உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

நடராஜர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி


சிதம்பரம்: 

                சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி விடிய, விடிய பூஜைகள் நடக்கிறது.பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி இன்று காலை கால பூஜைகள் முடிந்து பிறகு மாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து விடிய, விடிய கால பூஜைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடக்கிறது.அதே போல் சிவதொண் டர்கள், பொதுமக்கள் விரதமிருந்து திருமுறை பாராயணம் பாடியபடி சிவஜோதி எடுத்து காலை 6மணி முதல் மாலை 6மணி வரை மகா சிவாலய தரிசனமும் நடக் கிறது.

                    நடராஜர் கோவிலில் இருந்து தரிசனத்தை துவக்கி நடைபயணமாக ஈசான்ய லிங்கம், இந்திர லிங்கம், கமலீஸ்வரன் கோவில், உமாபதி சிவமடம், சிவபுரி, திருக்கழிப்பாலை, உசுப்பூர், புலிமேடு, அக்னி லிங்கம், இமய லிங்கம், நிருதி லிங்கம், இளமையாக்கினார் கோவில், அழகேஸ்வரர் கோவில், நந்தனார் கோவில், துர்வாசர் மடம், அனந்தீஸ்வரர் கோவில், பிரம்பராயர் கோவில், சிங்காரத்தோப்பு, அவதூதசுவாமிகள் அரிஷ் டானம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மாணிக்கவாசகர் மடம் ஆகியவற்றை தரிசத்துவிட்டு குருநமச்சிவாயர் கோவிலில் சிவாலய தரிசனத்தை முடிக்கின்றனர். சிதம்பம் சைவ திருச்சபை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

Read more »

தனியார் பஸ்களில் மறைமுக கட்டண உயர்வு கடும் நடவடிக்கை: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை


கடலூர்: 

              தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.

               கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சேத்தியாத்தோப்பு, நெல்லிக்குப்பம், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அரசு உத்தரவு ஏதுமின்றி தனியார் பஸ்களில் திடீரென மறைமுகமாக கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை காரணம் காட்டி சாதாரண மற்றும் மினி பஸ்களில் குறைந்த பட்சம் 2 ரூபாயை 3ஆகவும், 3.50ஐ 4 ரூபாயாகவும், 5.50ஐ 6 ரூபாயாகவும், 7.50ஐ 8 ரூபாயாக உயர்த்தி கட்டணம் வசூலிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில் 

                       "மாவட்டத்தில் 366 தனியார் பஸ்களும், 472 அரசு பஸ்கள் மற்றும் 121 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்களில் கட்டணங்கள் உயர்த்தப் பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருவதோடு திடீர் ஆய்வும் மேற் கொள்ள இருக்கின்றோம். சோதனையின் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதேப்போன்று சரக்கு ஏற்றும் மினி லாரிகளில் ஆட்களை ஏற்றிச் சென்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம், விருத்தாசலம், கடலூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில் 4 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. மேலும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் 12ம் தேதி வரை சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தியதற்காக 10 டிரைவர்கள் உரிமத்தை 6 மாதகாலம் தற்காலிக ரத்து செய்தும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 24 பேர் உரிமம் முழுமையாகவும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறினார்.

Read more »

சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் அதிகாரி கைது


கடலூர்: 

                 சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய விற்பனையாளரிடம் மூவாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

                  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(35). நெய்வேலி டாஸ்மாக் கடை விற்பனையாளரான இவர், முறைகேடு செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இதனை ரத்து செய்து மீண்டும் பணியாணை வழங்க டாஸ்மாக் நிறுவன மாவட்ட உதவி மேலாளர் பட்டுசாமி (57) 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். ராஜமாணிக்கம் 2,000 ரூபாய் கொடுத்தார். மேலும், 3,000 ரூபாய் கொடுத்தால் தான் பணியாணை வழங்கப்படும் என பட்டுசாமி கூறினார். இதுகுறித்து ராஜமாணிக்கம், கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில், ராஜமாணிக்கம் நேற்று மதியம் 3,000 ரூபாயுடன், கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள டாஸ் மாக் அலுவலகத்திற்கு சென்று, உதவி மேலாளர் பட்டுசாமியிடம் கொடுத்தார். அங்கு கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., வேதரத்தினம், இன்ஸ்பெக்டர்கள் திருமால், பழனி உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கிய உதவி மேலாளர் பட்டுசாமியை கையும், களவுமாக பிடித்தனர். அவரிடம் 4,000 ரூபாய் இருந்தது. இது குறித்து விசாரணை செய்ததில், ஏற்கனவே, மீய்ச்சுவல் பணி மாற்றத்திற்காக இருவரிடம் தலா 500 ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது. லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, பட்டுசாமியை கைது செய்து கடலூர் மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior