உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

கால்நடை மருத்துவமனை கோரி சாலை மறியல் செய்ய முடிவு


புவனகிரி: 

              கால்நடை மருத்துவமனை கோரி சாலை மறியல் செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
 
இதுகுறித்து மேலமூங்கிலடி ஊராட்சி தலைவர் செல்வி சதானந்தம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 
   
                       புவனகிரி அடுத்த மேலமூங்கிலடி ஊராட்சியில் 650க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அவர்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு திடீரென நோய் தாக்கினால் அப்பகுதியினர் ஆறு கிலோ மீட்டர் தூரம் உள்ள சி.முட்லூர் மற்றும் புவனகிரி கால் நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மழைக்காலத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டால் அவர்கள் கால்நடைகளை அழைத்து செல்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலமூங்கிலடியில் கால்நடை மருத்துவமனை கோரி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவமனை அமைக்க கோரி பொது மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

downlaod this page as pdf

Read more »

மின்னல் எய்ட்ஸ் தடுப்பு சங்கம் முப்பெரும் விழா


சிதம்பரம்: 

                          சிதம்பரத்தில் புவனகிரி மின்னல் எய்ட்ஸ் தடுப்பு சங்கம், சென்னை தென்னிந்திய எய்ட்ஸ் செயல் திட்டம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டு,குழந்தைகளுக்கான கட்டாய கல்வி சட்டம் மற்றும் மகளிர் தினம் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மின்னல் எய்ட்ஸ் தடுப்பு சங்கத்தின் செயளாளர் கண்ணதாசன் வரவேற்றார். சங்க உறுப்பினர் செல்வராஜ் திட்டம் குறித்துப் பேசினார். அண்ணாமலை பல்கலைகழக பேராசிரியை பிரியா, அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலையப்பள்ளி தலைமையாசிரியை ராணி, குடந்தை லோட்டஸ் சங்க இயக்குனர் முத்துக்குமார், மோகன் தாஸ், வாஞ்சிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவிகளின் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. சங்க செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

downlaod this page as pdf

Read more »

போக்குவரத்துக்கு லாயக்கற்ற கொடியம்பாளையம் சாலை

 கிள்ளை: 

                     தெற்கு பிச்சாவரத்தில் இருந்து கொடியம்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக் குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரத்தில் இருந்து நாகை மாவட்டம் கொடியம்பாளையம் மீனவ கிராமம் 6 கி.மீ தொலைவில் உள்ளது.

                    தற்போது கடலூர் மாவட்டத்துடன் நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் 10.5 கோடி ரூபாய் செலவில் உப்பனாற்றில் உயர் மட்டப்பாலம் கட்டப்பட்டது. காட்டுமன்னார்கோவிலில் நடந்த விழாவில் துணை முதல் வர் ஸ்டாலின் பாலத்தை திறந்து வைத்தார். கடந்த மாதம் முதல் சிதம்பரத்திலிருந்து கொடியம்பாளையத்திற்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொடியம்பாளையம் சாலை மிகவும் குறுகலாகவும், கற்கள் பெயர்ந்தும் கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பஸ் வந்தால் இரு சக்கர வாகனங்களில் செல் பவர்கள் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. எனவே, இப்பகுதி சாலையை அகலப்படுத்தி தார் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior