உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

 கடலூர் : 

                 தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவரை கைது செய்யக்கோரி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடலூர் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் நடந்தது. இந்த பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் நரசிம்மனை கடந்த 10ம் தேதி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மணிவாசகம் தாக்கினார். இதுகுறித்து வடலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்தும், மணிவாசகத்தை உடன் கைது செய்யக்கோரி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று மாலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேந்திரன், சண்முகம், காளமேகம் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், வங்கி ஊழியர் சம்மேளன மருதவாணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட பொருளாளர் நரசிம்மன் நன்றி கூறினார்.

download this page as pdf

Read more »

மின் கம்பத்தில் டிப்பர் லாரி மோதல் கடலூர் 2 மணி நேரம் இருளில் மூழ்கியது

கடலூர் : 
                         டிப்பர் லாரி மோதி மின் கம்பம் முறிந்து விழுந்ததால் கடலூர் நகரின் ஒரு பகுதியில் 2 மணி நேரம் இருளில் மூழ்கியது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கான்வென்ட் தெருவில் பாதாள சாக்கடைக்காக 'மேன் ஹோல்' அமைக்க சாலை நடுவில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையோரமாக சென்று வந்தன. அவ் வழியே நேற்று இரவு 7.30 மணிக்கு டிப்பர் லாரி வந்தது. பள்ளம் தோண் டிய பகுதியில் ஒதுங்கி செல்ல முயன்றபோது மின் கம்பத்தில் லாரியின் 'கேபின்' மோதியது. அதில் மின்கம்பம் முறிந்து அந்தரத்தில் தொங்கியது. அதிர்ஷ்டவசமாக மின் கம்பிகள் அறுந்து விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடன் திருப்பாதிரிப்புலியூர் மின்வாரிய இளமின் பொறியாளர் ஸ்ரீதர் தலைமையில் ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் கான்வென்ட் தெரு, நவநீதம் நகர், ரங்கநாதன் நகர், விஜயலட்சுமி நகர், அக்கிள் நாயுடு தெரு, சஞ்சீவி நாயுடு தெரு, போடி செட்டித் தெரு, கம்மியம் பேட்டை, தங்கராஜ் நகர், சன்னதி தெரு, லாரன்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. பின்னர் மின் கம்பத்திற்கு முட்டு கொடுத்து குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு பிற பகுதிகளுக்கு இரவு 9.30 மணிக்கு மின் இணைப்பு வழங்கினர்.

downlaod this page as pdf

Read more »

பொக்லைன் மீது மோட்டார் பைக் மோதல்: வாலிபர் பலி

கடலூர் : 

                     நின்றிருந்த பொக்லைனில் மோதி மோட்டார் பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார். பண்ருட்டி அடுத்த கீழூர் காலனியைச் சேர்ந் தவர்கள் ரமேஷ் (30). சத்தியசீலன் (30). இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் பைக்கில் நடுவீரப்பட்டிற்கு சென்று வீடு திரும்பினர். அப்போது சத்திரம் அருகே சாலையில் நின்றிருந்த பொக்லைன் மீது மோட்டார் பைக் மோதியது. இதில் ரமேஷ் இறந்தார். காயமடைந்த சத்திய சீலன் சிகிச்சை பெற்று வருகிறார்.

download this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior