உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

ஜனாதிபதி விருது அதிகம் பெற்ற கடலூர் மாவட்டத்திற்கு பாராட்டு

சிதம்பரம் :

            மாநில அளவில் அதிக அளவில் ஜனாதிபதி விருது பெற்ற கடலூர் மாவட்டத்தை பாராட்டி முதன்மை கல்வி அலுவலருக்கு கேடயம் வழங்கப் பட்டது.மாநில அளவில் கடலூர் மாவட்ட சாரண, சாரணியர் அதிகமான எண் ணிக்கையில் ஜனாதிபதி விருது பெற்றதை பாராட்டி சென்னையில் நடந்த மாநில சாரண இயக்க பொதுக்குழு கூட் டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லிக்கு, மாநில சாரண துணை ஆணையர் லட்சுமி  கேடயம் வழங்கினார்.நிகழ்ச்சியில் சாரண செயலாளர் ராஜேந்திரன், மாநில சாரண ஆணையர் வசுந்தர தேவி, மாநில பொருளாளர் விஜயம், இளையகுமார் பங்கேற்றனர்.

Read more »

விழுப்புரம்- மயிலாடுதுறை சரக்கு ரயில் 3 முறை இயக்கம்

கடலூர் :

                   விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் நேற்று ஒரே நாளில் மூன்று முறை சரக்கு ரயில் இயக்கப்பட்டது. விழுப்புரம்-மயிலாடுதுறை 122 கிலோ மீட்டர் தூரம் மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல பாதையாக மாற் றும் பணி கடந்த 2006ம் ஆண்டு 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது. ரயில்பாதை பணி முடிவடைந்ததை தொடர்ந்து இலகு ரக இன்ஜின் சோதனை ஓட்டம் நடத் தப்பட்டது.

                        கடந்த 5ம் தேதி இரண்டு சரக்கு ரயிலும், 7 மற்றும் 17ம் தேதிகளில் தலா ஒரு சரக்கு ரயில் இயக்கப்பட் டது. நேற்று ஐந்தாவது முறையாக மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு சரக்கு ரயில் இயக்கப்பட் டது. மயிலாடுதுறையில் காலை  7.30 மணிக்கு 45 காலி வேகன்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காலை 9.58 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷனை கடந்து விழுப்புரம் சென்றது. பின் விழுப்புரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட சரக்கு ரயில் மாலை 3.20 மணிக்கு கடலூரை கடந்து கும்பகோணம் சென்றது. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வருவதற்காக தஞ்சாவூருக்கு மற்றொரு சரக்கு ரயில் இயக்கப்பட்டது.

Read more »

தனியார் பள்ளி மழைநீர் சேகரிப்பு தொட்டி இடிந்து விழுந்து எல்.கே.ஜி., மாணவன் சாவு

பரங்கிப்பேட்டை :

                       சிதம்பரம் அருகே தனியார் பள்ளி மழைநீர் சேகரிப்பு தொட் டியில், நான்கு பள்ளி சிறுவர்கள் விழுந்ததில் ஒருவர் இறந்தார்; மூவர் காயமடைந்தனர். பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக் கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

                          சிதம்பரம் அடுத்த பரங்கிப் பேட்டை கரிக்குப்பத்தில் மர் ஹபா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது.  நேற்று காலை 11.30 மணிக்கு இடைவேளை நேரத் தில் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., மாணவர்கள் பள்ளியின் பின்புறம் உள்ள தோட் டத் தில் விளையாடினர். சில மாணவர்கள், மழைநீர் சேகரிப்பு தொட்டி மீது நின்று விளையாடியபோது திடீரென தொட்டியின் சிலாப் உடைந்து உள் வாங்கியது.சிலாப் மீது நின்றிருந்த எல்.கே.ஜி., மாணவர் சுதன், யு.கே.ஜி., மாணவர்கள் மகாஷி, தீபிகா, திவாகர் ஆகியோர் ஆறு அடி ஆழமுள்ள மழைநீர் தொட்டியின் உள்ளே விழுந்தனர். மாணவர்களின் அலறல் சத் தம் கேட்டு எல்.கே.ஜி., ஆசிரியை சுரேஷ்குமாரி, நான்கு மாணவர்களையும் காப்பாற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மாணவர் சுதன் இறந்தார். மற்ற மூன்று மாணவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக் கப் பட்டு வருகிறது.மாணவர் சுதன் இறந்ததால் பள்ளிக்கு விடுமுறை அறிவித்துவிட்டு, பள்ளி நிர்வாகத்தினர் தலைமறைவாகினர்.

                    தகவலறிந்த பெற்றோர் அலறி அடித்து ஓடி வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.இறந்த மாணவர் சுதன், சின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆவேசத்துடன் பள்ளிக்கு சென் றனர். அவர்களை, பரங்கிப் பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சமாதானம் செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், மாணவர் சுதன் இறப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசு மருத்துவமனை முன் சின்னூர் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதையேற்று மறியல் கைவிடப்பட்டது. பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

                      காரணம் இது தான்: பள்ளி கட்டடத்தில் இருந்து  20 அடி தூரத்தில் மழை நீர் சேகரிப்பு தொட்டி உள்ளது. பள்ளி கட்டடத்தில் விழும் மழைநீர் அங்கு செல்ல பைப் இணைப்பு எதுவும் இல்லை. தரமாகவும் கட்டவில்லை. இதனால், பள்ளி சிறுவர்கள் மேலே ஏறி விளையாடிய போது உள் வாங்கியுள்ளது. பள்ளி எதிரே விளையாட இடம் இருந்தும், பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை பள்ளிக்கு பின்னால் சென்று விளையாட கூறியதே இந்த விபத்திற்கு முக்கிய காரணம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior