உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 06, 2010

சாலை அகலப்படுத்த தோண்டிய பள்ளத்தில் குடிநீர் பிடிக்கும் அவலம்

 கிள்ளை: 

                       சிதம்பரம் அருகே வி.வி.எஸ். நகரில் சாலை அகலப்படுத்த தோண்டிய பள்ளம் சரி செய்யாததால் குடிநீர் பைப்லைன் துண்டிக்கப்பட்டதால் பள்ளத்தில் இறங்கி தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. சிதம்பரம் அருகே அ.மண்டபத்தில் இருந்து கிள்ளை பிச்சாவரம் வரை சாலையை அகலப்படுத்தி, வடிகால் கட்டுவதற்காக சாலை அபிவிருத்தி திட்டத் தின் கீழ் 2 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் பணிகள் துவங்கியது. பணிகளை விரைந்து முடிக்காததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருவதுடன் சாலையை அகலப்படுத்த தோண்டிய பள்ளத்தில் வி.வி. எஸ். நகரில் இருந்த பைப் லைன் உடைந்தது. இதனால் தண்ணீர் பிடிக்க முடியாத நிலையால் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பள்ளத் தில் இறங்கி தண்ணீர் எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட் டுள்ளது. எனவே விரைவில் சாலையை சரி செய்வதுடன் குடிநீர் பிடிக்கும் வகையில் குழாய் அமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


downlaod this page as pdf

Read more »

தி.மு.க., பிரமுகரை தாக்கி பணம் கொள்ளை: பண்ருட்டியில் மர்ம நபர்கள் கைவரிசை


பண்ருட்டி: 

                    பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தி.மு.க., பிரமுகர் மீது மிளகாய் பொடி தூவி தாக்கி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

                   பண்ருட்டி அடுத்த கீழிருப்பைச் சேர்ந்த தி.மு.க., கிளைக் கழக செயலர் பாலமுருகன் (45). இவரிடம் புதுப்பேட்டை ராஜேந்திரன் பணம் கடன் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பித் தராததால் பாலமுருகன் கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு பாலமுருகனுக்கு சாதகமாக இருந்தும் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பஞ்சாயத்து மூலம் பேசி ஒரு லட்சத்து 65 ரூபாயை ராஜேந்திரனிடம் இருந்து பாலமுருகன் பெற்றார். பணத்துடன் மாலை 3.30 மணிக்கு கீழிருப்பு கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாளிகம் பட்டு - கிழிருப் புக்கிடையே உள்ள பிரமினார் கோவில் அருகில் வந்தபோது முந்திரி தோப் பில் மறைந் திருந்த மர்ம நபர்கள் பாலமுருகன் மீது மிளகாய் பொடி தூவி கொலை செய்யும் நோக்கத் தோடு தாக்கி கழுத்தை நெரித்தனர். சுயநினைவிழந்த பாலமுருகனிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து தப்பியோடினர். பலத்த காயத்துடன் விழுந்து கிடந்த பாலமுருகனை அவ்வழியாக சென்ற லாரி டிரைவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பாலமுருகன் கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து பாலமுருகனை தாக்கி வழிபறி கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.


downlaod this page as pdf

Read more »

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் முக்காடு அணிந்து போராட்டம்


பண்ருட்டி: 

                 சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் முக்காடு அணிந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது.

                   தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அண்ணாகிராம ஒன்றியம் சார்பில் சத்துணவு ஊழியர் அனைவரையும் முழுநேர அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என்பது உள் ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்காடு போட்டு ஒப்பாரி வைக்கும் போராட்டம் பண்ருட்டி தாலுக்கா அலுவலகம் முன் நடந்தது. போராட்டத்திற்கு தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். மாநில துணை லைவர் ராமநாதன், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

கடலூர்: 

                      கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட் டத்திற்கு ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். தலைவர்கள் யசோதை, வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் மோகனசுந்தரம், கிருஷ்ணவேணி, ராஜ்மோகன், மாவட்ட தலைவர் ரங்கசாமி, துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், மல்லிகா ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். விருத்தாசலம்: பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், சின்னசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அன்பழகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஒன் றிய தலைவர் கணபதி, ராமச்சந்திரன், செல்வராஜ், கோவிந் தராஜ், பெரியசாமி, நாட்டு துரை, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior