உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

அரசு பஸ் மோதி வாலிபர் பலி : டிரைவருக்கு 4 மாதம் சிறை

ராமநத்தம் : 

                பஸ் மோதி வாலிபர் இறந்த வழக்கில் டிரைவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
                         பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையை சேர்ந்தவர் பழனிமுத்து மகன் கொளஞ்சி (24). இவர் கடந்த 2008 மார்ச் 21ம் தேதி திட்டக்குடி அடுத்த லட்சுமணபுரம் செல்வதற்காக ராமநத்தம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியே வந்த அரசு பஸ் மோதியது. அதில் கொளஞ்சி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார், அரசு பஸ் டிரைவரான கம்மாபுரத்தை சேர்ந்த செந்தில்குமாரை கைது செய்தனர். அவர் மீது திட்டக்குடி கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ்பாபு, விபத்து ஏற்படுத்திய டிரைவர் செந்தில்குமாருக்கு 4 மாதம் சிறை தண்டனை மற்றும் 3 ரூபாய் அபராதம் விதித்தார்.

Read more »

மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

                 தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

                       சங்க தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் புகழேந்தி வரவேற்றார். குமாரவேலு, ரஞ்சித்குமார், இந்துமதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், கடந்த அக்டோபர் 3ம் தேதி மின்வாரிய அமைச்சர் அறிவித்த உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் இடையேயான 2:3 விகிதாச்சாரத்தை வாரியம் முழுவதும் உடன் அமல் படுத்த வேண்டும். மின் வாரியத்தை நிர்வகித்திட மனித வள மேம்பாட்டில் பயிற்சி பெற்றவரையே நியமிக்க வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Read more »

மணல் கடத்தல்: 2 பேர் கைது

கடலூர் : 

                 மணல் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்து இருவர் கைது செய்யப்பட்டனர். தூக்கணாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எடப்பள்ளம் கூட்டுரோடு அருகே வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி பெண்ணையாற்றிலிருந்து மணல் கடத்தி வருவது தெரியவந்தது. அதன் பேரில் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், டிரைவர் மணிபாலன் (21), கிளீனர் வினோத் (17) ஆகியோரை கைது செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior