உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

ரூ.3.6 லட்சம் செலவிலான சாலை இரண்டு நாளில் பஞ்சரானது

பண்ருட்டி : 

               பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூரில் 3.6 லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட தார் சாலை இரண்டு நாளில் பஞ்சரானது. தரமில்லாத தார் சாலைகளால் அரசு பணம் வீணாகி வருகிறது.
 
                   பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் 540 மீட்டர் அளவில் தார் சாலை அமைக்கப்படாமல் நீண்ட காலமாக குண்டும் குழியுமாக இருந்தது. இந்நிலையில் 12வது மானிய குழு  திட்டத்தின்கீழ் 3.60 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த வாரம் நடந்தது. சாலையில்  குண்டு குழியுமாக உள்ள பள்ளங் கள் சீரமைக்கவில்லை. முக்கால் ஜல்லிகள் போடாமல், பெயரளவிற்கு சிப்ஸ் தார் கலவை கொண்டு போட்டதால் சாலை பல இடங்களில் மேடு பள்ளங்களாக உள்ளது. சாலை பணி முடிந்த 2வது நாளில் வாகனங்கள் சென்றதில் பழைய ஜல்லி தெரியுமளவிற்கு சாலைகள் சேதமானது. தரமற்ற  தார்சாலையால் ஒருமாதத்தில் தார் சாலை கந்தல் சாலையாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.   சாலை அமைக்கும் பணியை ஒன்றிய பொறியாளர்கள்  ஆய்வு செய்யாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Read more »

மொபட் மீது லாரி மோதி ஒருவர் பலி போலீஸ் தாமதத்தால் 'டிராபிக் ஜாம்'


கடலூர் : 

              கடலூர் மஞ்சக்குப்பத்தில் மொபட்டில் வந்தவர்  லாரி சக்கரத்தில் சிக்கி இறந்தார்.
 
              விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம் (45). கடந்த இரு ஆண்டாக  மஞ்சக்குப்பத்தில் வசித்து வருகிறார். நேற்று மாலை ஆல்பேட்டையில் இருந்து மொபட்டில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தார்.  அப்போது புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் மகாலிங்கம் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு  பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் தாமதம்: இச் சம்பவம் நேற்று மாலை 4.20 மணிக்கு நடந்தது. விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். மாலை வேளை போக்குவரத்து பிசியாக  இருந்ததால் "டிராபிக் ஜாம்' ஏற்பட் டது. வேடிக்கை பார்த்த பொதுமக்களில் சிலர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி புதுச்சேரியில் இருந்து வந்த பஸ்களை உப்பலவாடித்தெரு, சுதர்சன நாயுடு தெரு வழியாக திருப்பிவிட்டனர். தவலறிந்த 108 வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தது. ஆனால் ஸ்தலத்திலேயே இறந்து விட்டதால் திரும்பியது. அரைமணி நேரத்திற்குப் பிறகு (4.55) போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். கடலூரில் 50 மீட்டருக்கு ஒரு "டிராபிக் பாயின்ட்' போட்டு 2 போலீசார் பணி செய்து வருகின்றனர். போலீஸ் பாயின்டு, புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் என கூப்பிடும் தூரத்தில் இருந்தும் போலீசார் அரை மணிநேரம் தாமதமாக வந்தது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Read more »

தேர்வில் 'பிட்': 31 பேர் வெளியேற்றம்

கடலூர் : 

                நேற்று நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் "பிட்' அடித்த 31 பேர் பிடிபட்டனர்.
 
                பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கியது. நேற்று இயற்பியல், பொருளியல், உளவியல் தேர்வுகள் நடந்தது.  கடலூர் மாவட்டத்தில் பறக் கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் காட்டுமன் னார்கோவில் பருவதராஜ குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் 3 மாணவர்கள், 7 மாணவிகள், பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் 4 பேரும் பிடிபட்டனர். கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவரும், 4 மாணவிகளும், பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவரும் "பிட்' அடித்தபோது பிடிபட்டனர். மாவட்டத்தில் இதுவரை "பிட்' அடித்ததாக  20 மாணவிகளும், 8 மாணவர்களும் பிடிபட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
விழுப்புரம்:. 

                சி.இ.ஓ., குப்புசாமி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதில், திருக்கோவிலூர் ஞானானந்தா மெட்ரிக் பள்ளியில் தனித் தேர்வர்கள் (பொருளியல்) இருவர், விரியூர் அடைக்கல அன்னை மேல் நிலைப் பள்ளியில் ஒரு மாணவர் (இயற்பியல்), திண்டிவனம் வால்டர்ஸ் கேடர் பள்ளியில் 8 தனித் தேர்வர்கள் (இயற்பியல்- 2, பொருளியியல்-6) என மொத்தம் 11 பேர் "பிட்' அடித்தபோது சிக்கினர். "பிட்' அடித்து சிக்கிய 31 பேரும் தேர்வறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவர்களின் விடைத் தாள்கள் மேல் நடவடிக்கைக்கு சென்னை அரசு தேர்வுகள் இயக்கத் திற்கு அனுப்பி வைக்கப் பட்டது.   

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior