உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

தீயில் சிக்கிய தம்பதியினர் சிகிச்சை பலனின்றி பலி


திட்டக்குடி : 

                தீயில் கருகிய தம்பதியினர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த முருகன்குடியை சேர்ந்தவர் சீமான் மனைவி வேம்பாயி (35). இவர் கடந்த 24ம் தேதி வீட்டில் சமையல் செய்தபோது, எதிர்பாராமல் அவர் மீது தீ பரவியது. இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சீமான் தீயை அணைக்க முயன்றார். அதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கடந்த 26ம் தேதி வேம்பாயியும், நேற்று முன்தினம் சீமானும் இறந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதுகுறித்து வேம்பாயி தந்தை ராஜாங்கம் கொடுத்த புகாரின் பேரில்  பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

இரு மாணவர்களை காணவில்லை : தீயணைப்பு வீரர்கள் தேடுதல்

சிதம்பரம் : 

                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மாணவர்கள் இருவரை காணவில்லை என்ற தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் நேற்றிரவு பாலமான் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு மாணவர் கவுதம்குமார் (20) நேற்று முன்தினம் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் அவர் அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதையறிந்து ஆவேசமடைந்த சக மாணவர்கள் பல்கலை தேர்வுத்துறை அலுவலகம், மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு, அங்கு நின்றிருந்த வாகனங்களை உடைத்தனர். அவர்களை போலீசார் விரட்டினர்.அதில் மாணவர்கள் பலர் அருகில் உள்ள பாலமான் ஆற்றில் குதித்து தப்பினர். அவர்களில்  இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் சுமித்குமார் (22) இறந்தார். இந்த சம்பவங்களினால் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் விரட்டியதில் ஆற்றில் குதித்த மாணவர்களில் இருவரை காணவில்லை என்ற தகவல் நேற்று மாலை பரவியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு தீயணைப்பு படையினர் பாலமான் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இதனால் பல்கலை பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Read more »

ரேடியோ செட் கட்டுவதில் தகராறு மூவர் காயம்; ஆறு பேருக்கு வலை


கடலூர் : 

                      கோவில் திருவிழாவில் ரேடியோ செட் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மூவர் காயமடைந்தனர். ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அடுத்த எஸ்.புதூர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மாசி மகத்தையொட்டி அம்மன் கோவிலில் மூன்று ஸ்பீக்கருடன் ரேடியோ செட் கட்ட பில்லாளி தொட்டியைச் சேர்ந்த சொக்கலிங்கத்திடம் முன்பணம் கொடுத்திருந்தார்.  ஆனால் சொக்கலிங்கம் ஒரு ஸ்பீக்கருடன் ரேடியோ செட்டை கட்டினார். அதனை மணிகண்டன் தட்டிக் கேட்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தங்கராசு உள்ளிட்டோர் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர்களை தாக்கினர்.அதில் காயமடைந்த மணிகண்டன், முருகன், முத்துக்கிருஷ்ணன் மூவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து தங்கராசு, விஜி, அஞ்சாபுலி, சுந்தர்ராஜன், பிரபு, சந்திரசேகர் ஆகிய 6 பேரை தேடிவருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior