உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

வாகனம் மோதி முதியவர் பலி

பரங்கிப்பேட்டை : 

                பரங்கிப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி  முதியவர் இறந்தார்.  பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து சின்னகுமட்டி கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Read more »

தீ விபத்தில் மூதாட்டி காயம்

கிள்ளை : 

                     சிதம்பரம் அருகே கிள்ளையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூதாட்டி காயம் அடைந்தார். சிதம்பரம் அருகே கிள்ளை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆராயி(78). இவர் நேற்று முன் தினம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது விளக்குப்பொறி பட்டு தீ பிடித்தது. இதனால் ஆராயிக்கு காலில் காயம் ஏற்பட்டது.  தீயை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அணைத்தனர். இதில் காயம் அடைந்த ஆராயி, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த திடீர் விபத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் காப்பியடித்த 9 பேர் வெளியேற்றம்

கடலூர் : 

                   கடலூர் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் காப்பியடித்த 3 மாணவிகள் உட்பட 9 பேர் தேர்வு மையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த முதல் தேதி துவங்கியது. முதல் தேதி மற்றும் 2ம் தேதி மொழித்தேர்வு நடந்தது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் 3 பேரும், தொழுதூரில்  3 மாணவிகள் ஒரு மாணவர் உள்பட 4 பேரும், சிறுபாக்கம் பள்ளி மாணவர்கள் 2 பேரும் காப்பி அடித்ததற்காக வெளியேற்றப்பட்டனர். மாவட்டத்தில் ஆங்கிலத் தேர்வில் மொத்தம் 9 பேர் தேர்வுதுறையின் விதிகளை மீறி காப்பியடித்த குற்றத்திற்காக மையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior