உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

10 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களும்...செயல்படுமா!: கடலூர் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு


சிதம்பரம்: 

                        கடலூர் மாவட்டத்தில் 10 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இருந்தும் இரண்டு மட்டுமே இயங்குவதால் விவசாயிகள் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், வேர்க்கடலை, பயறு வகைகள் உள்ளிட்ட பொருட்களை சிரமம் இன்றி நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும், இடைத்தரகர்கள் இன்றி வாங்கி செல்ல வசதியாக வேளாண் துறை சார்பில் ஒழுங்கு முறை விற்பனை கூடங் கள் திறக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் கடலூர் முதுநகர், விருத்தாசலம், பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, பெண்ணாடம், தொழுதூர், காட்டுமன்னார்கோவில் ஆகிய
 
                        10 இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இயங்கி வருகிறது. ஆனால் தற்போது விருத்தாசலம், பண்ருட்டியில் முழுமையாகவும், கடலூர் முதுநகரில் வேர்க்கடலையும், திட்டக்குடியில் சோளம் சீசனில் மட்டுமே செயல்படுகிறது. மற்ற இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் செயல்பாடின்றி பெயரளவில் உள்ளது. காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, சேத்தியாத் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியாபாரிகளே வருவதில்லை. இதனால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

                    உதாரணமாக சிதம்பரத்தில் கடந்த 1963ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி ஒழுங்கு முறை விற்பனை கூடம் துவங்கப்பட்டது. ஆனால் இதன் செயல்பாடு படிப் படியாக குறைந்தது. நேரடி கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொரு பகுதியிலும் திறக்கப்பட் டது ஒரு காரணமாக இருந் தாலும், சொந்த இடத்தில் விற்பனை கூடம், உலர் களம், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பயன் தரும் வகையில் அடிப் படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

                         இதனால் பொருட்கள் வரத்து நின்றதால் சில ஆண்டுகள் மட்டுமே செயல்பட்ட விற்பனை கூடம் கடந்த 35 ஆண்டுகளாக இயங்காமல் பெயர் பலகை மட்டுமே தொங்குகிறது. விற்பனை கூடத் திற்கு வெளியே நடக்கும் வணிகத்திற்கு விற்பனை கட்டணம் வசூல் செய்து, அந்த தொகையை அண்ணா கலையரங்கில் உள்ள இயங்காத உழவர் சந்தைக்கும், அதன் நிர்வாக செலவுகளுக்கும் தற் போது செலவு செய்து வருவதாக வர்த்தக சங்கத்தினரும், விவசாயிகளும் புலம்புகின்றனர். சிதம்பரம் அண்ணா கலையரங்கில் கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி உழவர் சந்தை, 12 லட்சம் ரூபாய் செலவில் ஒழுங்கு முறை விற்பனை கூட கிடங்கு, மற்றும் 3 லட்சம் ரூபாய் செலவில் உலர்களம் ஆகியவற்றிக்கு அப்போதை வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அடிக்கல் நாட்டினார். ஆனால் அனைத்தும் கல்வெட்டாக காட்சியளிக்கிறது.

                         வேளாண் விற்பனை கூடத்தில் அரசு அறிவித்த 16 வகையான உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய குறைந்தது 5 ஏக்கர் இடம் தேவை. ஆனால் தற்போது எளிதில் அழுகக்கூடிய காய்கறி, பழங் கள் என மொத்தம் 103 வகையான பொருட்களை விற்பனை செய்ய வேளாண் துறை அறிவித் துள்ளது. இதற்காக குறைந் தது 10 ஏக்கர் இடமாவது தேவைப்படும். ஏற்கனவே சொந்த இடமின்றி, இடப்பற்றாக்குறையால் இயங்காமல் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு இந்த அறிவிப்பு எப்படி பொருந்தப் போகிறது என்பது தான் புரியாத புதிர். மேலும், ஒழுங்கு முறை விற்பனை கூட அலுவலகம் இயங்கி வரும் அண்ணா கலையரங்கம் சிதம்பரம் நகரின் விஸ்தாரமான இடமாகும். இந்த இடத்தில்தான் பொதுக் கூட்டங்கள் நடத்தப் பட்டன. ஆனால் இங்கு செயல்படாத உழவர் சந்தை, திறக்கப்படாத எம்.எல்.ஏ., அலுவலகம், இயங்காத ஒழுங்கு முறை விற்பனை கூடம், வாகன நிறுத்தம் என அனைத்தும் செயல்பாடாதநிலையே காணப்படுகிறது. வேளாண் துறை, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒழுங்கு முறை விற்பனை கூடங்களும் இயங்கும் வகையில் நிரந் தர வசதிகளுடன் ஒழுங்கு முறை விற்பனை கூடங் கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


downlaod this page as pdf

Read more »

திட்டக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு மின் தடை நேரத்தில் மாற்றம் தேவை


திட்டக்குடி: 

                       திட்டக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மின்நிறுத்த நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். திட்டக்குடி தாலுக்காவின் தலைமையிடமான திட்டக்குடி நகர்ப்புறத்திலுள்ள 18 வார்டுகளிலும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு எதிர் புறம் 4.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட் டுள்ளது. இது தவிர இளமங்கலத்தில் 30 ஆயிரம் மற்றும் ஒரு லட்சத்திலும், பெரியார் நகரில் ஒரு லட்சத்திலும், வதிஷ்டபுரத்தில் 2.5 லட்சத்திலும், கோழியூரில் ஒரு லட்சத்திலும் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மோட்டார் இணைப்புடன் இயங்கி வருகின்றன. இந்நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் காலை 6 முதல் 8 மணி வரைக்கும் மாலை 4 முதல் 5 மணி வரைக்கும் முறையே தண்ணீர் விநியோகிக்கப்பட்டு, குடிநீர் சப்ளை வழங்கப்பட்டு வருகின்றது.

                        இதில் திட்டக்குடி நகர்ப்புறத்திலுள்ள 4.5 லட் சம் கொள்ளளவுடைய நீர்த் தொட்டிக்கு மட்டும் ராட் சத ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு, மின்இணைப்பு இல்லாத நேரத்திலும் தண்ணீர் வழங்கப்படுகிறது. மற்ற குடிநீர் தொட்டிகள் ஜெனரேட்டர் வசதியின்றி மின்இணைப்பு இல்லாத நேரத்தில் தண்ணீரை மேலேற்ற முடியாமல், உரிய நேரத்தில் குடிநீர் சப்ளை வழங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், திட்டக்குடியில் மதியம் 12 முதல் 3 மணி வரையிலும் மின்இணைப்பு துண்டிக்கப்படுவதால், மாலை வேளையில் நகர்ப்புற மக்களுக்கே குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மின்துண்டிப்பு நேரத்தை காலை 8 முதல் 11 மணி வரை மாற்றியமைத்தால் காலை மற்றும் மாலை வேளைகளில் தடையின்றி குடிநீர் சப்ளை வழங்க முடியும்.


downlaod this page as pdf

Read more »

மின்தடை அதிகரிக்கும் வேளையில் பகலிலும் எரியுது தெரு விளக்குகள்

 நெல்லிக்குப்பம்: 

                            பகலிலும் மின் விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாகிறது. தமிழகம் முழுவதும் மின்சார பற்றாக்குறை நிலவி வருகிறது. மின் சிக்கன நடவடிக்கையாக தினமும் மூன்று மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நெல்லிக்குப்பம் ஆலைரோடு சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. அதேப் போன்று பண்ருட்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை லிங்க் ரோடு சந்திப்பில் தொடர்ந்து பகலிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதிகாரிகள் கடைபிடிப்பதாக தெரியவில்லை.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior