உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

மாற்று திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

புவனகிரி: 
 
                   கீரப்பாளையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மாற்று திறனுடைய மாணவர்களுக்கு  உபகரணங்கள் வழங்கப்பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் மணிவாசகன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி மாற்று திறனுடைய மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் சுமதி, பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயன் பங்கேற்றனர். சிறப்பு ஆசிரியை கல்பனா நன்றி கூறினார்.

Read more »

கொசு வலை கட்டும் பணி துவக்கம்

நெல்லிக்குப்பம்:

                நெல்லிக்குப்பத்தில் கொசு உற்பத்தியை தடுக்க செப்டிக் டேங்க் காற்றுப் போக்கி குழாயில் வலை கட்டப்பட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதை கட்டுப் படுத்த நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மருந் துகளால் கொசுவை ஒழிக்க முடியாது. கொசு உற்பத்தியை தடுப்பதன் மூலமே கொசு தொல்லையை குறைக்க முடியும். செப்டிக் டேங்க் பைப்பில் வலை கட்டுவதன் மூலம், தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்தாலே 75 சதவீத கொசு உற்பத்தியை தடுக்க முடியும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர். அதைத்தொடர்ந்து நகராட்சி பகுதியில் உள்ள செப்டிக் டேங்க் காற்றுப் போக்கி குழாயில் துப்புரவு பணியாளர்கள் நகராட்சி செலவில் வலையை கட்டி வருகின்றனர். இப்பணியை சேர்மன் கெய்க் வாட்பாபு, கமிஷனர் உமாமகேஸ்வரி, சுகாதார அலுவலர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டனர்.

Read more »

வளர்ச்சி பணிகளை திட்ட அலுவலர் ஆய்வு

கிள்ளை:

                     பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட திட்ட அலுவலர் ஆய்வு செய்தார். பரங்கிப்பேட்டை ஒன்றியம் மடுவங்கரையில் பாரத பிரதமர் கிராம சாலை திட்டத்தில் 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் சாலை, நக்கரவந்தன்குடி ஊராட்சியில் நடக்கும் பல்வேறு பணிகளை  மாவட்ட திட்ட அலுவலர் ராஜஸ்ரீ ஆய்வு செய்து, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார். அப்போது சேர்மன் முத்துபெருமாள், துணை சேர்மன் முடிவண்ணன், பி.டி.ஓ.,க்கள்  சுப்ரமணியன், சுலோச்சனா, ஊராட்சி தலைவர்கள் சண்முகசுந்தரி, குலசேகர், துணைத் தலைவர்கள் முத்துக்குமாரசாமி, ராதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior