உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 09, 2010

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிரசவம்

நெல்லிக்குப்பம் :

                 மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியின் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்த முருகன் மனைவி ஆதிலட்சுமி (30). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவ வலியால் துடித்தார். அவரை 108 ஆம்புலன்சில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, காராமணிக்குப் பம் அருகே ஆதிலட்சுமிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் ஆம்புலன்ஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் பைலட் துரைராஜ், மருத் துவ உதவியாளர் அமலா ஆகியோர் ஆதிலட்சுமிக்கு பிரசவம் பார்த்தனர். சற்று நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய் மற்றும் சேயை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நெல்லிக்குப்பத்தில் உள்ள 108 ஆம்புலன்சில் இதுவரை 10 பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது.

Read more »

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு ரத ஊர்வலம்

கடலூர் :

           போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு ரத ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக் கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கிட பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட ரத ஊர்வலத்தை கலெக்டர் சீத்தாராமன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மீரா பங்கேற்றனர். டி.ஆர்.ஓ.. நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த ரதம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

Read more »

விழிப்புணர்வு குழுவினருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு

சிதம்பரம் :

            போலியோ விழிப்புணர்வு பேரணியாக புதுச் சேரியில் இருந்து நாகப் பட்டினம் வரை சென்றவர்களுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப் பட்டது. புதுச்சேரி ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்பணர்வு பேரணி புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் வரை சென்றது. சிதம்பரம் வந்த பேரணிக்கு சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் தலைவர் சஞ்சீவி, உறுப்பினர்கள் செந்தில்குமார், ரவி, செயலாளர் மாதவன் உள்ளிட் டோர் நினைவு பரிசு வழங்கினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior