உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

கடலூர் : 

               கடலூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் திடீர் "விசிட்' செய்தார்.
 
                  வாரம் தோறும் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் நடைபெறும் குறைகேட்புக் கூட்டத்திற்கு வரும் மனுக்கள் அதிகரித்து வருகின்றன. குறிப் பாக பட்டா மாற்றம், இலவச மனைப்பட்டா, ஜாதி சான்றிதழ் போன்ற மனுக்கள் வருவது வாரம்தோறும் கூடுதலாகி வருகின்றன. அதையொட்டி தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை சோதனை செய்ய கலெக்டர் சீத்தாராமன் நேற்று திடீரென கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அவருடன் டி.ஆர். ஓ., நடராஜன், ஆர்.டி.ஓ., செல்வராஜ் ஆகியோர் வந்திருந்தனர். முதலில்  தாசில்தார் அலுவலகத்தை பார்வையிட்டார். குப்பை காடாக இருப்பதாக தாசில்தாரிடம் அதிருப்தி தெரிவித்தார். தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலகம், சர்வே பிரிவு ஆகியவற்றை சோதனை செய்தனர்.

Read more »

கண்டக்டரை தாக்கி நகை, பணம் கொள்ளை

பரங்கிப்பேட்டை :

                        புதுச்சத்திரம் அருகே தனியார் பஸ் கண்டக் டரை தாக்கிய ஒன்னரை சவரன் செயின், 7 ஆயிரம் ரூபாயை பிடுங்கி சென்ற நான்கு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
 
                          கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு தனியார் பஸ் பயணிகளுடன் சென்றது. பஸ்சில் கீழ்பூவாணிக்குப்பத்தை சேர்ந்த தனசேகரன், பாக்கியராஜ், பாண்டியன், சிலம்பு ஆகியோர் டிக்கெட் எடுக்காமல் வந்தனர். அவர்களிடம், கண்டக்டர் பூபாலன் டிக்கெட் எடுக்க கூறினார். அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் கீழ்பூவாணிக்கும் வந்ததும் பஸ்சில் இருந்து  இறங்கிக் கொண்டனர். மீண்டும் பஸ் சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும்போது கீழ்பூவாணிக்குப்பம் அருகே தனசேகரன் உள்ளின் நான்கு பேர் பஸ்சை வழிமறித்து கண்டக்டர் பூபாலனை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்னரை சவரன் செயின் மற்றும் 7 ஆயிரம் பணத்தை பிடுங்கி சென்றனர். இதுகுறித்து கண்டக்டர் பூபாலன் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிந்து, தனசேகரன் உள்ளிட்ட நான்கு பேரை தேடிவருகிறார்.

Read more »

நள்ளிரவில் தீ விபத்து புத்தக கடை சாம்பல்

கடலூர் : 

                    கடலூரில் நேற்று முன் தினம் நள்ளிரவில் ஏற் பட்ட திடீர் தீ விபத்தில் புத்தக கடை உள்ளிட்ட 2 கடைகள் எரிந்து சாம்பலாயின. கடலூர் அண்ணா (பழைய) பாலத்தில் கடைகள் உள்ளன.  நேற்று முன்தினம் இரவு 12.45 மணிக்கு அப்துல் காதர் என்பவரின் பழயை புத்தக கடை திடீரென தீ பிடித்து எரிந்து அருகில் உள்ள வின்சென்ட் என்பவரின் கடிகார கடைக்கு பரவியது. இந்த தீ விபத்தில் ஏராளமான புத்தகங்கள் தீயில் கருகின. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior