உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

மளிகை கடைகளில் சுகாதார துறையினர் சோதனை

கடலூர்:

              மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் கலப்பட பொருள் விற்கப்படுகிறதா என சுகாதார துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் மீரா உத்தரவின் பேரில், வடலூர் வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் வடலூர் பேரூராட்சி பகுதியிலும், கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் புவனகிரி பகுதியிலும், சுகாதார மேற்பார்வையாளர் ராமதாஸ் தலைமையில் பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளிலும்,  காடாம்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மலர்விழி தலைமையிலான குழுவினர் அங்குசெட்டிப்பாளையம், எல்.என்.புரம், பூங்குணம் பகுதிகளிலும், ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அறிவொளி தலைமையிலான குழுவினர் புதுப் பேட்டை பேரூராட்சி பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். 
 
                         அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ள துவரை, கடலை, உளுந்து, கேசரி பருப்பு உள்ளிட்டவைகளில் கலப்படம் உள்ளதா என சோதனை செய்தனர். சில கடைகளில் பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளை மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கடை உரிமையாளர்களை அறிவுறுத் தினர்.

Read more »

ஊனமுற்றோருக்கு கடன் வழங்க ஆலோசனை முகாம்


சிதம்பரம்: 

         சிதம்பரத்தில் ஊனமுற்றோர்க்கு வங்கி கடன் வழங்குவது தொடர்பான முகாம்  நடத்தப்பட்டது.
 
                     தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் மூலமாக ஊனமுற்ற நபர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் ஊனமுற்றோர் அலுவலகம் மூலம் சிதம்பரத்தில் முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மிருணாளினி தலைமை தாங்கினார். மாவட்ட ஊனமுற்றோர் நல அலுவலர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். மத்திய வங்கி உதவி பொதுமேலாளர் மோகன் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பேசி விண்ணப் பங்களை வழங்கினார். துணைப்பதிவாளர் இளஞ்செழியன், மேலாளர் சீனுவாசன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.

Read more »

கிள்ளை ரயில் நிலையத்தில் தண்டவாளம் சீரமைப்பு பணி


கிள்ளை: 

              சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையத்தில் தண்டவாளம் சீரமைப்பு பணி நடந்தது.

                 விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்துள்ள நிலையில் பயணிகள் ரயில் இயக்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு கடந்த 27ம் தேதி தண்டவாளங்கள், ரயில் நிலைய கட்டடங்கள், கிராசிங் பாயிண்ட்கள், பாலங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்தார்.ரயில்வே சாலையில் குறைந்த அளவில் ஜல்லிகள் கொட்டப்பட்டும், சில இடங்களில் ஜல்லிகளை பரப்பாமல் ஆங்காங்கே திட்டுத்திட்டாக கொட்டப் பட்டிருந்தது. கூடுதல் ஜல்லிகளை தண்டவாளங்களின் சிலிப்பர் கட்டைகளுக்கிடையில் கொட்டி நிரப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று கிள்ளை ரயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகளுக்கு இடையில் ஜல்லிகளை கொட்டி தண்டவாளம் சீரமைப்பு பணி நடந்தது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior