உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் 12 ஊராட்சிகளில் 47,221 வீடுகள் கணக்கெடுப்பு கலெக்டர் சீத்தாராமன் தகவல்

 கடலூர்: 

                கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 19 ஊராட்களில் 47,221 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித் துள்ளார். 

இதுகுறித்து கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு : 

                     கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்து வருகிறது. இதற்கான ஆய்வுக் கூட்டம் கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் கணேசன் மற்றும் சப் கலெக்டர்கள், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள், தாசில்தார்கள், பி.டி.ஓ.,க்கள் உள்பட 80 பேர் பங்கேற்றனர்.

                         கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் சந்தேகங்கள், பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் துல்லியமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய கலெக்டர் 'இத்திட்டம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் உள்ள 405 கிராமங்களில் நடக்கிறது. இதுவரை 47,221 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 19 கிராமங்களில் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.மக்கள் விழிப்புடன் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கணக்கெடுக்கும் பணிக்குழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என பேசினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

downlaod this page as pdf

Read more »

இன்ஜினியரிங் மாணவர் மீது இளம்பெண் கிராமத்தினருடன் எஸ்.பி.,யிடம் புகார்


கடலூர்: 

                    கடலூர் அருகே இளம் பெண்ணை ஏற்றியதாக இன்ஜினியரிங் படித்துவரும் வாலிபர் மீது பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கிராமத்தினர் எஸ்.பி.,யிடம் புகார் செய்தனர். கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் மணிகண்டமூர்த்தி (25). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் தங்கராசு மகள் புனிதரசி (24). இவர் வீட்டில் இருந்த படி பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மணிகண்டமூர்த்தியும் புனிதரசியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் புனிதரசியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்து கூறி மணிண்டன் அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது புனிதரசியின் ஏழ்மை நிலையை காரணம் காட்டி திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால் ஏமாற் றமடைந்த புனிதரசி நியாயம் கிடைக்கவேண்டி பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த சுய உதவிக்குழுக்களை சேர்த்த பெண் கள் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டவர்களுடன் எஸ்.பி., அஸ்வின் கோட்னீசை சந்தித்து புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத் தியதைத் தொடர்ந்து புனிதரசி உள்ளிட்டோர் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் மணிகண்ட மூர்த்தி மீது புகார் செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

ஆலோசனை கூட்டம்

 சேத்தியாத்தோப்பு: 

                       எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்தது. பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் சிட்டிபாபு தலைமை தாங்கினார். தலைவர் தேவதாஸ் படையாண்டவர் முன் னிலை வகித்தார். வீரசோழன் வரவேற்றார். இளவரசன், டாக்டர் பன் னீர்செல்வம், பாலமுருகன், கோபாலகிருஷ் ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தியின் சிலையை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதப்படுத்தி வரும் ஆலை நிர் வாகத்தை கண்டிப்பது. அவரது முழு உருவச்சிலையை ஆலையின் முன்பு திறக்க சர்க்ரை துறை ஆணையமும், ஆலை நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு அலுவலர்கள் மற்றும் கரும்பு உதவியாளர்கள் கரும்பு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுப்பதை கண்காணிக்க தனி குழு அமைக்க வேண்டும் உட் பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior