உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

ஜெர்மன் நாட்டு சிறுமியை தீட்சிதர் அடித்ததாக புகார்

சிதம்பரம் : 

              சிதம்பரம் நடராஜர் கோவிலிலுக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு சிறுமியை தீட்சிதர் ஒருவர் அடித்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி ஜெர்மன் நாட்டை சேர்ந்த மில்டன் தெர்க்கார். இருவரும் குடும்பத்துடன் ஜெர்மனியில் வசித்து வருகின்றனர். ஆண்டு தோறும் தமிழகத்திற்கு சுற்றுலா வருவது வழக்கம். சில நாட்களுக்கு முன் தங்களது மூன்று பெண் குழந்தைகளுடன் சுற்றுலா வந்தனர். மகாபலிபுரம், ஆரோவில் பகுதிகளுக்கு சென்று நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.சாமி தரிசனம் செய்துவிட்டு உள்பிரகாரத்தை சுற்றி வரும்போது அவர்களது 10 வயது மகள் ஜெனனியை, மணிகண்டன் என்ற தீட்சதர் தலையில் அடித்துள்ளார். வலி தாங்க முடியாமல் குழந்தை வீரிட்டு அழுதபடி பெற்றோரிடம் ஓடிவந்தது. குழந்தையை ஏன் அடித்தீர்கள் என மணிகண்டன் தீட்சிதரை கேட்டபோது அருகில் இருந்த நவதாண்ட தீட்சதரும் சேர்ந்து ஜெர்மன் தம்பதியினரை தாக்க வந்தனர். பயந்துபோன அவர்கள் நேராக கோவில் செயல் அலுவலர் அலுவலகம் வந்து புகார் தெரிவித்தனர். நடந்த சம்பவத்தை மனுவாகவும் எழுதி கொடுத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more »

கரை ஒதுங்கிய திமிங்கிலம்

கடலூர் : 

                கடலூர் சில்வர் பீச்சில் இறந்து கரை ஒதுங்கிய அறிய வகை திமிங்கிலத்தை வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் புதைத்தனர். கடலூர் சில்வர் பீச்சில் நேற்று காலை அறியவகை  திமிங்கிலம் இறந்து கரை ஒதுங்கியது. தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் துரைசாமி, வனச் சரகர்கள் பன்னீர்செல்வம், சீனுவாசன் ஆகியோர் திமிங்கிலத்தை பார்வையிட்டனர். மீன் வளத்துறை உதவி இயக்குனர் இளம்பரிதி, பரங்கிப்பேட்டை கடல் வாழ் உயிரின ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் பாலசுப்ரமணியன், பேராசிரியர் ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பிரேத பரிசோதனைக்குப்பின் புதைக்கப்பட்டது.

Read more »

மனைவி எரித்து கொலை கணவருக்கு ஆயுள்

கடலூர் :

                  மனைவியை எரித்து கொலை செய்த கணவருக்கு கடலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(32). பூக்கடையில் வேலை செய்து வந்த இவரும், அதே பகுதியைச் சேர்ந்தவர் லோகலட்சுமி (எ) லோகநாயகி. இருவரும் 10 ஆண்டிற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
 
                ஆறுமுகம் தினமும் குடித்துவிட்டு லோகநாயகியிடம் தகராறு செய்து வந் தார். குடும்பச் செலவிற்கு பணம் கொடுப்பதில்லை. லோகநாயகி வீட்டு வேலை செய்து, குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் 2008ம் ஆண்டு அக். 7ம் தேதி பகல் 2 மணிக்கு ஆறுமுகம், சாப் பாடு கேட்டதற்கு  லோகநாயகி "பணம் கொடுத்தால் தான் சாப்பாடு' என கூறினார். ஆத்திரமடைந்த ஆறுமுகம் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து லோகநாயகி மீது ஊற்றி தீவைத்தார்.  மேலும் அவர் வெளியே தப்பிச் செல்லாமல் இருக்க வீட்டின் வாயிலை அடைத் துக் கொண்டு நின்றார். அதில் தீயில் கருகிய லோகநாயகி புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர். அவர் மீது கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.  வழக்கை விசாரித்த நீதிபதி அசோகன், மனைவியை எரித்து கொலை செய்த ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior