உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

உண்டு உறைவிடப் பள்ளியில் எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., ஆய்வு

ராமநத்தம் : 

                    தொழுதூர் கஸ்தூரி பாய் காந்தி பாலிகா உண்டு உறைவிடப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்ட சி.இ.ஓ., கதிர்வேலு ஆய்வு செய்தார். ஆய்வில் மாணவிகளுக்கு தையல், இசை, யோகா, ஆங்கிலம், தமிழ், புவியியல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பாடங்கள் குறித்து மாணவிகளிடம் கேள்விகள் கேட்டும், இசை, யோகா உள்ளிட்டவைகளை செய்ய கோரியும் ஆய்வு செய்தார். பின்னர் விடுதியில் வழங்கப்படும் உணவு, உடை குறித்து மாணவிகளிடம் விசாரித்தார். அப்போது ஏ.டி. பி.சி., செல்வம், வட்டார மேற்பார்வையாளர்கள் மங்களூர் முருகேசன், விருத்தாசலம் அந்தோணிசாமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் மணிகண்டன், சரஸ்வதி, உண்டு உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியை பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

மஞ்சள் நிற குடிநீர் : நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்வதில்லை என புகார்

கடலூர் :

               கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் தண்ணீர் மஞ்சள் நிறமாக வருவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை நேற்று ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.கடலூர் மஞ்சக்குப்பம் பகுதி முழுவதுக்கும் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகில் உள்ள நகராட்சி நீரேற்று உந்து நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.இத்தொட்டியை பராமரிக்க கான் டராக்ட் விடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறைதான் சுத்தம் செய்கின்றனர். அதுவும் ஒவ்வொரு முறையும் குடிநீர் மஞ்சள் கலரில் வருகிறது என புகார் அளித்த பிறகுதான் சுத்தம் செய் கின் றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
 
              கடந்த ஒரு மாதமாக மஞ்சக்குப் பம் பகுதியில் தண்ணீர் மஞ்சள் கலரில் வந்துள்ளது. நகராட்சியில் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று குடிநீர் தொட் டியை சுத்தம் செய்தனர். அப்போது தொட்டியில் பாசி படிந்து இரும்பு துகள்களுடன் மஞ்சள் கலரில் தண் ணீரை வெளியேற்றி சுத்தம் செய்தனர்.
 
                இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதில் சுணக்கம் காட்டினால் காலரா உள்ளிட்ட கொடிய நோய் தாக்க கூடும் என்பதை நகராட்சி நிர்வாகம் அறிந்தும் 3 மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது வேதனையான விஷயம்.

Read more »

லாரி மோதி ஒருவர் பலி

சேத்தியாத்தோப்பு : 

                   சேத்தியாத்தோப்பு அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். காட்டுமன்னார் கோவிலை அடுத்த உடையார்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்  செல்வமணி (28). ஓமாம்புலியூர் ராமலிங்கம் மகன் ஞானசேகர் (36) இருவரும் ஒவனகிரிக்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஒரத்தூரை அடுத்த கிளியனூரில் வந்து கொண் டிருந்தபோது, சிதம்பரத்திலிருந்து மணல் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிளில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு செல்வமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ஞானசேகரன் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior