உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

சிதம்பரம் கோவில் உண்டியலில் ரூ. 4.15 லட்சம் வசூல்

சிதம்பரம் : 

               சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று ஆறாவது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. நான்கு லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாய் 50 காசுகள் வசூலாகியிருந்தது.

                  சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த 2009ம் ஆண்டு பிப். 2ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அடுத்த மூன்று நாளில் முதல் முறையாக பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டது.கோவில் வளாகத்தில் படிப்படியாக ஒன்பது இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. உதவி ஆணையர் ஜெகன்நாதன், நிர்வாக அதிகாரி சிவக்குமார் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் நேற்று ஆறாவது முறையாக திறக்கப்பட்டது. அறநிலையத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 30 பேர் காணிக்கைகளை எண்ணினர். அதில் நான்கு லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாய் 50 காசுகள் காணிக்கை வசூலாகியிருந்தது. மேலும், ஏழு கிராம் தங்கம், 86 கிராம் வெள்ளி, அமெரிக்க டாலர் 18, சிங்கப்பூர் வெள்ளி 3, மலேசியா ரிங்கேட் 571, இலங்கை ரூபாய் 80 இருந்தன.கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்த ஓராண்டில் இதுவரை உண்டியல் காணிக்கையாக, 17 லட்சத்து 2,934 ரூபாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத் தக்கது
நூதன முறையில் திருட முயற்சி: 

               நடராஜர் கோவில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டது. ஏழாவது உண்டியலை திறந்து பணம் எடுத்தபோது, வேட்டி துணியில் கட்டப்பட்ட காந்தம் ஒன்று கிடந்தது. மர்ம நபர் எவரோ காந்தத்தை பயன்படுத்தி உண்டியலில் உள்ள பணத்தை திருட முயன்றுள்ளார். காந்தம் வெளியே வராமல் சிக்கிக் கொண்டதால் அதை விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது. காந்தத்தில் 56 ரூபாய்க்கு நாணயங்களும், 45 ரூபாய் நோட்டுகள் என மொத்தம் 101 ரூபாய் ஒட்டியிருந்தது. கோவில் நிர்வாக அதிகாரி சிவகுமார், சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்துள்ளார்.

Read more »

கவுரவ விரிவுரையாளர்கள் கடலூரில் உண்ணாவிரதம்


கடலூர் : 

            கடலூர் அரசு பெரியார் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மூன்று மாதமாக வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

                   கடலூர் அரசு பெரியார் கல்லூரியில் சுயநிதி பாடப்பிரிவில் பணியாற்றும் கவுரவ விரிவுரையா ளர்கள் 9 பேர் நேற்று முன் தினம் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் நாளான நேற்று சங்க கிளை தலைவர் நடேசன் தலைமையில் கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் கல்லூரியில் செய்முறைத் தேர்வுகள் பாதிக்கப் பட்டன.

Read more »

மொபட்டில் சென்ற வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.ஒரு லட்சம் திருட்டு

சிதம்பரம் : 

                   மொபட்டில் சென்ற வியாபாரியிடம் இருந்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். சிதம்பரம் அடத்த நாஞ்சலூரைச் சேர்ந்தவர் சேகர்(47). வியாபாரிபான இவர் நேற்று முன்தினம் காலை சிதம்பரத்தில் உள்ள வங்கியில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்தார். அதனை பையில் போட்டு தனது மொபட்டில் மாட்டிக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.அப்போது சிதம்பரம் கொத்தவால் சாவடியில் மொபட்டை நிறுத்திவிட்டு அருகில் இருந்த பெட்டிகடையில் பொருட்களை வாங்கி கொண்டு வந்தபோது, மொபட்டில் மாட்டியிருந்த பணப்பையை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior