உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

கவுன்சிலர் தம்பியை கொல்ல முயற்சி: சுமோ கார், வீச்சரிவாள் பறிமுதல்


கடலூர் : 

              முன் விரோதம் காரணமாக தி.மு.க., கவுன்சிலரின் தம்பியை கொலை செய்ய வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர்.

                 கடலூர் முதுநகரில் கடந்த டிசம்பர் மாதம் நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் பனங்காட்டு காலனியைச் சேர்ந்த சிலர் சோனங்குப்பம் வாலிபரை வெட்டி கொலை செய்தனர். இப்பிரச்னையில் இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்தது. சோனங்குப்பம் தி.மு.க., கவுன்சிலரின் தம்பி டிரைவர் பாபு (எ)  விஜயகோபால்(35).  இவருக்கும் பனங்காட்டு காலனி சுமோ டிரைவர் பாலு என்பவருக்கும் முதுநகர் துறைமுகம் வேன் ஸ்டேண்டில் நேற்று காலை வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாலு தன் நண்பர்கள் டிவேல், அருள், சந்திரமோகன் ஆகியோருடன் (டி.என் 20 ஏ.ஜே 2511) சுமோவில் வந்து பாபுவிடம் மீண்டும் தகராறு செய்தனர்.

                   அப்போது அங்கு வந்த தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஏட்டு சுதர்சனம் ஆகியோரை பார்த்ததும் பாலு தன் நண்பர்களுடன் தப்பிச்சென்றார்.  அவர்கள் விட்டுச்சென்ற இரண்டு வீச்சரிவாள்  மற்றும் சுமோ காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., ஸ்டாலின், முதுநகர் இன்ஸ்பெக்டர் கோபால், சப் இன்ஸ் பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாபு புகாரின் பேரில் முதுநகர் போலீசார் பாலு, வடிவேல், அருள், சந்திரமோகன் ஆகியோரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் சோனங் குப்பத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் முதுநகர் போலீஸ் நிலையம் முன் குவிந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது.

downlaod this page as pdf

Read more »

ஆசிரியர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை

கடலூர் : 

                 கடலூரில் பள்ளி ஆசிரியர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.கடலூர் கம்மியம் பேட்டை கெடிலம் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(45). செயின்ட் ஜோசப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ராமலிங்கம் வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு ராமலிங்கம் மது அருந்திவிட்டு தூங்கக் சென்றுள்ளதாக தெரிகிறது.  நேற்று காலை வெகு நேரமாகியும் வகுப்புக்கு வராததால் சந்தேகமடைந்த சக ஆசிரியர்கள் அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். மொபைல் அழைப் புக்கு பதில் இல்லாததை கண்டு சந்தேகமடைந்து ஆசிரியர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்த  கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில்  திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சந்தேக பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




Downlaod This Page as PDF

Read more »

திட்டக்குடி அருகே மரம் விழுந்ததில் டிராபிக் ஜாம்

 திட்டக்குடி : 

                   திட்டக்குடி அருகே சாலையோரம் நின்றிருந்த பழமையான புளிய மரம் முறிந்து விழுந்ததால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் மஞ்சமுத்தான் கோவில் அருகில் சாலையோரம் நின்றிருந்த பழமையான புளிய மரம் நேற்று மாலை திடீரென முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திட்டக்குடி சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், விஜய்சங்கர் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று கிராம மக்களுடன் இணைந்து மரத்தினை வெட்டி அகற்றினர். நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் நேற்று மாலை 6.30 முதல் 7.15 வரை விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Downlaod This Page as PDF

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior