உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 12, 2010

பெண்களுக்காக சமூக பாதுகாப்பு சட்டம் : மகளிர் தின விழாவில் நீதிபதி பேச்சு


திட்டக்குடி: 

             பெண்கள் நலனுக்காக சமூக பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நீதிபதி ரமேஷ்பாபு பேசினார். திட்டக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெண்ணாடம் அடுத்த வடகரை ஊராட்சியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் பொன் மணி, தலைமை ஆசிரியர் தனமணி, பெண்ணாடம் சேர்மன் அமுதலட்சுமி முன்னிலை வகித்தனர். இளவரசன் வரவேற்றார். வக்கீல்கள் சங்க செயலாளர் பாபுராஜேந்திரன், மூத்த வக்கீல்கள் சோமசுந் தரம், சுப்ரமணியன் பேசினர்.

              விழாவிற்கு தலைமை தாங்கிய நீதிபதி ரமேஷ்பாபு பேசியதாவது:அதிக செலவு ஏற்படுமென நினைத்து ஏழை மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர தயங்குவதை தவிர்க்கவே, இலவச சட்ட உதவி மையம் இயங்கி வருகின்றது. இதற்கென நியமிக்கப்படும் வக்கீலுக்கு அரசே ஊதியம் வழங்குகிறது. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஜீவனாம்சம் பெற கோர்ட் மூலம் கண்டிப்பாக தீர்வு கிடைக்க வழி உள்ளது. பெண்களின் நலனுக் காக இயற்றப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு சட்டத் தின் மூலம் கணவன், தந்தையால் கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் அதே வீட்டில் மீண்டும் வாழ போலீஸ் பாதுகாப்பு வழங்கிட கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும். வரதட்சணையாக வழங்கிய சீர்வரிசையினை திரும்ப பெறலாம். மகளிர் தினத்தில் பெண்கள் அனைவரும் அதிகளவு படித்து முன்னேறவும், சமூகத்தில் தனித்துவம் பெறவும் உறுதிமொழி எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி பேசினார். விழாவில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. வக்கீல் பழனியாண்டி நன்றி கூறினார்.

Read more »

சட்ட உதவி ஆலோசனை மையம் திறப்பு விழா

கடலூர்: 

                  கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் மாதர் நல தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா, சட்ட உதவி ஆலோசனை மையம் திறப்பு விழா பாதிரிக்குப் பத்தில் நடந்தது.

                     தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி வணங்காமுடி தலைமை தாங்கி சட்ட உதவி ஆலோசனை மையத்தை திறந்து வைத்து பேசினார். மாதர் நல தொண்டு நிறுவன நிர் வாக இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜாகீர் ஹூசைன், முதன்மை சார்பு நீதிபதி சண்முகநாதன் ஆகியோர்  முன் னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி நர்கீஸ் கரீம், கடலூர் மாஜிஸ்திரேட்டுகள், சுதா, ரமேஷ், அரசு சிறப்பு வக்கீல் வனராசு, வக்கீல் குணவதி ஆகியோர் பேசினர். மகளிர் குழுக்களின் பணிகள் குறித்து  தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீமதி பேசினார்.நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் 18 பேருக்கு கறவை மாடு வாங்குவதற்காக தலா 15 ஆயிரமும், நிஷா புயலில் பதித்த குழுவினர் 16 பேருக்கு இன்சூரன்ஸ் தொகை  வழங்கப்பட்டது.

Read more »

மருத்துவ முகாம்

விருத்தாசலம்: 

                விருத்தாசலம் அடுத்த கோ.பவழங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் ஆசைதம்பி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வெங்கடசாமி, ரோட்டரி நிர்வாகிகள் விஸ்வேஸ்வரன், பாலசந்தர், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.
 
                முகாமில் 300 பேருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் செல்வம், ராஜகோபாலன், சின்னசாமி, ஐஸ்டின்டேவிட் சிகிச்சை அளித்தனர். செயலாளர் அன்பழகன், ஜெயராமன், ரமேஷ்சந்த், பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior