உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

ஊராட்சி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

 கடலூர்: 

                       ஊராட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து 'செக் புக்' உள்ளிட்ட ஆவணங்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வடலூர் அடுத்த வடக்குத்து ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்ய இருந்தனர். அதனையொட்டி ஊராட்சி உதவியாளர் ஜெய்சங்கர் கடந்த 16ம் தேதி இரவு ஆவணங்களை சரிபார்த்து வைத்து விட்டு நள்ளிரவிற்கு பிறகு அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் (17ம் தேதி) காலை வந்து பார்த்த போது பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது  ஊராட்சி படிவங்கள், தீர்மான நோட், அஜென்டா, செக் புக், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து ஊராட்சி உதவியாளர் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு  பதிந்து விசாரித்து வருகின்றனர்.  ஊராட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஆவணங்களை மட்டுமே திருடிச் சென்றிருப்பது அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

download this page as pdf

Read more »

தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு : மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

ஸ்ரீமுஷ்ணம்: 

                     வீட்டில் தூங்கிய பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த எம்.பி. அக்ரகாரத்தை சேர்ந்தவர் சரவணன். வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி ஞானம்மாள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் பின் கதவை திறந்துக் கொண்டு மர்ம ஆசாமிகள் இருவர் வீட்டினுள் நுழைந்தனர். இவர்களை கண்டு திடுக்கிட்ட ஞானாம்மாள் கூச்சலிட்டார். உடன் மர்ம ஆசாமிகள் இருவரும் ஞானாம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள எட்டரை சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். ஞானாம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம ஆசாமிகள் தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவத்திற்கு முன்பாக ஞானம்மாள் வீட் டிற்கு அருகில் உள்ள சின்னமனி என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 'டிரங்' பெட்டியை தூக்கிச் சென்று அருகில் உள்ள கரும்பு வயலில் வைத்து உடைத்து ஏதேனும் நகைகள் உள்ளதா என தேடியுள்ளனர். பெட் டியில் துணிகள் மற்றும் முக்கிய பத்திரங்கள் மட் டும் இருந்ததால் பெட் டியை அப்படியே விட்டுச் சென்றனர். 

                       தகவல் அறிந்த ஸ்ரீமுஷ் ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப் பட்டு சின்னமணி வீட்டில் இருந்த டிரங் பெட்டில் இருந்து மோப்பம் பிடித்து கரும்பு வயல் வழியாக சரவணன் வீட்டிற்கு வந்து ஞானம்மாள் தூங்கி கொண்டிருந்த இடம் வரை சென் றது. பின்னர் வெளியே வந்து மெயின் ரோடு வழியாக சாத்தமங்கலம் கிராமத்திற்கு செல்லும் பெலாந்துறை வாய்க் கால் கரையில் சிறிது தூரம் சென்று நின்றது.  இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக் குப் பதிந்து மர்ம நபர் களை தேடிவருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

இரு பிரிவினரிடையே மோதல்: ஆர்.டி.ஓ., விசாரணை

 நடுவீரப்பட்டு: 

                       நடுவீரப்பட்டு அருகே இரு பிரிவினரிடையே ஏற் பட்ட மோதல் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே பெத்தாங்குப்பத்திற்கும், வானமாதேவிக்குமிடையே உள்ள  சாலையில் பொது இடத்தில் கடந்த 16ம் தேதி குறிப்பிட்ட ஜாதியை குறித்து மர்ம ஆசாமிகள் சிலர் ஆபாசமாக திட்டி  எழுதியிருந்தனர். இதனால் பெத்தாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் வானமாதேவி காலனி தரப்பினரிடையே  மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
                      இந்நிலையில் நேற்று பெத்தாங்குப்பத்தை சேர்ந்த மலைவாசன் தனது வயலில் வேலை செய்வதற்காக வானமாதேவி காலனிக்கு ஆள் கூப்பிடுவதற்கு சென்றார். அவரை காலனியைச் சேர்ந்த சேட்டு, சுரேஷ், திருநாவுக்கரசு ஆகியோர் வழி மறித்து தாக்கினர். தகவல் அறிந்த பெத்தாங்குப்பம் கிராம மக்கள் வானமாதேவி காலனிக்கு சென்று தகராறு செய்தனர். இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வானமாதேவி காலனியை சேர்ந்த அய் யாவு, ஆறுமுகம், நாவப்பன் உள்ளிட்ட 10 பேர் மீதும், பெத்தாங்குப் பத்தை சேர்ந்த சின்னதுரை, கலியன், குணசேகரன் உள்ளிட்ட 10 பேர் மீதும் தனித்தனியே வழக்கு பதிந்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

download this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior