உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

விரிவுரையாளர்கள் போராட்டம்


கிள்ளை: 

          சி.முட்லூர் அரசு கல் லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
 
              அரசு கல்லூரிகளில் உள்ள கவுரவ விரிவுரையாளர்கள் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8ம் தேதியில் இருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சி.முட்லூர் அரசு கல்லூரியில் நேற்று சங்க கிளை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் கவுரவ விரிவுரையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more »

என்.எல்.சி., சுரங்கத்தில் திருட முயற்சி துப்பாக்கி சூடு; பொருட்கள் தப்பியது


நெய்வேலி: 

                     என்.எல்.சி., சுரங்க வளாகத்தில் திருட முயன்ற கும்பலிடமிருந்து, துப்பாக்கி சூடு நடத்தி பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டது. நெய்வேலி - வடலூருக்கு இடையே உள்ள பெரியாகுறிச்சி வீரன் கோவிலின் பின்புறம் வழியாக என்.எல்.சி., முதல் சுரங்கத்திற்குள் நேற்று அதிகாலை 3 மணியளவில் இறங்கிய 20க்கும் மேற்பட்ட கும்பல் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு, காப்பர் உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டு தப்பிக்க முயன்றனர்.

                      அதை பார்த்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் தேவதாஸ், பொருட்களை கீழே போடுமாறு எச்சரித்தார். அந்த கும்பல் தேவதாசை கத்தியால் வெட்ட முயன்றது. சுதாரித்துக் கொண்ட தேவதாஸ், தான் வைத்திருந்த "இன்சாப்' வகை துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டார். திருடிய பொருட்களை போட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். தகவலறிந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். திருட முயற்சி மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நெய்வேலி தர்மல் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய கும்பலை தேடிவருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more »

மீன் பிடிக்க வரமறுத்ததால் வாலிபர் அடித்துக்கொலை: இருவருக்கு வலை

கடலூர்: 

                மீன் பிடிக்க வரமறுத்ததால் வாலிபரை அடுத்து குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் தேடிவருகின்றனர். சிதம்பரம் அடுத்த காயல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபு (37). அதே ஊர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22), குறிஞ்சிப்பாடி அடுத்த பொட்டவெளியைச் சேர்ந்தவர் சஞ்சீவி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக காயல்பட்டில் வசித்து வருகின்றார். நேற்று அதே பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிப்பதற்காக மணிகண்டன், சஞ்சீவி இருவரும் பிரபுவை அழைத்துள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித் தார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட் டுள்ளது. பின்னர் மீன் பிடிப்பதற்கு வலையை யாவது கொடு என கேட்டும், பிரபு மறுத்ததால் ஆத்திரமடைந்த மணிகண்டன், சஞ்சீவி இருவரும் சேர்ந்து பிரபுவை தாக்கியுள்ளனர். பின்னர் அருகில் உள்ள குளத்திற்கு இழுத்துச் சென்று தண்ணீரில் முழ்கடித்தனர். இதை பிரபுவின் தம்பி தணிகாசலத்தின் மகன் ரியாஸ் பார்த்து கூச்சலிட்டதும் இருவரும் தப்பியோடி விட்டனர். பின் ஊரில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது பிரபு தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தணிகாசலம் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் கொலை வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், சஞ்சீவி ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior