உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

கடலூரில் தீ விபத்து கூரை வீடு எரிந்து சேதம்

 கடலூர்: 

                   கடலூரில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. கடலூர் வண்டிப்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நேற்று காலை வீட்டில் ண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்தபோது அருகில் இருந்த துணியில் தீப்பிடித்து, கூரைக்கும் தீ பரவியது. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருந்தும் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரித்து வருகின்றன

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்


கடலூர்:

                    விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ., சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ., மாவட்ட அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருட்களை களவாடிச் சென்ற சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் விலை வாசி உயர்வை கண்டித்து பா.ஜ., சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் எழிலரசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட நிர்வாக குழு குணா, முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ஆதவன், விவசாய அணி கண்ணன், பொருளா ளர் ராஜசேகர், சுகுமாறன், செல்வ குமார், உட்பட பலர் பங்கேற்றனர். நகர அமைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

 கடலூர்: 

                 கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி துறை, தனியார் தொழிற் பயிற்சி பள்ளிகளுக்கிடையே நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கடலூர் மாவட்ட வேலைவய்ப்பு பயிற்சி துறை மற்றும் தனியார் தொழிற் பயிற்சி பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் செயின்ட் ஜோசப் ஐ.டி.ஐ., முதல்வர் எட்வர்டு ஜெயக்குமார் வரவேற்றார். மகாலட்சுமி ஐ.டி.ஐ., தாளாளர் ரவி, ஆர்.கே., ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் பள்ளி தாளாளர் முகுந்தன் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பரிசுகள் வழங்கினார். முருகவேல் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior