உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

கடலூர் முதுநகரில் தெப்பல் உற்சவம்

கடலூர் : 

           கடலூர் முதுநகரில் மாசிமகத்தையொட்டி வாண வேடிக்கைகளுடன் தெப்பல் உற்சவம் நடந்தது.
                கடலூரில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவையொட்டி தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், சிங்காரத் தோப்பு வெள்ளரி அம் மன், அக்கரைகோரி கண்ணனூர் அம்மன், சலங்கைகார தெரு நாகமுத்தாலம்மன் கோவில்களிலிருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் மீன்பிடி தளத்திற்கு படகு மூலம் கொண்டு வரப்பட்டது. வாண வேடிக்கைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் சுவாமி தரிசனத்தைத் தொடர்ந்து  மீண்டும் கோவிலுக்கு  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதேப்போன்று தைக்கால் தோணித்துறை ஆற்றில் கருப்பு முத்தம்மன் சுவாமி தெப்பல் உற்சவமும் நடந்தது .கடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read more »

குருகுலம் பள்ளி மாணவர்கள் ஆயிரம் புத்தகங்கள் அன்பளிப்பு


குறிஞ்சிப்பாடி : 

                    வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூலகத்திற்கு  ஆயிரம் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர். வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் நினைவாக சென்னையில் புதியதாக அமைக்கப் பட்டு வரும் ஆசியாவிலேயே பெரிய நூலகமான அண்ணா நூலகத் திற்கு தங்கள் சார்பில் 5 ஆயிரம் புத்தகங்கள் அன் ளிப் பாக வழங்க முடிவு செய்து முதல் கட்டமாக ஆயிரம் புத்தகங்களை விலைக்கு வாங்கி அவற்றை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கணேசமூர்த்தி முன்னிலையில் வள்ளலார் குருகுலம் பள்ளி தாளாளர் டாக்டர் செல்வராஜிடம் ஒப்படைத்தனர். மேலும் 4 ஆயிரம் புத்தகங்கள் வாங்கவும் திட்டமிட்டுள்ளனர். 

மேலும் பள்ளி தாளாளர் செல்வராஜ் கூறுகையில்: 

             பள்ளி மாணவர்கள் சார்பில் 5 ஆயிரம் புத்தகங்களும், நிர்வாகத்தின் சார்பில் 5 ஆயிரம் புத்தகங்களும் சேகரித்து  அமைச்சர் பன்னீர்செல்வம் மூலம் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூலகத்திற்கு தங்கள் சார்பில் 10 ஆயிரம் புத்தகங்களை வழங்க இருக்கிறோம் என்றார்.

Read more »

வைத்தியநாத சுவாமி கோவிலில் குத்துவிளக்கு பூஜை


திட்டக்குடி : 

                திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலில் மாசிமக மகா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு குத்துவிளக்கு பூஜை மற்றும் 210 சித்தர்களுக்கான சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.
 
               கோவில் கும்பாபிஷேக திருப்பணி விரைவில் நடைபெறவும், உலக அமைதி, மனித நேயம், இயற்கை வளம், மத நல்லிணக்கம் வேண்டி 160 சுமங்கலி மற்றும் இளம் பெண்கள் இணைந்து சிறப்பு குத்துவிளக்கு பூஜை செய்தனர். இதனை மாதாஜி ரோகினி ராஜ்குமார் துவக்கி வைத்தார்.பெரம்பலூர் சித்தர் ராஜ்குமார் குருஜி பக்தர்களுக்கு வேள்வி பூஜையுடன், ஆன்மிக உபதேசமும், சித்தர்கள் பூஜையை நடத்தி வைத்தார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் யோகா மாஸ்டர்கள் ரஷ்யா ஹலேக், மாஸ்கோ உல்டி கலந்து கொண்டு வைத்தியநாத சுவாமியை வழிபட்டனர். விழாவில் தொழிலதிபர் ராஜன், பேரூராட்சி தலைவர் மன்னன், துணைத்தலைவர் கமலி, திருப்பணிக்குழு கிருஷ் ணன், சிவக்குமார், வேணுகோபால், பாலகிருஷ் ணன், இந்து முன்னணி நகர தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior