உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

பயன்பாட்டிற்கு வராத புறவழிச்சாலையில் செல்லும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துகள்

 பரங்கிப்பேட்டை: 

                     சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் வெள்ளாற்று பாலம், சாலை பணி முடிவடையாத நிலையில் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சிதம்பரம் அடுத்த பு.முட்லூரில் இருந்து வண்டிகேட் வழியாக கடவாச்சேரிக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. பு.முட்லூரில் இருந்து சி.முட்லூரை இணைக்கும் வகையில் வெள் ளாற்றில் புதியதாக பாலம் கட்டப்பட்டுள்ளது.

                   சிதம்பரம் வண்டிகேட்டில் இருந்து சி.முட்லூர் வரை சாலைப்பணி ஓரளவு முடிந்துள்ளது. வெள்ளாற்று பாலத்தை இணைக்கும் வகையில் இரவு பகலாக பணிகள் நடக்கிறது. பாலம் கட்டும் பணி மட்டுமே முடிந்து சாலை அமைக்கும் பணி முடியாத நிலையில் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இவ்வழியே சென்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி பகுதியில் இருந்து சென்னைக்கு செல்லும் அரசு விரைவு பஸ் சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக செல்லாமல் வெள்ளாற்று பாலத்தின் வழியாக பணி முழுமை பெறாத சாலை வழியே செல்கிறது. தற்போது தனியார் பஸ் டிரைவர்கள் இந்த வழியை பயன்படுத்துகின்றனர். இதனால் பெரும்பாலான பஸ்கள் புவனகிரிக்கு செல்லாமல் புறவழிச்சாலை வழியாக சிதம்பரம் செல்கிறது.

                         இதன் காரணமாக பயணிகள் சிதம்பரம் சென்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து வரும் நிலை ஏற்படுகிறது. மேலும் புவனகிரி வழியாக பஸ் செல்லாது என கூறி பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி பணிகள் முடிந்தும் முடியாத புறவழிசாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளும் வேகமாக செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை போக்க புறவழிச்சாலை பணிகள் முடியும் வரை அந்த சாலையை இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு முழுமையாக அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

படுமோசமான சாலையால் விபத்துக்கள் அதிகரிப்பு


சேத்தியாத்தோப்பு:

                   சேத்தியாத்தோப்பு கானூர் சாலை சீர்கேடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
                  சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் கானூர் வழிச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. குமாரக்குடியிலிருந்து கானூர் வரை சாலையில் பெரும்பகுதி சேதமடைந்து மெகா பள்ளங் கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதோடு அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


downlaod this page as pdf

Read more »

ரூ.1.5 லட்சம் கஞ்சா பதுக்கல் பண்ருட்டியில் இரு பெண்கள் கைது


பண்ருட்டி: 

                    பண்ருட்டியில் வீட்டு தோட்டத்தில் ஒன்னரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்தரை கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். திருச்சியிலிருந்து கஞ்சா கடத்தி வந்து பண்ருட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் பண்ருட்டி பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

                            அதில் கிடைத்த தகவலின் பேரில் பண்ருட்டி ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த சிவஞானம் மனைவி விஜயா (55), அம்பேத்கர் நகரை சேர்ந்த குத்புதீன் மனைவி சந்திரா (40) ஆகியோர் வீடுகளில் நேற்று சோதனை நடத்தினர். அதில் வீட்டில் பூஜை அறையில் சிறு, சிறு கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய சோதனையில் வீட்டின் தோட்டத்தில் பாரலில் பள்ளம் தோண்டி புதைத்து வைத்திருந்த ஐந்தரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒன்னரை லட்சம் ரூபாயாகும். விஜயா மற்றும் சந்திராவை கைது செய்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior