உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 12, 2010

பயறுவகை பயிர்களுக்கு மானியத்தில் டி.ஏ.பி., பயன்பெற வேளாண் அதிகாரி வேண்டுகோள்


கிள்ளை:

                   பயறு வகைப் பயிர்கள் அதிக மகசூல் பெற டி.ஏ.பி., உரக்கரைசலை தெளிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
வேளாண் உதவி இயக்குனர் தனசேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


                      பயறு வகைப் பயிர்கள் அதிக காய் பிடிப்பதற்கு நல்ல திரட்சியான விதைகளை பெறவும், அதிக மகசூல் பெறவும் டி.ஏ.பி., கரைசலை அவசியம் தெளிக்க வேண்டும். பயறு வகைப் பயிர்கள் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து இரண்டாவது முறையும் இலைவழி மூலமாக தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி., உரத்தினை முதல் நாள் 10 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து மறு நாள் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி அதனுடன் 190 லிட்டர் தண்ணீர் கலந்து கை தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயறுவகை பயிர்களுக்கு டி.ஏ.பி., ஒரு எக்டேருக்கு 25 கிலோ வீதம் 200 ரூபாய் மானியத்தில் தில்லைவிடங்கன், கிள்ளை, பிச்சாவரம், பி.முட்லூர், பூவாலை மற்றும் கீழமணக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப் படுகிறது. தேவையான விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு  டி.ஏ.பி., உரத்தினை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Read more »

சிதம்பரத்தில் மறு மலர்ச்சி வன்னியர் சங்க செயற்குழு

சிதம்பரம்:

                    சிதம்பரத்தில் மறு மலர்ச்சி வன்னியர் சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது.நிறுவனத் தலைவர் மணிவண்ணன், மாநில தலைவர் குபேந்திரகுணபாலன், வக்கீல் அணித்தலைவர் செல்வபதி, சாக் ரட்டீஸ், செந்தில், செந்தில்குமார், கணேசன், பரிமளம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெண்ணகரம் இடைத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரை ஆதரித்து பிரசாரம் செய்வது, இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று 1986 முதல் 1998 வரை 50 ஆயிரம் வழக்குகளில் சிக்கி சிறைபட்ட வன்னியர்களை மிகவும்  பிற்படுத்தப்பட்ட 108 சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர்களை அரசு இட ஒதுக்கீடு தியாகிகளாக அறிவித்து மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் மற்றும் அரசு பஸ்களில் இலவச பாஸ் வழங்கவும்,  நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடு துறையை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவும், சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி, கடலூர் வரையும், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில், ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர் வரை புதிய ரயில் பாதை அமைக்கவும்  2010ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்க அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

அண்ணாமலைப் பல்கலை., வகுப்புகள் துவங்கின

சிதம்பரம்:

                  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.,யில்  விடுமுறைக்குப்பின்  நேற்று  வகுப்புகள் துவங்கின.

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை., யில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு  மாணவர் கவுதம்குமார் (20) கடந்த  28ம் தேதி மோட்டார் பைக்கில் சென்றபோது லாரி மோதி காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதில் ஆத்திர மடைந்த வெளி மாநில மாணவர்கள், மார்ச் 1ம் தேதி  இரவு ரகளையில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவர்களை தடியடி நடத்தி விரட்டினர். பயந்து ஓடிய மாணவர்கள் முத்தையா நகர் பாலமான் வாய்க்காலில் குதித்து தப்பிக்க முயன்ற போது  சுமித்குமார் (22), முகமது சர்பரேஸ் ராப் (22), ஆஷிஷ் ரஞ்சன் குமார் (20)  ஆகியோர் சேற்றில் மூழ்கி இறந்தார். இதனால் பல்கலைக் கழகத்தில் மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க மருத்துவம் தவிர மற்ற பிரிவு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப் பட்டது.

                 இந்நிலையில் நேற்று 11ம் தேதி  எம்.ஏ., எம்.எஸ்சி,. அனைத்து பாடப் பிரிவுகள்,   பி. எட், எம்.எட், பி.மியுசிக், எம்.மியுசிக், பி.எஸ்சி., விவசாயம் மற்றும் தோட்டக்கலை,. டி.பார்ம், பி.பார்ம், எம்.எஸ்.சி,.  ஐ.டி.,  சப்ட்வேர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ், பி.இ., எம்.இ., ஆகிய  பாடப்பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு  வகுப்புகள் துவங்கியது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior