உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

விழிப்புணர்வு குழுவினருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு

சிதம்பரம் :

            போலியோ விழிப்புணர்வு பேரணியாக புதுச் சேரியில் இருந்து நாகப் பட்டினம் வரை சென்றவர்களுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப் பட்டது. புதுச்சேரி ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்பணர்வு பேரணி புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் வரை சென்றது. சிதம்பரம் வந்த பேரணிக்கு சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் தலைவர் சஞ்சீவி, உறுப்பினர்கள் செந்தில்குமார், ரவி, செயலாளர் மாதவன் உள்ளிட் டோர் நினைவு பரிசு வழங்கினர்.

Read more »

நடராஜர் கோவில் உண்டியல் திறப்பு

சிதம்பரம் :

          சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியலில், 4 லட்சத்து 34 ஆயிரத்து 477 ரூபாய் வசூலாகியிருந்தது; இதுதவிர, வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. சிதம்பரம் நடராஜர் கோவில், பிப்., 2, 2009ல், அறநிலையத் துறை கட்டுப் பாட்டிற்கு கொண்டு வரப் பட்டு, 5ம் தேதி, காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டது. காணிக்கை அதிகரித்ததால், மேலும் ஐந்து இடங் களில் உண்டியல் வைக்கப் பட்டு, நேற்று, ஒன்பது உண்டியல்களும் திறக்கப் பட்டன. அதில், 4 லட்சத்து 34 ஆயிரத்து 477 ரூபாய் வசூலாகியிருந்தது; அத்துடன் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை நாட்டு கரன்சிகள் ஏராளமாக இருந்தன.இக்கோவிலை அரசு ஏற்று, ஓராண்டு நிறைவடைவதற்குள், ஐந்து முறை உண்டியல் திறக் கப்பட்டு, இதுவரை, 12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ரூபாய் வசூலாகியுள்ளது.

Read more »

பூலோகநாதர் கோவிலில் சிவ விஷ்ணு பஜனை

நெல்லிக்குப்பம் :

              நெல்லிக்குப்பத்தில் இன்று தனூர் மாத சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம் நடக்கிறது.நெல்லிக்குப்பத்தில் பழமையான பூலோகநாதர் கோவில் உள்ளது. இங்கு வெங்கடாஜலபதி சன்னதியும் உள்ளது. ஒரே இடத் தில் நின்றபடி சிவனையும், பெருமாளையும் தரிசிக்க முடிவது சிறப்பாகும். அனைத்து கோவில்களிலும் சிவன், விஷ்ணு பஜனைகள் தனித்தனியாக நடக்கும். இக்கோவிலில் மட்டும் தனூர் மாதத்தில் சிவன், விஷ்ணு பஜனை ஊர்வலம் ஒன்றாக நடக் கும். இன்று 9ம் தேதி காலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியே செல்கின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior