உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

ஆர்ப்பாட்டத்தில் ஜெ., பங்கேற்பு மாவட்ட செயலாளர் அழைப்பு

பரங்கிப்பேட்டை : 

                விழுப்புரத்தில் ஜெ., தலைமையில் நடைபெறவுள்ள போராட்டத்தை சீர்குலைக்க முதல்வர் கருணாநிதி முயற்சிப்பதாக அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பேசினார்.
            பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் பு.முட்லூரில் நடந்தது. ஒன்றிய செயலா ளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., செல்விராமஜெயம், முன்னாள் எம். எல்.ஏ., அருள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பேசுகையில்,ஜெயலலிதாவின் டில்லி பயணத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் திரும்பி பார்க்கின்றனர். கரும்பு விலையை உயர்த்தக்கோரி வரும் 13ம் தேதி ஜெயலலிதா விழுப் புரத்தில் ஆர்ப்பாட்டம் செய்கிறார். அந்த ஆர்ப் பாட்டத்திற்கு பரங்கிப் பேட்டை ஒன்றியத்தில் இருந்து அதிகளவில் பங்கேற்க வேண்டும்.இந்த போராட்டத்தை சீர்குலைக்க கருணாநிதி முயற்சி செய்கிறார். அதனால் நம் தொண்டர்களை காலையிலேயே விழுப்புரத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும். விவசாயிகள், பொதுமக்களையும் பங்கேற்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர்கள் மாரிமுத்து, விஜயன், மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம்,  ஊராட்சி செயலாளர்கள் ரமேஷ், வேலு, அருள்மணி, மோகன்ராஜ், இளைஞரணி துணை செயலாளர் வீரபாண்டியன், ஜெ., பேரவை நகர செயலாளர் வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Read more »

திட்டக்குடி அருகே பிச்சையெடுத்த சிறுவன் உண்டு, உறைவிடப் பள்ளியில் சேர்க்கை

திட்டக்குடி : 

             திட்டக்குடி அருகே பிச்சையெடுத்த சிறுவனை மீட்டு உண்டு, உறைவிடப் பள்ளியில் சேர்த்தனர்.
 
                திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்த ராயப்பன் மகன் விஜயராஜ் (13). பூ வியாபாரியான இவரது பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், உறவினர் ஆதரவில் வளர்ந்து வந்தான்.  இந்நிலையில் நேற்று மதியம்  அகரம் சீகூர் (திட்டக்குடி பார்டர்) பகுதிகளிலுள்ள கடைகளில் பிச்சையெடுத்து கொண்டிருந்தான்.அங்கு டெய்லர் கடை நடத்தி வரும் ராஜேந்திரன், சிறுவன் விஜயராஜிடம் விபரத்தினை கேட்டு, அவனது உறவினரை சந்தித்து பேசினார். பின்னர் திட்டக்குடியிலுள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட ஆசிரிய பயிற்றுனர்கள் வடிவேலு, ரமேஷ் ஆகியோரிடம் அழைத்து சென்றார். அவர்களது ஆலோசனையின்பேரில் இடைச் செருவாய் வட்டார வளமையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மங்களூர் ஒன்றிய மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டான். அடரி கிராமத்தில் இயங்கி வரும் இலவச உண்டு, உறைவிடப்பள்ளியில் விஜயராஜை சேர்த்தனர். சிறுவனை மீட்டு ஒப்படைத்த டெய்லர் ராஜேந்திரனை எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் பாராட்டினர்.

Read more »

வெலிங்டன் ஏரியில் மண் கடத்த முயற்சி

ராமநத்தம் : 

         வெலிங்டன் ஏரியில் மண் கடத்த  முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
              திட்டக்குடி வெலிங்டன் ஏரி கரை சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அதில் ஐவனூர் பகுதியில் ஏரியிலிருந்து மண் கடத்துவதாக தாசில்தாருக்க தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஏரியில் மண்ணை  கடத்த முயன்ற டிராக்டரை ஐவனூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துராமன் பறிமுதல் செய்ய முயன்றார். உடன் டிராக்டர் டிரைவர் மண்ணை கொட்டிவிட்டு டிராக்டருடன் தப்பிச் சென்றார். ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior