உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

கவுன்சிலர்களுக்கு தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றம்

கடலூர் :

                          எங்களுக்கு தெரியாமல் தீர்மானங்கள் நிறைவேற் றப்படுவதாக கடலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.கடலூர் ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் சாந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் காசிராஜன், பி.டி.ஓ., க்கள் சீனிவாசன், பத்மநாபன் மற்றும் கவுன் சிலர்கள் பங்கேற்றனர். தே.மு.தி.க., குருநாதன் பேசுகையில், குமளங் குளம் ஊராட்சியில் போர் வெல்கள் அடிக்கடி பழுதாகிறது. மக்கள் குடிநீருக்கு அவதிபடுகின்றனர். சரிசெய்யவில்லை எனில் மக் களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனறார். இதற்கு, அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என சேர்மன் பதில் அளித்தார். மா.கம்யூ., தட்சணாமூர்த்தி பேசுகையில், கவுன்சிலர்களுக்கு தெரியாமலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. ஒன்றிய கட்டடம் கட்டும் பணி இதுவரை துவங்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை திறந்த வெளியில் நடத்த வேண்டும் என்றார். இதற்கு சேர்மன், புதிய கட் டடம் கட்ட ஊரக வளர்ச் சித்துறை சார்பில் ஒன் னரை கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளதால், மூன்று மாதங்களில் பணி துவங்கும் என்றார்.

                                தே.மு.தி.க.,  அய்யனார் பேசுகையில், திருவந்திபுரம்-ஓட்டேரி சாலையில் கல்வெர்ட்டுகள் அமைக்க இரண்டு பக்கமும் தோண்டப்பட்ட பள்ளங்கள் பணி முடிந்தும் மூடவில்லை. இதனால் அப்பகுதியில் ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய் யும் நெல்லை வெளியே கொண்டு வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் என்றார். இதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். கூட்டத்தில் மழையில் இடிந்த ஒன்றிய அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணியை அரசு விரைவில் துவக்க வேண் டும். வெள்ளக்கரை குறவன்பாளையம் காலனியில் சிமென்ட் பைப் லைன், கல்வெர்ட் அமைக்க 40,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ராமாபுரம் ஊராட்சி வண்டிக் குப்பத்தில் சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தை சமப்படுத்தும் பணியை மேற்கொள்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

நேரடி நெல் கொள்முதல் நிலையம் சேத்தியாதோப்பில் திறக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு :

                   சேத்தியாதோப்பு பகுதியில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களை விரைவாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

                        சிதம்பரம், காட்டுமன் னார்குடி தாலுகாவில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கலெக்டர் அறிவித்தார். இப்பகுதியில் அறுவடை துவங்கி 15 நாட் களுக்கு மேலாகியும் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. குறிப்பாக சேத்தியா தோப்பு குறுக்கு ரோடு, வீரமுடையாநத்தம் பகுதியில் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை நெல்லை தனியாரிடம் அவர்கள் நிர்ணயம் செய்யும் விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

                    மேலும் சேத்தியா தோப்பில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் பெயரளவிற்கு இயங்குவதாலும் மாவட்ட விற்பனை குழுவின் அலட்சியத்தாலும் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பொருட்கள் கொண்டு வர அஞ்சுகின்றனர். இதனால் தனியார் நெல் மற்றும் தானிய விற்பனையாளர்களின் பிடியால் சிக்கி விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெ

Read more »

சொட்டு நீர் பாசன விவசாயிகள் அதிர்ச்சி! அரசின் தவறான தகவலால் வேதனை

நெல்லிக்குப்பம் :

                 தமிழக அரசின் தவறான தகவலால் சொட்டுநீர் பாசன விவசாயிகள் வேதனை அடைந்துள் ளனர். தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளுக்கு முன் பு ஏரி, குளங்கள் இல்லாத ஊர்களே இல்லை என்ற  நிலை இருந்தது. மழைக்காலங்களில் ஏரி, குளங்களில் சேரும் நீர் ஆண்டு முழுவதும் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஆழ் துளை கிணறுகளில் மின் மோட்டார் மூலம் விவசாயம் நல்ல முறையில் நடந்தது. நாளடைவில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்வழிகளை விவசாயிகளும், மக்களும் ஆக்கிரமித்தனர். பல ஆயிரம் ஏரி, குளங்கள் காணாமல் போயின. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதித்தது. ஆற்றில் நடக் கும் மணல் கொள்ளையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. மின் பற்றாக்குறையால் விவசாயம் செய்வதை பலர் தவிர்த்து பிளாட் போட நிலங்களை விற்க துவங்கினர். மொத்த விவசாய நிலப்பரப்பில் 25 சதவீதம் மனைகளாகவும், தரிசு நிலங்களாகவும் மாறின. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், இலவசங்களால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. கரும்பு போன்ற பயிர்களுக்கு நடவு முதல் அறுவடை வரை வேலை ஆட்கள் அதிகம் தேவை. தண்ணீர் பாய்ச்சுவது, உரம் வைப்பது போன்ற பணிகளும் மிகவும் சிரமம்.

                வழக்கமான இரண் டரை அடிக்கு பதிலாக ஐந்தடி இடைவெளியில் கரும்பு நட பரிந்துரை செய் தனர். அவ்வாறு நடவு செய்தால்  சிறிய டிராக்டர் மூலம் களை எடுத்தல், மண் அணைத்தல் பணிகளை செய்ய முடியும். இம்முறையையும் தண்ணீர் பாய்ச்சுவது, உரமிடுதல் சிரமமானது. இதை தவிர்க்க கரும்பு பயிரில் சொட்டுநீர் பாசனம் செய்ய பரிந்துரை செய்தனர். சொட்டுநீர் பாசன முறையில் கரும்பு நடவு செய்தால் இடைவெளியில் களை வளராது. உரமிடுதல் எளிது. தண்ணீர் பாய்ச்சுவதும் சுலபம். இயந்திரம் மூலம் அறுவடை செய்யலாம். இதன் நன்மைகள் கருதி சொட்டுநீர் அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டினர். ஒரு ஏக்கரில் சொட்டுநீர் முறை அமைக்க 43 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதில் பில்டர் டேங்க், உர டாங்குகள் பொருத்தப்படும். கூடுதலான ஏக்கரில் அமைத்தால் இந்த டாங்குகள் செலவு குறையும். சொட்டுநீர் அமைக்க அதிகம் செலவாவதால் வேலை குறைவாக இருந் தாலும் அம்முறைக்கு செல்ல விவசாயிகள் தயங்கினர். அதனையொட்டி அரசு சொட்டுநீர் பாசனத்தை ஊக்குவித்திட ஐம்பதில் இருந்து 65 சதவீதமாக மானியத்தை உயர்த்தியது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சொட்டுநீர் கம்பெனிகளை அணுகியவுடன்தான் அதிர்ச்சியடைந்தனர்.

                    ஒரு ஏக்கரில் சொட்டுநீர் அமைக்கும் செலவில் 65 சதவீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபாய் இதில் எது குறைவோ அத்தொகையே மானியமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அங்கீகரித்து சொட்டுநீர் கம்பெனி உதிரி பாகங்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்கிறது. ஒரு ஏக்கருக்கு 43 ஆயிரம் செலவாகிறது. 65 சதவீதம் மானியம் என்றால் 28 ஆயிரம் ரூபாய் வருகிறது.

               அரசு தருவதோ 14 ஆயிரத்து 500 மட்டுமே. அரசு அறிவித்து 65 சதவீத மானியத்தை எந்த கட்டுபாடும் இல்லாமல் வழங்கினால் மட்டுமே விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க முடியும். தமிழக அரசு பரிசீலனை செய்து முறையாக 65 சதவீத மானியம் கிடைக்க வழி செய்தால் மட்டுமே அழிவின் விளிம்புக்கு சென்று கொண்டிருக்கும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior