​நீ​ர​கம் பாதிக்​கப்​ப​டும் என்​றார் எட்​வின் பெர்னாண்டோ.​

                          முன்​ன​தாக நிகழ்ச்​சி​யில் பொறி​யா​ளர் கழகத் துணைத் தலை​வர் சக்​ர​வர்த்தி வர​வேற்​றார்,​​ பொறி​யா​ளர் மற்​றும் அறி​வி​ய​லா​ளர் கழகச் செய​லர் கென்​னடி நன்றி கூறி​னார்.​ நிகழ்ச்​சி​யில் 300-க்கும் மேற்​பட்ட பொறி​யா​ளர்​கள் பங்​கேற்​ற​னர்.​

Read more »

குற்​றங்​க​ளைத் தடுக்க போலீஸ் நட​வ​டிக்கை கட​லூ​ரில் கண்​கா​ணிப்​புக் கேமராக்​களை நிறுவ திட்​டம்

கட​லூர்,​​  டிச.​ 19:​ 

                           குற்​றங்​க​ளைத் தடுக்க கட​லூ​ரில் முக்​கிய இடங்​க​ளில் கண்​கா​ணிப்​புக் கேமராக்​க​ளைப் பொறுத்த திட்​ட​மிட்டு இருப்​ப​தாக கட​லூர் போலீஸ் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் ஸ்டா​லின் தெரி​வித்​தார்.​

                          குற் ​றங்​க​ளைத் தடுக்க எத்​த​கைய நடவ​டிக்​கை​களை மேற்​கொள்ள வேண்​டும் என்​பது குறித்து கட​லூர் நகர வணி​கர்​க​ளு​டன் காவல்​துறை ஆலோ​ச​னைக் கூட்​டம் சனிக்​கி​ழமை நடந்​தது.​÷கூட்​டத்​தில் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் ஸ்டா​லின் கூறி​யது:​ ​

                       தங்க நகை​க​ளின் விலை​கள் பெரு​ம​ள​வுக்கு உயர்ந்து விட்​டன.​ எனவே நகை​க​ளைப் பாது​காப்​ப​தில் கூடு​தல் கவ​னம் தேவை.​ மார்​கழி மாதம் தொடங்​கி​விட்​டால் அதி​கா​லை​யிலே எழுந்து பெண்​கள் கோலம் போடு​வது வழக்​கம்.​ எனவே அத்​த​கைய பெண்​கள் தங்​கள் அணி​க​லன்​கள் குறித்து பாது​காப்​பு​ட​னும் கவ​னத்​து​ட​னும் இருக்க வேண்​டும்.​ ​

                                     2011-ம் ஆண்டு வரை மக்​கள் தொகை கணக்​கெ​டுப்​புப் பணி​கள் நடக்​கி​றது.​ எனவே கூடு​தல் போலீஸ் நிலை​யங்​கள் அமைப்​பது குறித்து 2011 வரை முடிவு எடுக்க முடி​யாது.​ காவல்​துறை மூலம் தொடர்ந்து வாகன சோத​னை​கள் நடத்​தப்​ப​டு​கின்​றன.​ பொது​மக்​கள் ஒத்​து​ழைப்பு நல்க வேண்​டும்.​ ​
                   
                        நக​ரில் பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​க​ளில் கண்​கா​ணிப்​புக் கேமராக்​களை நிறுவ திட்​ட​மி​டப்​பட்டு உள்​ளது.​ இதற்​குக் கூடு​தல் செலவு பிடிக்​கும்.​ எனவே பொது​மக்​கள் பங்​க​ளிப்​பு​டன் இத்​திட்​டத்தை நிறை​வேற்ற ஆலோ​சனை நடத்தி வரு​கி​றோம்.​   குற்​றங்​க​ளைத் தடுக்க பொது​மக்​க​ளும் வணி​கர்​க​ளும் போலீ​ஸô​ருக்கு ஒத்​து​ழைப்பு அளிக்க வேண்​டும் என்​றார் ஸ்டா​லின்.​

                   வணி​கர்​கள் தரப்​பில் பேசி​ய​வர்​கள்,​​ "போலீ​ஸôர் திற​மை​யா​கச் செயல்​பட்டு வரு​கி​றார்​கள்​. குற்​றங்​கள் அதி​க​ரித்து வரு​கி​றது.​ காவல் நிலை​யங்​க​ளில் கூடு​த​லா​கக் காவ​லர்​களை நிய​மிக்க வேணும்.​ கட​லூர் கூத்​தப்​பாக்​கத்​தில் புதி​தா​கக் காவல் நிலை​யம் அமைக்க வேண்​டும்' என்​றும் கோரி​னர்.​ ​

                 கூட்​டத்​தில் வணி​கர்​கள் தரப்​பில் ஹோட்​டல் உரி​மை​யா​ளர்​கள் சங்க நிர்​வா​கி​கள் ஜனார்த்​த​னம்,​​ வெங்​க​ட​சுப்பு,​​ நகைக்​கடை உரி​மை​ய​ôளர்​கள் பாலு,​​ ராஜ​கோ​பால் உள்​ளிட்​டோர் பேசி​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior