உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

நடராஜர் கோவில் தேர்களுக்கு துருப்பிடிக்காத உலோக 'ஷெட்'

சிதம்பரம் : 

              சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு துருப்பிடிக்காத உலோகத்தால் ஆன ஷெட் அமைக்கப் பட்டு வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி வலம் வரும் ஐந்து தேர்கள் உள்ளன.  ஆண்டுக்கு இரு முறை நடக்கும் ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகிய தரிசன விழாக்களின்போது இந்த தேரோட்டம் நடக்கும். அதன்பிறகு கீழ வீதியில் உள்ள தேர் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும்.  தற்போது சென்னையை சேர்ந்த கோவில் கட்டளைக்காரர்கள் மூன்றுபேர் சேர்ந்து தேருக்கு துருப்பிடிக்காத உலோகத்தால் ஆன ஷெட் அமைக்க முன் வந்தனர்.  அதன்படி முதற்கட்டமாக பெரிய தேரான நடராஜர் தேருக்கு 2 லட்சம் ரூபாய்  ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


Read more »

செய்யூரில் ஏப்., 14ல் பஞ்சமி நீலம் மீட்பு மாநாடு சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி பேட்டி

கடலூர் : 

                    "தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகள் கட்டுவதில்லை; மாறாக அப்பகுதியில் டாஸ்மாக் கடைகளை நிறுவி கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றனர்' என, சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி குற்றம் சாட்டியுள்ளார். 

கடலூர் டவுன்ஹாலில் நடந்த சமூக சமத்துவ படை  நிறுவனர் சிவகாமி, கூறியதாவது:
 
                          சமூக சமத்துவ படையில் கடலூர் மாவட்டத் தை கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்டம் என மூன்றாக  பிரித்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நிலமற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு விவசாய நிலம் வழங்க வேண் டும். அரசு இதற்கான தெளிவான வரையறை கொண்டு வர வேண்டும். 2007ம் ஆண்டோடு, இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவதை அரசு நிறுத்திக் கொண்டது. முழுமையாக செயல்படுத்தவில்லை. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்கின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகளில், பள்ளிக்கூடம் கட்டுவதில்லை. மாறாக அப்பகுதியில் டாஸ்மாக் கடைகளை நிறுவி, கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் நரிக்குறவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், நாவிதர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும். 

                           கல்விக் கடன்களை ஏழைகள் பெற முடியவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்காக காலனிகளை உள்ளடக்கிய தனி பஞ்சாயத்து உருவாக்கப்பட்டு, கிராமங்கள் தன்னிறைவு கொண்டதாக இருக்க வேண்டும். மதுராந்தகம் அடுத்த செய்யூரில், வரும் ஏப்., 14ம் தேதி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் பஞ்சமி நிலங்கள் மீட்பு மாநாடு நடக்கிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டம், பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Read more »

பல்கலை மாணவர்கள் இறந்த சம்பவம் அரசின் முதற்கட்ட விசாரணை துவங்கியது

சிதம்பரம் : 

                      சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் நான்கு பேர் இறந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு நியமித்த விசாரணை அதிகாரி நேற்று முதற்கட்ட விசாரணையை துவக்கினார். மாணவர்கள் தண்ணீரில் குதித்து இறந்த இடத்தை பார்வையிட்டு விசாரித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன்ஜினியரிங் படித்த ஜார்க்கண்ட் மாநில மாணவர் கவுதம்குமார், 28ம் தேதி விபத்தில் இறந்தார். பல்கலை மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை, போலீசார் விரட்டி அடித்தனர். அதில், பாலமான் வாய்க் காலில் குதித்த வெளி மாநில மாணவர்கள் சுமித்குமார், முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன் குமார் ஆகியோர் இறந்தனர். வடக்கு மண்டல புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி., நாராயணசாமி, சிதம்பரத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க டலூர் டி.ஆர்.ஓ., நடராஜனை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.அதையொட்டி, நேற்று சிதம்பரம் வந்த விசாரணை அதிகாரியான நடராஜன், எஸ்.பி., கோவில் தெருவில் மாணவர் கவுதம்குமார் விபத்தில் சிக்கிய இடத்தை பார்வையிட்டார். பின்னர், மாணவர்கள் மறியலில் ஈடுபட்ட துணைவேந்தர் மாளிகை, மாணவர்களால் சேதப்படுத்தப்பட்ட தேர்வுத்துறை கட்டடம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டார்.போலீஸ் விரட்டி அடித்ததால் மாணவர்கள் தண்ணீரில் குதித்து இறந்த பாலமான் வாய்க்கால், மாணவர்கள் உடல் கிடைத்த இடத்தை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் விசாரித்தார். ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்த பின், மதியம் கடலூர் புறப் பட்டு சென்றார். இன்று, துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் இருப்பதால், இரண்டாம் கட்ட விசாரணை நாளை துவங்கும் எனத் தெரிகிறது.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior