உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

மின்கம்பி திருட்டு

பண்ருட்டி : 

                   மின் கம்பியை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி அடுத்த அம்மாபேட்டையில் உள்ள டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் 850 மீட்டர் அலுமினிய கம்பியை கடந்த 21ம் தேதி மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதன் மதிப்பு மூவாயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து உதவி மின் பொறியாளர் சிவக் குமார் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Read more »

அறுவை சிகிச்சையில் இறந்த குழந்தையின் உடல் பரிசோதனை செய்வதில் சிக்கல்

திட்டக்குடி : 

                  அறுவை சிகிச்சையால் இறந்த குழந் தையின் உடலை பரிசோதனை செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
 
                 திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (28). இவரது 15 மாத குழந்தை சந்தோசின் ஆணுறுப்பு வீங்கியது. உடன் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு 30ம் தேதி அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில் இறந்தார். பின்னர் குழந்தையின் உடன் அவரது சொந்த கிராமத்தில் புதைக்கப்பட்டது.
 
             இந்நிலையில் குழந்தையின் தந்தை ராஜா டாக்டரின் தவறான அறுவை சிகிச் சையால் குழந்தை இறந்துவிட்டதாக நேற்று முன்தினம் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ஆனினங்குடியில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்திட அனுமதிகோரி திட்டக்குடி தாசில்தாருக்கு மனு கொடுத்தார். இந்நிலையில் குழந்தையின் தந்தை ராஜாவின் நிபந்தனையின்படி, சிறப்பு குழந்தை நல டாக்டர், சிறுநீரகவியல் துறை நிபுணர்கள், ரசாயன நிபுணர்கள் இங்கு பணியாற்றாத காரணத்தினால் பிரேத பரிசோதனை செய்திட இயலாது என திட்டக்குடி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந் துரை செய்து தாசில்தார் கண்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் குழந்தையின் உடலை பரிசோதனை செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

Read more »

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை பெற இருப்பிட சான்று கோரி மனைவி விண்ணப்பம்

திட்டக்குடி : 

             வெளி நாட்டில் இறந்த கணவரின் உடலைப் பெற, இருப்பிட சான்று கோரி அவரது மனைவி, தாசில்தாரிடம் மனு அளித்தார்.

              மங்களூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (37). இவருக்கு வளர் மதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பக்ரைன் நாட்டிற்கு கூலி வேலைக்காக சென்ற கணேசன், கடந்த 5ம் தேதி எதிர்பாராமல் இறந்தார். இது குறித்து கணேசனின் மனைவி வளர்மதிக்கு பக்ரைன் நாட்டிலிருந்து போனில் தகவல் தெரிவிக்கப் பட்டது. தனது கணவர் கணேசன் உடலைப் பெற்று இறுதி சடங்கு செய்திட, இருப்பிட சான்று கோரி திட்டக்குடி தாசில்தார் கண்ணனிடம், நேற்று காலை வளர்மதி விண்ணப்பம் கொடுத்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior