உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 12, 2010

நெல்லிக்குப்பத்தில் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

நெல்லிக்குப்பம்:

                 நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. நெல்லிக்குப்பம் நகராட்சி எல்லையில் கடலூர் பண்ருட்டி சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. இதனால் போக்குவரத்து இடையூறும், விபத்துகளும் நடக்கிறது. பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் சென்று வர சிரமமாக உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 
 
                   கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் முக்கிய சாலையில் சர்வேயர் மூலம் அளக்கும் பணி நடந்தது. ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்களே அகற்றி கொள்ள வேண்டுமென தண்டோரா போட்டனர். பெரும்பான்மையானவர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று ஆக்ரமிப்புகளை அகற்றப்பட்டன. கட்டட ஆய்வாளர் குமரவேல் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பணியாற்றினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Read more »

ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

நெய்வேலி: 

              இருபது சதவீத போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலியில் உண்ணாவிரதம் இருந்தனர். என்.எல்.சி.,யில் பணிபுரியும் கான்ட்ராக்ட் தொழிலாளர்களை உடனடியாக சொசைட்டி தொழிலாளர்களாக மாற்ற வேண்டும். கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். டில்லியில் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை உடன் அமல்படுத்த வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ. டி.யூ.சி.,யின் கிளைச் சங்கமான ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நெய்வேலி "க்யூ' பாலம் அருகே நடந்த உண்ணாவிரதத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.  என்.எல்.சி., ஏ.ஐ.டி. யூ.சி., சங்க தலைவர் தண் டபாணி, செயலாளர் குப்புசாமி, பொருளாளர் பொன்னுசாமி முன் னிலை வகித்தனர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் கான்ட் ராக்ட் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

சுனாமி குடியிருப்பு : ஆர்.டி.ஓ., விசாரணை

பரங்கிப்பேட்டை: 

               பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதித்தவர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தராதது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடத்துகிறார். சுனாமியில் பாதித்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் குடியிருப்புகள் கட்டிக் கொடுத்தனர். ஆனால் சுனாமியில் முழுமையாக பாதித்த பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்கு தெரு பகுதி மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்படவில்லை. இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணை சேர்மன் செழியன், முதல்வருக்கு மனு அனுப்பி இருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வரின் தனிபிரிவில் இருந்து சிதம்பரம் ஆர்.டி.ஓ., விசாரணை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ., மற்றும்  துணை சேர்மன் செழியன் ஆகியோரிடம் விசாரணை நடத்த தபால் அனுப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior