உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

இறந்த மாணவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


சிதம்பரம் : 

                     போலீஸ் விரட்டியதில் வாய்க்காலில் விழுந்து இறந்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப் பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் இன்ஜினியரிங் படித்த கவுதம்குமார் (20) 28ம் தேதி விபத்தில் இறந்தார். ஆத்திரமடைந்த சக மாணவர்கள் செய்த ரகளையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். தப்பியோடிய மாணவர்கள் பாலமான் வாய்க்காலில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் இறந்தனர்.

                   ஜார்கண்ட் மாநில மாணவர் சுமித்குமார் உடல் நேற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை கண்டு அவரது அண்ணன் சதிஷ்குமார் கதறி அழுதார். உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதாக கூறியதை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு தாசில்தார் காமராஜ் முன்னிலையில் சதீஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக மாணவர் உடலுக்கு பல்கலைக் கழகம் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சுமித்குமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப் பட்டது. டி.ஐ.ஜி., மாசானமுத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
                        நேற்று காலை மீட்கப்பட்ட முகமது சர்பரேஸ் ராப் (22), ஆஷிஷ் ரஞ்சன் குமார் (20) ஆகியோரது உடல்கள் காலை 11 மணிக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மாலை 5.30 மணிக்கு டாக்டர்கள் ஆனந்தகுமார், சாராசெலின்பால் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். மாணவர் ஆஷிஷ் ரஞ்சன் குமாரின் உடலை பார்த்த அவரது தந்தை தன் மகன் உடல் இல்லை என மறுத்தார். சக மாணவர் ஆதித்யகுமார், ஆஷிஷ் ரஞ்சன்குமாரின் கையில் கட்டியிருந்த ராக்கி, பேண்ட் சட்டையை அடையாளம் காட்டிய பிறகு சுவிந்தர்குமார் ஒப்புக் கொண்டார்.

                       மாலை 6.40 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்த பின் இரவு7.50 மணிக்கு ஆஷிஷ் ரஞ்சன் குமாரின் உடலை அவரது தந்தையிடமும், முகமது சர்பரேஸ் ராப் உடலை அவரது உறவினரும், அண்ணாமலை பல்கலை கழக முதலாமாண்டு மாணவருமான முகமது ஒசாமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இரு மாணவர்களின் உடல்களை தனித்தனி ஆம்புலன்சில் ஏற்றி இரவு 8 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை நடந்த கடலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கு பகுதியில் எஸ்.பி., பகலவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடலூர் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இரு மாணவர்களின் உடலுக்கும் அமைச்சர் பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



Read more »

பல்கலை., மாணவர்கள் மரணம்: நீதி விசாரணை கேட்கிறது மா.கம்யூ.,


சிதம்பரம் : 

                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் நான்கு பேர் இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.

 மா.கம்யூ., மாநில செயலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் கவுதம்குமார் 28ம் தேதி விபத்தில் படுகாயமடைந்தார். அவருக்கு பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளித்திருந்தால் மாணவரை காப்பாற்றி இருக்க முடியும். இச்சம்பவம் குறித்து முறையிட சென்ற மாணவர்களை துணைவேந்தர் சந்தித்து பேசியிருந்தால் மூன்று மாணவர்களின் உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் போலீசை ஏவி மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் சில மாணவர்கள் அங்குள்ள ஓடையில் விழுந்துள்ளனர். மூன்று மாணவர்கள் இறந்துள்ள னர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் போலீஸ் துறையின் இச்செயலை மா. கம்யூ., தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே மாணவர்களின் உயிரிழப்பிற்கு காரணமான பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவம் குறித்து பணியில் உள்ள ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.



Read more »

நான்கு வழக்குகள் பதிவு

சிதம்பரம் : 

                           சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது.சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர் கவுதம்குமார் விபத்தில் காயமடைந்து, இறந்தது குறித்து அவரது நண்பர் கவுரவ் குமார் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்ணாமலை பல்கலை நிர்வாக கட்டடம், மருத்துவமனை கட்டடம், விளக்குகளை சேதப்படுத்தியதாக அடையாளம் தெரிந்த, தெரியாத இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மீது பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி கொடுத்த புகாரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஒன்றாம் தேதி பாலமான் ஓடையில் சுமித்குமார் உடல் கிடைத்தது குறித்தும், நேற்று காலை முகமது சர்பரேஸ் ராவ், ஆஷிஸ் ரஞ்சன்குமார் ஆகியோர் உடல் கிடைத்தது குறித்து தனித்தனியாக இரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior