உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

பாழடைந்து கிடக்கும் மணம்தவிழ்ந்தபுத்தூர் சுகாதார நிலையம்

பண்ருட்டி:

                   பாழடைந்து வரும் துணை சுகாதார நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் என மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர். பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சியில் 30 ஆண்டிற்கு முன் துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம் மணம்தவிழ்ந்தபுத்தூர், ஆனத்தூர், நத்தம், பொன்னங்குப்பம், சேமக்கோட்டை, ராயர்பாளையம், பலாப்பட்டு, மேல்அருங்குணம் கிராம மக்கள் மருத்துவ சேவை பெற்று வந்தனர்.

                   இந்நிலையில் சுகாதார நிலையம் பராமரிப்பின்றி பழுதடைந்தது. இதனால் ஊழியர்கள் இங்கு வர அஞ்சினர். இன் காரணாக சுகாதார நிலையம் கடந்த சில ஆண்டாக பயன்பாடின்றி புதர் மண்டி பாழடைந்து கிடக்கிறது. நர்ஸ் ஒருவர் மட்டும் புதன் கிழமை தோறும் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். பிற நாட்களில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் பண்ருட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது. பாழடைந்து கிடக்கும் சுகாதார நிலையத்தை புதுப்பித்து அனைத்து நாட்களிலும் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மாவட்டத்தில் 11 ஆயிரம் ரேஷன் கார்டுகள் நீக்கம் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி


கடலூர்: 

                     கடலூர் மாவட்டத்தில் நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களில் 11 ஆயிரத்து 364 மேல் முறையீடு மனுக்கள் மீது இன்னும் விசாரணை முடிவடையாத நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு இறுதியில் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்து போலி கார்டுகள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அதில் தகுதி உள்ள கார்டுகள் அதிகம் நீக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் வந்ததால், ரேஷன் கார்டு ஆய்வு பணி நிறுத்தப்பட்டது.  மேலும் நீக்கம் செய்த கார்டுகளுக்கு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுத்ததோடு, பொருட்களும் வழங்க உத்தரவிடப்பட்டது.  தேர்தல் முடிந்ததும், மீண்டும் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியும் பணி நடந்தது.  இதில் கடலூர் மாவட் டத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 722 கார்டுகள் போலி என கண்டறியப்பட்டது.

                   இறுதியாக 66 ஆயிரத்து 139 கார்டுகள் நீக்கம் செய்து கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.  இந்த முறையும் ஒரே இடத்தில் பல ஆண்டாக  வசிப்பவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டதால் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.  பாதிக்கப்பட்ட பொது மக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு படையெடுத்து 11 ஆயிரத்து 364 பேர் மேல் முறையீடு செய்துள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் பொருட்கள் வழங்கவில்லை. முறையீடு மனு செய்தவர்கள் தாலுகா  அலுவலகங்களில் சென்று கேட்டால் விசாரணைக்கு வருவார்கள் என கூறுகின்றனர்.   ஆனால் பெரும்பாலான  இடங்களில் விசாரணை செய்யப்படாமல் உள்ளது.  இதனால் ரேஷன் கார்டுகளை கொண்டு பொருட்களை வாங்க  முடியாமல் பொதுமக்கள் தினம், தினம் தாலுகா அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வருவது வேதனையாக உள்ளது.

                        இந்த பிரச்னையில் கலெக்டர் தலையிட்டு உரிய முறையில் விசாரணை நடத்தி தகுதி உள்ள ரேஷன் கார்டுகளுக்கு  பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலம்:

             விருத்தாசலத்தில் மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். விருத்தாசலத்தில் பார் அசோசியேஷன் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் சங்க கூட்டு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. பார் அசோசியேஷன் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ராஜேந் திரன், ரங்கநாதன், ஆனந்தகண்ணன் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில் விருத்தாசலம் மகளிர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் மல்லிகாவின் அதிகார துஷ்பிரயோகத்தை கண் டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, சிதம்பரத்தை சேர்ந்த வக்கீல் பொன்னம்பலம் இறந்ததால் ஒரு நாள் கோர்ட் பணிகளை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. அதன்படி கோர்ட் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior