உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

கரும்பு வயலில் தீ: ரூ.50 ஆயிரம் சேதம்

சிறுபாக்கம் : 

                கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்பிலான கரும்பு பயிர் எரிந்து நாசமானது. வேப்பூர் அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த கரும்பு பயிர் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய (பொறுப்பு) அலுவலர் மனோகரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கரும்பு எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

பூச்சி மருந்து குடித்து மூதாட்டி சாவு

பரங்கிப்பேட்டை : 

               வயிற்று வலியால் அவதிப்பட்ட மூதாட்டி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். 

                    புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி ராஜகுமாரி (65). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. தொடர் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியடைந்த ராஜகுமாரி கடந்த 5ம் தேதி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

தே.மு.தி.க., கொடிகம்பம் மாயம்

பரங்கிப்பேட்டை : 

               புதுச்சத்திரம் அருகே தே.மு.தி.க., கொடி கம் பத்தை மர்ம ஆசாமிகள் வெட்டி எடுத்து சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு மாதாக் கோவில் அருகே தே.மு.தி.க., கொடி கம்பம் இருந்தது. கடந்த 4ம் தேதி யாரோ மர்ம ஆசாமிகள் கொடிகம்பத்தை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். காலையில் கொடிகம்பத்தை காணாததால் செயலாளர் சந்திரசேகர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior