உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

மூவரை தாக்கிய இருவருக்கு வலை

சிதம்பரம் : 

                    அரிசி கடை உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை சேர்ந்த ரத்தினசபாபதி வடக்கு மெயின் ரோட்டில் அரிசி கடை வைத்துள்ளார். இவரது கடை ஊழியர் பழனிசாமி மூன்று சக்கர சைக்கிளில் அரிசி மூட்டைகளை கடைக்கு ஏற்றிக் கொண்டு வந்தார். கூத்தாடும் பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது அனந்தீஸ்வரன் கோவில் தெரு வெள்ளையன் மகன் பிரபு, எடத்தெரு நடராஜன் மகன் கணேசன் இருவரும் பழனிசாமியை வழிமறித்து அரிசி மூட்டைகளை இறக்கும்படி கூறி தாக்கினர்.தகவலறிந்த ரத்தினசபாபதி மற்றும் சிவக்குமார் இருவரும் சென்று தட்டிகேட்டனர். அவர்களையும் உருட்டு கட்டையால் தாக்கினர். காயமடைந்த மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பிரபு, கணேசன் இருவரையும் தேடி வருகின்றனர்.

Read more »

மைத்துனரை தாக்கியவருக்கு வலை

சிதம்பரம் : 

           கணவன், மனைவி தகராறை தட்டி கேட்ட மைத்துனர் தாக்கப்பட்டார். சிதம்பரம் சின்ன மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர்கள் பாலு. இவரது மனைவி காந்திமதி. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அறிந்த காந்திமதியின் சகோதரின் கணவர் முருகன், பாலுவை கண்டித்தார். அதில் ஆத்திரமடைந்த பாலு, எனது குடும்ப பிரச்னையில் நீ ஏன் தலையிடுகிறாய் எனக் கேட்டு தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பாலுவை தேடி வருகின்றனர்.

Read more »

திங்கள், பிப்ரவரி 08, 2010

சிறுபாக்கத்தில் நாய்கடி மருந்துகள் இருப்பு வைக்க கோரிக்கை

சிறுபாக்கம் : 

              மங்களூர் ஒன்றியம் சிறுபாக்கம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்களின் அவரச கூட்டம் நடந்தது.
 
            ஊராட்சி தலைவர் செந்தாமரைகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். உதவியாளர் பாபுதுரை வரவேற்றார். சிறுபாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தட்டுப்பாடின்றி நாய்கடி மருந்துகள் இருப்பு வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஊராட்சியில் உள்ள தெருக்களில் சுற் றித்திரியும் வெறிநாய்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்கு கூட்டங் களை பிடித்து காப்பு காடுகளில் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
                     திட்டக்குடியில் இருந்து மங்களூர், ஒரங்கூர், கள்ளக்குறிச்சியில் இருந்து மாங்குளம், எஸ்.நரையூர், விருத்தாசலத்தில் இருந்து ரெட்டாக்குறிச்சி, பொயனப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் அரசு டவுன் பஸ்களை திட்டக்குடி தாலுகாவின் குறுவட்ட மைய தலைமை இடமான சிறுபாக்கம் வரையில் நீட்டிப்பு செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சிறுபாக்கம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior