உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

கடலூரில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் சிறைபிடித்து அபராதம் விதிப்பு

கடலூர்:

                  கடலூரில் போக்குவரத்திற்கு இடையூராக சாலைகளில் சுற்றித் திரிந்த 18 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் சிறை பிடித்தனர். மாட்டின் உரிமையாளர்களுக்கு தலா 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடலூர் நகரின் பிரதான சாலைகளான லாரன்ஸ் ரோடு, குத்தூசி குருசாமி சாலை, பாரதி சாலை, நேதாஜி சாலைகளிலும், பஸ் நிலையத்திலும் மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்று வந்துக் கொண்டிருந்தன. இதனால் போக்குவரத்து பாதிக் கப்பட்டதோடு, அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்ததை தொடர்ந்து, போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சேர்மன் தங்கராச, கமிஷனர் குமார் உத்தரவிட்டனர். அதன்பேரில் நகராட்சி ஆய்வாளர்கள் சக்திவேல், பத்மநாபன், ரங்கராஜ் ஆகியோர் நேற்று அதிரடியாக கடலூர் பஸ் நிலையம் மற்றும் லாரன்ஸ் ரோட்டில் சுற்றித் திரிந்த 18 மாடுகளை பிடித்து, மஞ்சக்குப்பம் பாபு கலையரங்கில் கட்டி வைத்துள்ளனர்.  மாடுகளை தேடி வந்த அதன் உரிமையாளர்களிடம் அபராதத் தொகை 250 ரூபாய் செலுத்திவிட்டு மாடுகளை ஓட்டிச் செல்லுமாறும், இனி வரும் காலங்களில் மாடுகளை வீடுகளில் கட்டி வளர்க்க அறிவுறுத்தினர். இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும் என்பதே மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Read more »

டாஸ்மாக் ஊழியர் கொலை : மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                   டாஸ்மாக் ஊழியர் கொலையை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை: 

                 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலை பள்ளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளர் முனியப்பன் அந்த கடையிலேயே படுகொலை செய் யப்பட்டுள்ளார். இச்செயலை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டித்தரும் டாஸ்மாக் பணியாளர்களின் பரிதாப நிலையை பரிசீலித்து பணியாளரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். தினமும் லட்சக்கணக்கில் பணத்தை கையாண்டு வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் டாஸ்மாக் ஊழியரின் படுகொலையை கண்டித்து அரசு பணியாளர் சங்கத்துடன் இணைக் கப்பட்டுள்ள டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத் தப்படும்.

Read more »

சாப்பிடும் போது தகராறு : இரண்டு பேர் கைது

புவனகிரி:

               ஓட்டலில் சாப்பிடும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். புவனகிரி அடுத்த ஆயிபுரத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கீரப்பாளையத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப் போது புருஷோத்தமனுக் கும், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த கீரப்பாளையம் ஆற்றங்கரை தெரு அம்மூர்த்தி (32) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அம்மூர்த்தி மற்றும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகனும் சேர்ந்து புருஷோத்தமனை இரும்பு பைப்பால் தாக்கினர். அதில் படுகாயமடைந்த புருஷோத்தமன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து அம்மூர்த்தி(32),வேல்முருகன் (26) ஆகியோரை கைது செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior