உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

காட்டு தேனீக்கள் அழிப்பு


ராமநத்தம் :

           ராமநத்தம் அருகே வேப்ப மரத்தில் கூடு கட்டியிருந்த ராட்சத காட்டு தேனீக்களை தீயணைப்பு துறையினர் அழித்தனர். ராமநத்தம் அடுத்த ஆவட்டி கிராமத்தில் ஏரிக்கரையோரம் திரவுபதை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறமுள்ள வேப்ப மரத்தில் ராட்சத காட்டு தேனீக்கள் கூடு கட்டி வழியில் செல்வோரையும், கால்நடைகளையும் கடித்து அச்சுறுத்தி வந்தது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இரண்டு மணி நேரம் போராடி தேனீக்கூட்டினை அழித்தனர்.

Read more »

ஊருக்குள் நுழைந்த முதலை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

சிதம்பரம் : 

                 சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை அருகே பிள்ளை முத்தாப்பிள்ளை சாவடி கிராமத்தில் நேற்று அதிகாலை முதலை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள வாய்க்காலில் முதலை இறங்கியதை சிலர் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கிராம பொது மக்கள், இளைஞர்கள் பலர் ஒன்று கூடி முதலையை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். முதலையை மடக்கி பிடித்து ஊர் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டிப்போட்டு சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் இருந்து முதலையை மீட்டு சிதம்பரம் அடுத்த வக்காரமாரி நீர் தேக்கக் குளத்தில் விட்டனர். பிடிபட்ட முதலை 12 அடி நீளமும் 500 கிலோ எடையும் இருந்தது.

Read more »

எனதிரிமங்கலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பண்ருட்டி : 

                 பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் கிராமத்தில் இரும்பு வேலியில் சட்டையை மாட்டிய போது மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார். பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் எம்.ஜி. ஆர்., நகரை சேர்ந்தவர் பத்மநாபன்(42). இவரது நிலம் எனதிரிமங்கலம் - கரும்பூர் மெயின் ரோட்டில் உள்ளது. இவரது நிலத்தையொட்டி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமியின் பண்ணை தோட்டம்  உள்ளது. நேற்று காலை பத்மநாபன் தனது நிலத்தில் நெல் நாற்று விடுவதற்கு தனது மகள் ரஞ்சிதா (10) வுடன் சென்றார். நிலத்தையொட்டி உள்ள பண்ணைதோட் டத்தின் இரும்பு முள்வேலியில் தனது சட்டையை கழற்றி மாட்டினார். அப்போது முள்வேலியில் இருந்து   பத்மநாபன் மீது மின்சாரம் தாக்கியது. அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா சத்தம் போட்டார்.  அருகில் நிலத்தில் வேலை செய்தவர்கள் பத்மநாபனை  மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக் குக் கொண்டு வந்தனர். பத்மநாபனை பரிசோதித்த டாக்டர்  அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
 
                  இதுகுறித்து  புதுப்பேட்டை போலீசார், இரும்பு வேலியில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது என வழக்குப் பதிந்து விசாரித்தனர்.  இந்நிலையில் பத்மநாபன் இறப்பிற்கு ஆதிபராசக்தி பண்ணை தோட்டம் முழுவதும் மின் வேலி அமைத்துள்ளதால் அதிலிருந்து மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்  என பத்மநாபனின் அண் ணன் கலியமூர்த்தி புதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior