உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

வெலிங்டன் ஏரிக்குள் புதைந்த கோவில் வளர்வதாக வதந்தி

 திட்டக்குடி: 

                  திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்குள் பல ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த கோவில் கோபுரம் வளர்வதாக ஏற்பட்ட வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரி உள்ளது. இதன் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவை சேர்ந்த 54 ஆயிரத்து 89 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. 29 அடி வரை நீர்ப்பிடிப்பு செய் யப்பட்ட ஏரியில், தற்போது 800 மீட்டர் வரையிலான வலுவிழந்த கரைப்பகுதியை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

                   இந்நிலையில் ஏரிக்குள் புதைந்து இருந்த நகராயி சுவாமி கோவில் திடீரென வளர்வதாக கிராம மக்களிடையே வதந்தி பரவியது. இதனால் புலிவலம், கீழ்ச்செருவாய், ஐவனூர் கிராம மக்கள் சூடம், ஊதுபத்தி ஏற்றி வழிபட்டு சென்றனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இன்றைய வெலிங்டன் ஏரி, பல ஆண்டுகளுக்கு முன் புலிவலம் கிராமமாக இருந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நீர்த்தேக்கமாக மாற்றப் பட்டதால், கிராம மக்கள் இடம் பெயர்ந்தனர். இதனால் இங்கிருந்த கோவில் நீரில் மூழ்கி பயன்பாட்டிற்கு இல்லாமல் போனது. கோபுரத்தை சுற்றி களிமண் பெயர்ந்து வருவதாக வதந்தி பரவியுள் ளதாக கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திட்ட ஒருங்கிணைப்பாளர் மீது தாக்குதல் விருத்தாசலம் அருகே மூன்று பேர் கைது


விருத்தாசலம்: 

                  விருத்தாசலம் அருகே வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒருங்கிணைப்பாளரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அபிஷேகபாக்கம் பகுதி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (34). இவர் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் விருத்தாசலம் அடுத்த சிறுமங்களம் பகுதி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் பகுதிக்குட்பட்ட மன்னம்பாடி காலனியை சேர்ந்த சீனுவாசன் மனைவி அலமேலு (25) வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஊராட்சி குழுவில் இணை செயலாளராக உள்ளார். இதனால் திட்டம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து பாஸ்கர் அடிக்கடி போனிலும், நேரிலும் அலமேலுவிடம் பேசி வந்துள்ளார்.

                   இதை தவறாக நினைத்த அலமேலுவின் கணவர் சீனுவாசன்(32) மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 19 ம் தேதி மன்னம்பாடி கிராமத்திற்கு திட்ட குழுவினருடன் ஆய்வு பணிக்கு வந்த பாஸ்கரை தாக்கினர். இதுகுறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து அலமேலுவின் கணவர் சீனிவாசன் (32) மற்றும் உறவினர் களான ஐயாசாமி மகன் சீனிவாசன் (29), ராகவன் மகன் தமிழரசன்( 28) ஆகிய மூவரையும் கைது செய்தனர். வேல்முருகனை தேடி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூரில் கேட்பாரற்று கிடந்த சினிமா 'ரீல்' பெட்டியால் பரபரப்பு

 கடலூர்: 

                 கடலூர் பீச் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த சினிமா 'ரீல்' பெட்டியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
 
                  கடலூர் பீச் ரோட்டில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை 7 மணிக்கு சினிமா ரீல் பெட்டி ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் அங்கு சென்று பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் 'தமிழ் படம்' சினிமாவின் 'ரீல்'கள் எட்டு பாக்சில் அடுக்கி வைக் கப்பட்டிருந்தன. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரில் இருந்து கடலூர் திருப்பாதிரிபுலியூரில் உள்ள செல்வ விநாயகர் வினியோகஸ்தரின் முகவரிக்கு படப்பெட்டி வந்திருப்பதும், அரசு பஸ்சில் கடலூர் பஸ் நிலையம் வந்த பெட்டியை யாரோ கொண்டு வந்து பீச்ரோட்டில் போட்டதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் ரீல்பெட்டியை கைப்பற்றி வந்து செல்வ விநாயகா வினியோகஸ்தரிடம் ஒப்படைத்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior